உன்ன எனக்கு ரொம்ப புடிச்சு போச்சுடா! – 2 135

” என்னம்மா.. சட்னு வெச்சிட்ட..?” என்றாள்.
” ஆமாடி உங்கப்பன் பாவம்தான்..” எனக் கடுப்புடன் சொன்னாள்.
”இந்த வயசான காலத்துல எதுக்குமா வீண் பிரச்சினை..?”

கோபம் கொப்பளித்த போதும். . மகளோடு பேசப்பிடிக்கவில்லை. மவுனமாக இருந்தாள்.
” ரெண்டு பேரும். . அப்படி எத்தனை வருசம் வாழ்ந்துடப் போறீங்க..? இருக்கற கொஞ்ச காலத்தை.. தனிமைல ஏன் கடத்தனும். ..? ஒன்னா இருந்து சந்தோசமா… ஓட்ட வேண்டியது தான…?”
”…….. ……….”
”என்னமா ஒன்னுமே பேசல.?” என்றாள் யாழினி.
”பேச ஒன்னுமே இல்ல..” என்றாள் மனம் நொந்து.
”ஐயோ. .. அம்மா. . நா உன்ன. .. தப்பா பேசல…”

குறுக்கிட்டுச் சொன்னாள் மிருதுளா.
”கேவலம்.. ஒரு பொண்ணா பொறந்தும்… உனக்கு என்னோட பீலிங்க்ஸ் புரியலையே…! ரொம்ப வருத்தமா இருக்கு..!” என்றுவிட்டு. . உடனே லைனைக் கட் பண்ணிவிட்டாள்.

நீண்ட நேரம் மிருதுளா ஒன்றுமே செய்யவில்லை. சோபாவில் உட்கார்ந்தவள் அப்படியே பிடித்து வைத்த… பிள்ளையார் போல உட்கார்ந்து விட்டாள்.
யாழினி அவளது உணர்ச்சிகளைக் கிளறி விட்டு விட்டாள். உள்ளத்தில் அடைபட்டுக் கிடந்த காயங்கள் எல்லாம்.. ஊமைக் கோபங்களாக மாறிவிட்டது. யாழினியின் பாசம்… கரிசனை எல்லாம். . அவளது அப்பா மேல்தான் என்பது புரிந்தபோது.. மனசு மிகவும் வலித்தது.!

எத்தனை நேரம் எனத் தெரியவில்லை… மறுபடி.. அவள் கைபேசி அழைத்தது. அதைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. தொடர்ந்து விடாமல் ஒலித்துக் கொண்டிருந்தது. கட்டாகி… மறுபடி ஒலித்தது. டிஸ்ப்ளேவைப் பார்க்காமல் எடுத்து காதில் வைத்தாள்.
” ஆ.. சொல்லுடி..” என்றாள்.
” அம்மா. .நா.. விழி..” என்க.. டிஸ்ப்ளேவைப் பார்த்தாள்.
‘விழிநயா ‘தான்.
‘ ஓ… அடுத்தது இவளா..?’
” என்ன. .?” என்றாள் எரிச்சலுடன்.
” என்னமா… என்னாச்சு உனக்கு? போன் பண்ணா… ஒருமாதிரி எரிஞ்சு விழற.. பண்ணது தப்பா. .?” எனக் கேட்க.. சற்று நிதானித்தாள் மிருதுளா.
‘ஒருவேளை இவள் எப்போதும் போல.. சாதாரணமாகப் பண்ணினாளோ.?’
”சரி சொல்லு..! நல்லபடியா போய் சேந்தியா..? பசங்கல்லாம் என்ன பண்றாங்க..?” எனப் பொதுவாகப் பேசினாள்.

மிருதுளா சுரத்தின்றி பேசுவதை உணர்ந்த.. விழிநயா.
” ஏம்மா.. உடம்பு செரியில்லயா? ஒரு மாதிரி டல்லா பேசற..?” எனக் கேட்டாள்.
”இல்ல. . கொஞ்சம் தலவலி.. அதான். .”
” மாத்திரை எடுத்துக்கோ.. நந்தா இல்லியா..?”
” வர்ர நேரம்தான்..”

மேலும் சிறிது நேரம் பொதுவாகவே பேசினாள். ஆனால் அவளது அப்பாவைப் பற்றி ஒரு வார்த்தை கேட்கவில்லை.
” சரி.. மா..! நந்தாவ கேட்டதா சொல்லு… நா அப்பறம் பண்றேன்..” என முடித்துக் கொண்டாள்.. !!

இப்போதெல்லாம் மிருதுளாவின் ஒரே ஆறுதல் .. துணை எல்லாமே.. நந்தா மட்டும்தான். அதில் வெறும் அன்பு.. பாசம் மட்டும் இல்லை. காதலும். . காமமும் ஒருங்கே இணைந்திருந்தது.

அவர்களது வயது வித்தியாசம் ஒரு பொருட்டே இல்லை. அவளது பருவ வயது ஆசைகளும். .. இச்சைகைளும். . திருமணமாகியும்கூட… அவளுக்கு நிறைவேறவில்லை. நிறைய நிராசைகளும். .. ஏக்கங்களுமே மனதில் இருந்தன. ஆனாலும் அந்த விதமான ஆசைகள் எல்லாம் மடிந்து போனதாக நினைத்த ஒரு சமயத்தில். .. அவளது இளமைகூட விடைபெறும் ஒரு தருணத்தில். .. அவளது இச்சைகள் நிறைவேறும் ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.!

1 Comment

  1. Nice presentation… story…

Comments are closed.