28 வயது அழகுப் புயல் – பாகம் 62 97

சரி அப்போ ஒரு செயின் மட்டும் வாங்கிக்கறேன்.

ரவி ஆடிப்போனான். எச்சில் விழுங்கினான். செயினா?. மஹாவுக்கு தெரிந்தால் ரொம்பவும் சந்தோஷப்படுவாளே

உ.. உங்க இஷ்டம் ஸார்

என் இஷ்டம்னா?

கிப்ட் வாங்குறது.. உங்க இஷ்டம் ஸார்

நான் செயின் கொண்டுவரேன்னு மஹாகிட்ட சொல்லாதே ரவி. அப்புறம் அவ தடபுடலா ஏதாவது ரெடி பண்ணிட்டிருக்கப்போறா

இல்ல ஸார் சொல்லல ஸார்

ம்.. நாளைக்கு வரேன்.

ரவி சந்தோஷமாக வணக்கம் வைத்துவிட்டுப் போக… ராஜ் பேனாவை டேபிளில் போட்டுவிட்டு, லேசாக சிரித்தான். பல வருடங்கள் ஆகிவிட்டன!

வினய் சொன்ன மாதிரி….

மறுநாள் –

ராஜ் காலிங்க் பெல்லை அடித்தபோது, ரவி வந்து கதவை திறந்தான்.

வாங்க ஸார்

என்ன ரவி. நிறைய பேர் இருப்பாங்கன்னு நெனச்சேன். உன் மகளைக்கூட காணோம்?

பாப்பாவை அம்மா அப்பா வெளில கூட்டிட்டு போயிருக்காங்க ஸார். நைட்டுதான் வருவாங்க

ரிலேட்டிவ்ஸ்?

உங்களுக்கு பிடிக்குமோ பிடிக்காதோன்னு… நீங்க மட்டுமே போதும்னு மஹா சொல்லிட்டா ஸார். வாங்க அங்க உட்காருங்க

மஹா… மஹா….

இதோ வரேன்ங்க

அவள் பெட் ரூமுக்குள்ளிருந்து குரல் கொடுக்க, அவன் ராஜ்ஜிடம், மன்னிப்பு கேட்பதுபோல் சொன்னான். கொஞ்ச நேரம்தான் ஸார்.

பரவாயில்ல ரவி. நான் வெயிட் பண்றேன்

5 Comments

  1. G. சங்கர்

    அருமை கதையை வேறு கோணத்தில் அழகாக கொண்டு சென்று விட்டிர்கள்
    சூப்பர் சார் இப்படி எழுத உங்களை தவிர யாராலும் முடியாது. சார் சீனு காமினி
    பகுதியை எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் வாசகன்.
    G. Sankar

  2. Next please 63

  3. Next please 63

  4. Next please 63
    Supr

Comments are closed.