இடை அழகி மேடம் சங்கீதா 6 66

தூரத்தில் காரின் அருகில் இருந்த சஞ்சனா சங்கீதாவை பார்த்து பரவசப்பட்டு அவள் இருக்குமிடம் விரைந்தாள், கூடவே டிரைவரும் மெதுவாக Benz காரை தேர் போல ஒட்டி வந்தார். “wow விஜயசாந்தி மேடம், எப்படி இருக்கீங்க? excited to see you” என்று சரளமாக பேசினாள் சஞ்சனா. ஹேய் சஞ்சனா, எப்படி இருக்கே? – சிரித்துக்கொண்டே பேசினாள் சங்கீதா.. காரை ஒட்டி வந்த தாத்தா வழக்கமாக புருவத்தை உயர்த்தி பல் இலித்தார் “என்ன மேடம் எப்படி இருக்கீங்க? நம்மள நியாபகம் இருக்குதுங்களா?” ஒஹ் இருக்கே.. “இப்போதான் என் கிட்ட ஜொள்ளு விட்டுட்டு இருந்தீங்க அதுக்குள்ள மேடம் கிட்ட ஊத்துரீங்களே, நியாயமா?” என்று சஞ்சனா டிரைவர் தாத்தாவை ஒரு பிடி பிடிக்க.. ஹையோ ..போமா.. எப்போவுமே இதே விளையாட்டுதான். – சஞ்சனா கிண்டல் செய்தவுடன் டிரைவர் தாத்தாவுக்குரிய லேசான வெட்கம் சங்கீதாவின் முன் வழிந்தது. சஞ்சனா ராகவை ப் பார்த்து “I want to accompany sangeetha till her bank and come back, is there any work for next two hours raghav?” என்று கேட்க.. “No issues carry on” என்று ராகவ் கூலாக பதில் அளித்தான். wow nice… come on sangeetha… என்று சொல்லி காரின் கதவை திறந்து வெடுக்கென உள்ளே அமர்ந்துகொண்டாள் சஞ்சனா, சங்கீதாவும் அவள் அருகில் பின் இருக்கையில் அமர்ந்துகொண்டாள். தாத்தா வண்டியை start செய்ய கார் கதவின் கண்ணாடிகள் ஏற்றப்பட்டன.. ரகாவ் மென்மையாக “Bye” என்று சொல்லாமல் தலையசைக்க அதற்கு தனது அழகிய இதழ்களால் புன்னகைத்தவாறு அவளும் மெதுவாக தலையசைத்து விடைபெற்றாள். காரை கொஞ்சம் மெதுவா ஓட்டுங்க please, அப்போதான் நான் கொஞ்ச நேரமாவது என்னோட favourite heroine கூட பேச முடியும். என்று சஞ்சனா சொல்ல தாத்தா “சரிம்மா என்று பாவமாக rear view mirror” பார்த்து தலை ஆட்டினார். என்ன ஆச்சு சஞ்சனா, விட்டா என்னை தூக்கி உன் தலை மேலே வேசிக்குவ போல இருக்கு. அப்படி என்ன நான் செஞ்சிட்டேன்? – சிரித்தாள் சங்கீதா..

சிலரை நமக்கு ஏன் பிடிக்கும் எதற்கு பிடிக்கும் னு காரணம் சொல்ல தெரியாது… ஆன அவங்களை பிடிக்கும். அது மாதிரிதான் நீங்களும். உங்க கிட்ட இருக்குற personality எனக்கு ரொம்ப பிடிக்கும் மேடம். சாதரணமா புடவைதான் கட்டுறீங்க ஆனாலும் நாலு பேர் கூட நடந்தா வித்யாசமா தெரியுறீங்க. சரி வெளித் தோற்றத்துலதான் ஆள் செம பார்ட்டினு நினைச்சா உங்க தைரியம் எம்மடி… வியக்க வெக்குது மேடம். அன்னிக்கி நீங்க சம்பத் supervisor அ அறைஞ்சதுல இருந்து உங்க கிட்ட பல பேர் தனிப்பட்டு நன்றி சொல்ல ஆசை படுறாங்க தெரியுமா? but I only got that golden chance, that too sitting next to you – என்று சொல்லி சங்கீதாவின் கையை பிடித்து அவளது இருகரங்களாலும் குலுக்கி “Thank You” என்றாள் முகமலர்ச்சியுடன். (கிட்டத்தட்ட Micheal madhana kaamarajan படத்தில் வரும் ஊர்வசியை போல பட படவென வெடித்து தள்ளினாள் சஞ்சனா….) சங்கீதா ஒரு நிமிடம் பதில் ஏதும் கூறாமல் சஞ்சனாவையே ஒரு நிமிடம் கூர்ந்து கவனித்தால். இவளா ராகவை அப்படி ஏமாத்தி இருக்க முடியும்?.. என்று எண்ணி. hello…madam… என்று சங்கீதாவின் முகத்திற்கு முன் கையசைத்து அவளின் கவனத்தை திசை திருப்பினாள் சஞ்சனா. ஆங்.. ஒன்னும் இல்ல.. (சில நொடிகளுக்கு பிறகு..) சஞ்சனா.. 32 வயசுல இன்னும் இப்படி சின்ன பொண்ணுங்க மாதிரி இவளோ வெகுளியா இருக்கியே.. எப்படி society ல தனியா சமாளிக்குற? கல்யாணம் எதுவும் பண்ணிகலையா?

1 Comment

  1. கதை எதை நோக்கி போகுது என தெரியவில்லை

Comments are closed.