பழிக்குப்பழி 2 138

டாக்டர் எப்படி இருக்கீங்க என்றார், நல்லா இருக்கேன் என்றேன், என்னாச்சு ஒரு மாதிரி இருக்கீங்க என்றேன், கொஞ்சம் டென்ஷன் டாக்டர் என்றார், நான் உடனே ஸ்டெதெஸ்கோப்பை தேட, அவர் அதெல்லாம் வேண்டாம் என்றார், ஒன்னுமில்லை என்கூட இருந்த பயல ரெண்டு நாளா காணோம், எல்ல இடத்துலயும் தேடிட்டேன் என்றார், எனக்கு உள்ளே படபடப்பு வந்தது, ஒருவேளை தெரிந்து விட்டதோ என்று, ஏன் என்னாச்சு அவளோ முக்கியமா என்றேன், ஆமாம் டாக்டர் உங்ககிட்ட சொல்ல என்ன, அவன் தான் என் பினாமி, அவன்மேல் 100கோடி மில்ல எழுதி வெச்சருக்கேன், அவன் இல்லாம ஏதும் நடக்காது என்றார்,

ஒருவேளை பணத்துக்கு ஆசை பட்டு ஓடிருப்பானோ என்றேன், அந்த angleலயும் யோசுச்சு அவன் பொண்டாட்டி புள்ளைய எல்லாம் அடுச்சு கேட்டேன், பணம் ஏதும் காணாம போகல, அவனும் அவன் மச்சானும் ரெண்டு நாள் முன்ன இங்கே பாத்ததா பசங்க சொன்னாங்க அதான் போலீஸ்க்கு inform பண்ணேன் என்றார். எனக்கு படபடப்பு அதிகம் ஆனது, காணாம போனவங்களை இங்கே தேடி என்ன பிரயோஜனம் என்றேன், இல்ல எனக்கென்னமோ இங்கே தான் அவனுக இருப்பானுகளோன்னு தோணுது என்று சொல்லிக்கொக்டே என் ரூமை நோட்டம் விட்டார்,

யாருக்கு தெரியும் எவனாச்சும் எருச்சு பொதசிறுபானுங்க என்று சொல்லி சிரிக்க ,நானும் சிரிப்பு வராமல் சிரித்தேன், செரி நான் கெளம்பறேன் டாக்டர் என்று சொல்லி கிளம்பினார், எனக்கு அடிவயிறு நடுங்கியது, என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி போனேன், ஒருவேளை ஏதாவது தடயங்களை விட்டு வெய்திருப்பேனா என்று தோன்றியது, ரொம்ப உஷாராக தான் நான் இருந்தேன், எல்லா தடயங்களையும் ஆசிட் தொட்டியில் கரைத்துவிட்டேன், என்னை சிக்கவைக்க எந்த ஆதாரமும் இருக்காது என்று முடிவு செய்து வீட்டுக்கு கிளம்பினேன், இரண்டு நாள்கள் என் பழைய கிளினிக் பக்கம் செல்லவே இல்லை, பவித்ராவுடனும் எந்த பிரச்சினை இல்லை, எல்லா பிரச்சனையும் சுமூகமானது என்று முடிவு செய்த பின்னர், மீண்டும் பவித்ராவை அதிகாலையில் என் பழைய கிளினிக் கொண்டுவந்தேன்,

எதுக்கு என்னை ஒவ்வொரு இடமாக மாதிக்கிட்டே இருக்க, நான் ஒன்னும் உண்ண போலீஸ்ல போட்டுக்குடுக்க மாட்டேன் என்றாள், நான் ஏதும் ரியாக்ட் பண்ணவில்லை, இந்த டென்ஷனில் தூக்கம் இல்லாமல் போனது, செரி உன்னை இரவு வந்து பார்க்கிறேன் என்று அவளிடம் சொல்லிவிட்டு நான் வீட்டுக்கு கிளம்பினேன், போய் நன்றாக உறங்கினேன், மணி மதியம் 3 இருக்கும் அவளுக்கு பசிக்குமே என்று எனக்கும் அவளுக்கும் சாப்பாடு வாங்கிவிட்டு பழைய கிளினிக் சென்றேன், அங்கே போனால் என் கிளினிக்ன் பூட்டு உடைக்கபட்டு இருந்தது, எல்ல பொருட்களும் உள்ளே சிதறி இருந்தன எனக்கு அதிர்ச்சி, உள்ளே ஓடிப்போய் பார்த்தால் பவித்ரா காணோம், யார் உடைத்து இருப்பா, ஒருவேளை ராஜாவா இல்ல போலீசா என்று, கிறுக்கு பிடிப்பதுபோல இருந்தது, இவளே போயிருப்பாளோ இல்லை கடத்தி கொண்டு போயிருப்பார்களோ என்று தோன்ற, அங்கும் இங்கும் அலைந்தேன்,

கொஞ்ச நேரம் கழித்து எனக்கு phone வந்தது, ராஜா தான் பேசினார், என்ன டாக்டர் அந்த பெண்ணை தேடரிங்களா என்றார், நான் அதிர்ச்சியில் பதில் சொல்லாமல் நிற்க, பயப்படாதீங்க என்கூட தான் இருக்கா என்று சொல்லி சிரித்தார், பக்கத்தில் பவித்ரா அழுவது கேட்டது. ஹலோ ராஜா என்னாச்சு எதுக்கு அவல கூட்டிட்டு போயிருக்கிங்க என்று கேட்க, சீக்கிரம் என் மில்லுக்கு வாங்க பேசிக்கலாம் என்றார்,,,