பழிக்குப்பழி 2 138

நீயே சொல்லு என்றேன், இல்ல டாக்டர் இந்த பையன உங்கக்கூட பாத்த மாதிரி ஞாபகம் அதான் இங்கே வந்தேன் என்றான், அவன் செய்கை எல்லாம் நக்கலாக இருந்தது, செரி எவ்ளோ வேணும் என்றேன், சூப்பர் தலைவரே நேரா விசயத்துக்கு வண்டீங்க, அதுல 1 கோடின்னு போற்றுக்கு எனக்கு பேராசை எல்லாம் இல்லை, ஒரு 50லட்சம் குடுங்க போதும் என்றான், செரி ok என்றேன், அவனுக்கே ஆச்சரியம், அட இப்படின்னு தெரிஞ்சா இன்னும் அதிகமா கேட்டு இருப்பேனே என்றான், சிரித்தேன், நாளைக்கே வேணும் என்றான், யோவ் அறிவிருக்கா கைலயா அவளோ amountஅ வெச்சுட்டு இருப்பாங்க என்றேன்.

இன்னிக்கு புதன் அப்போ ரெண்டு நாள் கெழுச்சு சனி காலைல 10மணிக்கு இங்கே வர்றேன், செரியா என்றான், வேணாம் நம்பர குடுத்துட்டு போ நான் இடம் சொல்றேன் என்றேன், இது நமக்குள் நடக்கும் டீல், யாரிடமும் எதை பற்றியும் பேச கூடாது என்றேன், செரி என்று அவனும் கிளம்பினான், எனக்கு இதயதுடிப்பு அதிகமாக இருந்தது, என்ன செய்வது என்று என்னால் முடிவெடுக்க முடியவில்லை, இவன் மட்டும் இருக்கிறானா, இல்லை இவன் பின்னால் வேறு யாராவதா என்று குழப்பமாக இருந்தது, கண்டிப்பாக ராஜா இதில் involve ஆக வாய்ப்பில்லை, பையனை தூக்கிய நால்வருமே professional கூலிப்படையை சேர்ந்தவர்கள், அவர்கள் தொழிலுக்கு என்று ஒரு அறம் உண்டு,

அப்போ கண்டிப்பாக இவன் தனியாக தான் இதை செய்கிறான் என்பதை உறுதி செய்தேன், செரி என்ன செய்யலாம் என்பதை தெளிவாக பிளான் போட்டேன், கொலை செய்வது எளிது, ஆனால் அதன் பின்னர் அதை மறைக்க பெரிய ரிஸ்க் எடுக்க வேண்டும், மீண்டும் இன்னொரு operationக்கு தயார் ஆனேன், மீண்டும் பெரிய ஆஸ்பத்திரியில் தேவையான உபகரணங்கள் எடுத்து கொண்டேன், என் பழைய கிளினிக்ல் அதற்கு தேவையான எல்லவற்றையம் எடுத்து செட் செய்தேன், பவித்ரா என்ன செய்ய போகிறேன் என்பதை விளங்க முடியாமல் விழித்தாள்.

பவித்ரா வழக்கம் போல உணவுகளை உண்ண ஆரம்பித்து இருந்தாள், சனிக்கிழமை நெருங்க நெருங்க எனக்கு படபடப்பு அதிகமானது, பயத்துடனே எழுந்தேன், காலையில் போன் செய்தான், நான் என் பழைய கிளினிக் பக்கம் வர்ச்சொன்னேன். நான் என் காரில் வெய்ட் பண்ணிட்டு இருந்தேன், சொன்னது போலவே அங்கே வந்தான் ஆனால் கூடவே இன்னொருவனை கூட்டி கொண்டு வந்தான், எனக்கு தூக்கி வாரிபோட்டது, கொஞ்சம் கோபமாக ஹே நான் உன்னை தனியா தான வர்ச்சொன்னேன் என்றேன், சிரித்தான், நீங்க என்னை ஏதாவது பண்ணிட்டா என்ன பண்றது, அதான் safetyக்கு என்றான்.