உன்ன எனக்கு ரொம்ப புடிச்சு போச்சுடா! – 2 135

புன்னகை தவழ… அவன் கன்னத்தில் முத்தமிட்டு.. விலகி எழுந்து பாத்ரூம் போனாள்.!!

அன்று மாலை.. மிருதுளாவின் மூத்த மகள் போன் செய்தாள்.
” யாழி.. எப்படி இருக்க. .?” என ஆர்வத்துடன் கேட்டாள் மிருதுளா.
” ஆ..! பைன் மா..! நீ எப்படி இருக்க..?”
”ம்..ம்.. எனக்கென்ன…? புள்ளைங்கள்ளாம் எப்படி இருக்காங்க..?”
” நேத்துதான்.. ஊர்ல கொண்டுபோய்.. விட்டுட்டு வந்தாரு..! அவங்கம்மா வீட்ல.”

பொதுவாகச் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த பின்னர் யாழினி கேட்டாள்.

” மறுபடி… அப்பாவோட சண்டையாம்மா..?”
” ஏன்டி…?”
”எனக்கு போன் பண்ணிருந்தாரு..”
”எப்ப. .?”
”காலைல… நேத்து வீட்டுக்கு வந்தவரை.. வீட்டுப் பக்கம் வராதேனு சொல்லிட்டியாமே.?”
” ம்.. ஆமா. . சொன்னேன்..”
” வீட்டுக்கு வந்தா.. செருப்பால அடிப்பேனு சொன்னியா.?”

கடுப்பாகி.. ”ஆமா சொன்னேன் என்ன இப்ப. .?” என்று சூடாக கேட்டாள்.
” நீ என்ன லூசாம்மா..? ஒரு புருஷனைப் பாத்து அப்படியெல்லாம் பேசலாமா.? நாலு கொழந்தைங்களுக்கு. . பாடம் சொல்லித் தர்ற டீச்சர். . உனக்கு எங்க போச்சு அறிவு..? ஏன் இப்படி மடத்தனமா நடந்துக்கற..?” என்று எதிர் பக்கம் கத்தினாள் மகள்.

உள்ளுக்குள் காயப் பட்ட மிருதுளா…
”நிறுத்துடி…! ரொம்பத்தான்.. புத்தி சொல்ற.. அந்தளவு பெரிய மனுசி ஆகிட்டியா.. நீ..?” எனக் கோபமாகப் பேசினாள்.

பெண்கள் எப்போதும் அப்பா செல்லம் என்பார்கள். அது உண்மைதான் என நிரூபித்துவிட்டாள் யாழினி.!

‘ அவளுடைய அப்பா இன்னொரு பெண்ணோடு வாழ்வது தப்பில்லை. அவனை நான் வீட்டுக்கு வரவேண்டாம் எனச் சொன்னது தரப்பாகி விட்டது..’
என மனம் நொந்தாள் மிருதுளா.

” அப்படி இல்லம்மா…! அப்பா பாவம்மா..” என யாழினி சொல்ல.. மேலே பேசப்பிடிக்காமல்.. உடனே.. இண்ப்பைத் துண்டித்து… போனைத் தூக்கி சோபாவில் வீசினாள்.

உள்ளுக்குள் குமைந்தவாறு. . அப்படியே சோபாவில் தொப்பென உட்கார்ந்தாள். கண்களை மூடி… தன்னை அமைதிப் படுத்த முனைந்தாள்.!! கண்களை மூடி.. ஆசுவாசப் படுத்திக்கொண்டாள் மிருதுளா. அவள் அமைதியாக உட்கார்ந்திருக்க… மறுபடி அவளது கை பேசி அழைத்தது.!
டிஸ்ப்ளேவில் பார்த்தாள்.
‘ யாழினி. !’
எரிச்சலோடு எடுத்தாள்.

1 Comment

  1. Nice presentation… story…

Comments are closed.