ரெண்டு லாபம் – 4 130

பேசாம எதோ நினைப்புல கிளம்பிட்டேன்னு சொல்லிருக்கலாம் ஆனா அசிங்கமா போயிடுமேன்னு நினைத்து அந்த பொய்ய சொல்லிட்டேன் !

ஒரு மீட்டிங் சிவா மதியம் வந்துடுவேன் நீ குழந்தைய பாத்துக்கோ …

என்னடி இது சண்டே வீட்ல இல்லாம என்ன வேலை இது !

சாரி சிவா நேத்தே சொல்லிருக்கணும் மறந்துட்டேன் !

சரி எப்ப வருவ?

அதான் சொன்னேனே மதியம் வந்துடுவேன் !

சரி சீக்கிரம் வா …

ஓகே டிபன் டேபிள்ள இருக்கு சாப்பிட்டு வெயிட் பண்ணு மதியத்துக்கு …

எதுனா பார்சல் நீயே வாங்கிட்டு வந்துடேன் !

ஓகே ! பால் பவுடர் இருக்கு உனக்கு தான் தெரியுமே பாத்துக்க … ஓகே பாய் !

பாய் பாய் !

வெளில வந்த பிறகு தான் என்ன செய்யிரதுன்னே தெரியாம முழிக்க ஆரம்பித்தேன் !

இப்ப நான் என்ன செஞ்சிருக்கேன் ?! ஏன் இந்த வேலைய செய்யணும் …

பேசாமா ஆபிஸ்கிட்ட போயிட்டு மறுபடி நடந்து வந்து மீட்டிங் கேன்சல் ஆகிடிச்சின்னு சொல்லுவோம் !

அதே சரி என்று நேரா ஆபிஸ்க்கு நடந்தேன் !

பக்கத்துல ஒரு எடிஎம் சென்டருக்கு சென்று ஆயிரம் ரூபா பணம் எடுத்தேன் மினி ஸ்டேட்மெண்ட் எடுத்தேன் பேலன்ஸ் செக் பண்ணேன் …

வெளில வந்தேன் … சண்டேல அவளோ வெறிச்சோடிய பெங்களூர் சாலை பார்க்கவே ரம்மியமாக இருந்தது …

ஆனாலும் இந்த நேரத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக்கொண்டு நிற்கும் ஒரே ஆள் நானா தான் இருப்பேன் !

சரி போதும் இதுக்கு மேல நிக்க வேணாம்னு மீண்டும் நடக்க ஆரம்பிக்க என்னருகில் ஒரு ஆடி கார் படுவேகமாக வந்து நின்றது ….

நான் ஒரு நிமிஷம் பதறி போயி பின்னாடி ரெண்டு ஸ்டெப் வைத்து நின்றேன் …

கிளாஸ் இறங்கியது … ஒரு குரல் … கெட் இன் …

நான் யாரென்று குனிந்து பார்த்தேன் …

கூலிங் கிளாச கழட்டி … கமான் கெட் இன் …

ம்ம்ம் சலீம் !!! இந்த நேரத்துல இவர நான் எதிர்பார்க்கவே இல்லை ….

நான் தயங்க … அவர் மீண்டும் அதையே சொன்னார் … கெட் இன் !!!

வேற வழி இல்லாம நானும் ஏறி உட்க்கார்ந்தேன் !

என்னாச்சி ஆபிசையே சுத்தி சுத்தி வர … எடிஎம் போன வெளில வந்து திரு திருன்னு முழிச்சிகிட்டு நிக்கிற …

“”காலைல புருஷன்கிட்ட சொன்ன பொய்யே போதும் அதையே இன்னும் சமாளிக்க முடியாம தவிக்கிறேன் இவர்கிட்ட உண்மைய சொல்லிடுவோம் “”

சண்டேன்னு தெரியாம கிளம்பி வந்துட்டேன் அதான் என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சிகிட்டு நிக்கிறேன் !

ஹா ஹா … செம காமெடி இப்டி ஒரு … யு ஆர் ரியலி கிரேட் என்ன ஒரு சின்சியாரிட்டி …

சார் ஓட்டாதீங்க… சோ ஹஸ்பெண்ட் கிட்ட அசிங்கப்படக்கூடாதுன்னு இப்டி சுத்துற …

1 Comment

  1. Alagana story adutha part anupuga wait pannuren

Comments are closed.