காமத்துக்கும் ஆசைக்கும் வயது முக்கியமல்ல பாகம் 2 30

என் மனம் மிகுந்த சந்தோஷத்தில் இருந்தது! என் திருமண நாளில் இதைவிட மிகப்பெரிய பரிசு எதுவும் எனக்கு தேவைப்பட போவதில்லை! மீண்டும் ஹரீஸை முத்தமிட்டேன்! அவன் மார்பில் சாய்ந்திருந்த படியே சொன்னேன், ஹாப்பி வெட்டிங் டே!

அவன் விலகி என்னைப் பார்த்தான்.

தாங்ஸ்டா! ஹாப்பி அனிவர்சரி! நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். இதை விட ஒரு பெஸ்ட் கிஃப்ட் எனக்கு என் வாழ்க்கைல எதுவும் இல்லை!

நான் அவனையே பார்த்தேன். நான், திருமண நாளில் இதை விட பெரிய கிஃப்ட் இருக்காது என்று நினைத்தால், அவன், வாழ்க்கைக்கே சேர்த்து யோசிக்கிறான்! நான் நினைத்த படியே, இனி அவன் எனக்காக வாழப்போகிறான். என் மகிழ்ச்சிக்காக யோசிக்கப் போகிறான். நான் பதிலுக்கு என்ன செய்யப் போகிறேன்???

பெண்ணை புரிந்து கொள்வது வேண்டுமானால் ஆணுக்கு சிரமமாக இருக்கலாம். ஆனால், ஆணைப் புரிந்து கொள்வதெல்லாம் அவ்வளவு சிரமமில்லை! அதுவும் நல்ல பண்புகளோடு இருப்பவனுக்கு, மெனக்கெட வேண்டிய அவசியமேயில்லை! பெண் புத்திசாலியாக இருந்தால், அவனை எளிதில் தன் கைப்பிடிக்குள் கொண்டுவிடுவாள்.

ஆணுக்கு ஒரு சின்ன ஈகோ இருக்கும். அதை பதம் பார்க்காவிட்டால், அவன் சுத்தமாக ஈகோ பார்க்காமல், பெண்ணின் ஆளுகைக்குள் வந்து விடுவான்! ஓரிரு முறை, இது எனக்கு பிடிக்கவில்லை, இருந்தும் உங்களுக்காக ஒத்துக் கொள்கிறேன் என்றால் போதும். கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்குப் பிடிக்காத விஷயங்கள், அவளைச் சுற்றி நடக்க விட மாட்டான்!

மாறாக, தொடர்ந்து நான் இப்படித்தான், எதுக்கு எனக்கு பிடிக்காததை செய்தாய் என்று பேசினால், ஆணின் ஈகோ வீறு கொண்டு விடும்! என்றாவது ஒரு நாள், எனக்காக என்ன கிழித்தாய் என்று திருப்பிக் கேட்கும்! பெண்ணின் விருப்பங்களை மதிக்க வேண்டும் என்ற எண்ணமும் அவன் மனதில் ஏற்படாது!

சின்ன வயதிலிருந்து, அன்பு காட்ட யாரும் இல்லாமல், தனியே வளர்ந்த எனக்கு ஒரு பழக்கம் இருந்தது. அது, சுற்றியுள்ள மனிதர்களை கவனிப்பது! ஒரு முறை பெற்ற தாய், தந்தையிடமே ஏமாந்தது, என்னை விழிப்படைய வைத்தது. அது, மனோரீதியாக ஒவ்வொருவரையும் அலசிப் பார்க்கும் தன்மையை எனக்கு கொடுத்திருந்தது!

அந்தத் திறமைதான், தாத்தா, மதன், இப்பொழுது ஹரீஸ் ஆகியோரின் மீதான அளவற்ற அன்பை எனக்கு ஏற்படுத்தியிருந்தது.

எவ்வளவு கம்பீரமான, புத்திசாலியான பெண்ணும், தன் மனதுக்கு பிடித்தவனின் தோள் சாயும் போது, வெறும் பெண்ணாக, கொஞ்சம் குறும்பும், குழந்தைத்தனமும், செல்லம் கொஞ்சுபவளுமாக மாறி விடுவாள்!

எவ்வளவு அன்பை மற்றவர்களுக்கு வாரியிறைத்தாளும், தன் மணவாளனுடனான தனிமையில், அவள் ரிசீவிங் சைடில் இருக்க வேண்டும் என்றுதான் இருப்பாள்!

Updated: December 1, 2021 — 10:27 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *