பழிக்குப்பழி 2 139

மெதுவாக அவள் பக்கம் அமர்ந்தேன், என் மீது சாய்ந்து கொண்டாள், அப்பா நடந்தது எனக்குள் ஓடி கொண்டே இருக்கிறது, என்னை நினைத்தால் எனக்கு அருவருப்பாக இருக்கிறது, ஏதோ என் மீது அசிங்கம் பட்டது போல இருக்கிறது, செத்தரலாம் போல இருக்குப்பா என்றாள், நான் மார்போடு அணைத்து கொண்டேன், நீ செத்தா உன் ஒருத்தி உயிர் மட்டும் போகாதுமா, உன் அம்மா உயிரு, என் உயிருன்னு சேர்ந்து போகும், ஏன்னா உன் உயிர்ல தான் எங்க ரெண்டு பேரோட உயிரும் கலந்து இருக்கிறது என்றேன்,

அப்பா இருக்கேன்ல உன்மேல பற்றுக்க கலங்கத்தை நான் போக்குவேன், உன்மேல ப்ராமிஸ் என்றேன், அந்த 4 பேரு பா என்றாள், எல்லாம் நான் பாத்துகிறேன் என்றேன், மீண்டும் படுத்து கொண்டாள், காலை பொழுது விடிந்தது, இன்னும் ஒருநாள் இங்கேயே இருக்கலாம் என்று முடிவு செய்து நன்றாக ஊரை சுத்தி பார்த்தோம், இரவு அறைக்கு வந்து படுத்து கொண்டேன், எனக்கு திடீரென்று பவித்ரா ஞாபகம் வந்தது, அய்யயோ அவளை மறந்து விட்டேனே, இரண்டு நாட்கள் 6 வேளை சாப்பிடவில்லை, குளிர் வேற, ஹீட்டர் போடாமல் வந்து விட்டேனே, போர்வை கூட போர்த்த வில்லையே, கையையும் கட்டி வைத்து விட்டேன், எனக்கு மனம் படபடத்தது, எனக்கு ஒருகட்டத்தில் அவள் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்று தோன்றியது, மணியை பார்த்தால் 12,

என்ன சொல்லி நான் கிளம்புவது என்று மனம் பதபதைத்தது, செறி எல்லாம் விதிப்படி என்று முடிவு செய்து என்னை அமைதியாக்க முயற்சி செய்தேன், என்னதான் அவள் கெட்டவள் என்றாலும் எனக்குள் இருக்கும் மனிதாபிமானம் என்னை torture செய்தது, அவ்வளவு தீங்கு செய்த அந்த நால்வருக்கு கூட நான் வேளா வேளைக்கு நல்ல உணவழித்து பார்த்து கொண்டேன், ஆனால் இவளை விட்டுவிட்டேனே என்று தோன்றியது.

எப்போடா விடியும் என்று wait செய்தேன், 9 மணிக்கு flight, கிளம்பினோம், 11:15க்கு ஊட்டி வந்தடைந்தோம், நாங்கள் வீட்டுக்கு வந்ததும், இரு வந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு என் பழைய கிளினிக் இருக்கும் இடத்திற்கு சென்றேன், 99 சதவிகிதம் அவள் இறந்திருப்பாள் என்று தெரிந்தாலும் 1 சதவீதம் அவள் உயிரோடு இருப்பாள் என்று என் மனதிற்கு தோன்றியது…

என் கிளினிக் கதவை திறந்தேன், உள்ளே பார்த்தேன், பெட்டில் இருந்து கீழே விழுந்து சுயநினைவு இல்லாமல் இருந்தாள்,