உன்ன எனக்கு ரொம்ப புடிச்சு போச்சுடா! – 2 136

நந்தா அவளோடு பேசிக்கொண்டிருக்கும் போதே.. அறைக்கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தாள் விழிநயா.! அதனால் அவசரமாகப் பேச்சை முடித்துக்கொண்டான்.

”குட் மார்னிங் நந்தா. .” விழிநயா.. புன்னகையுடன் சொன்னாள்.
” கூல் மார்னிங்..”

போர்வையை விலக்கி எழுந்தான். மணி பார்த்தான். ஆறு பத்து. !

” யார் போன்ல..?” விழிநயா சிரித்தபடி கேட்டாள்.. !!

“பிரெண்டு. .” எனச் சிரித்தான்.
” கேர்ள் பிரெண்டா.. ?”
” யா..!”

அதற்கு மேல் அவளும் கேட்கவில்லை. . அவனும் சொல்லவில்லை.!

”காபி கொண்டு வரட்டுமா..?” விழிநயா கேட்டாள்.
”இல்ல. .. நானே கீழ வர்ரேன்.” என்றுவிட்டு. .. பாத்ரூம் போனான்.

அவன் பாத்ரூமிலிருந்து வெளியே சென்றபோது… அவள்.. அவனது போர்வையை மடித்து வைத்துக் கொண்டிருந்தாள்.

அவன் வியந்து .. ” விழி… என்ன நீ..?” என்க.. புருவம் தூக்கி அவனைப் பார்த்தாள்.
” ஏன். ..?”
” இல்ல. .. போர்வையெல்லாம் நீ… நானே மடிச்சு வெச்சுப்பேன்”
” ஏன் நான் மடிச்சு வெச்சா ஏத்துக்க மாட்டியா என்ன. .?”
”ஓகே. .” சிரித்தான் ”ஆனா என்னால நம்ப முடியல..”
” என்னது..?”
” விழிநயான்ற ஒரு பெண்… இப்படி பொருப்பான… ஐ மீன்.. என்னோட போர்வையை மடிச்சு வெக்கறதுலாம்..”

புன்னகைத்தாளே தவிற.. ஒன்றும் பேசவில்லை! திருமணத்துக்கு முன்பிருந்த விழிநயா வேறுவிதமானவள்.. !!

திருமணத்துக்கு முன்பிருந்த விழிநயா.. வேறு விதமானவள். அவளுக்கு அமைதியாகப் பேசவோ… அடக்கமாகச் சிரிக்கவோ.. தெரியாது.
படபடப்பாகத்தான் பேசுவாள். எந்தக் காரியமானாலும் அதை உடனே செய்தாக வேண்டும். அதேபோல அவரவர் காரியங்களை அவரவரேதான் செய்ய வேண்டும் என்கிற கொள்கைவாதி. முணுக்கென்றால் கோபம் வந்து விடும். யாருடனும் சண்டைக்குப் போகத்தயங்க மாட்டாள்.
பெண்மைக்குண்டான மெண்மை குணங்கள் அவளிடம் அறவே இருக்காது. ஆனால் நன்றாக ஓவியம் வரைவாள். பாட்டு.. நடனமென்றால் மிகவும் பிடிக்கும். பள்ளி. . கல்லூரியில் தவறாமல் போட்டிகளில் கலந்து கொள்வாள். நிறைய பரிசுகள் வாங்கியிருக்கிறாள்.

” சரி.. என்னை பத்தின உன் அபிப்ராயம் என்ன. .?” எனக் கேட்டாள்.

புன்னகைத்தான் நந்தா.

1 Comment

  1. Nice presentation… story…

Comments are closed.