பழிக்குப்பழி 2 138

இந்த ஒரு மாதம் என் வாழ்நாளிலேயே மோசமான மாதம், ஒருநாள் கூட என்னால் நிம்மதியாய் இருக்க முடியவில்லை, ஆழ்ந்த யோசனைக்கு பிறகு அவன் உடலை அங்கேயே புதைத்து விடலாம் என்று முடிவெடுத்தேன், அவன் மச்சானையும் கொன்று விடலாம் என்று முடிவு செய்து, ஊசி செலுத்த கொஞ்ச நேரத்தில் அவனும் இறந்து போனான், என் மூளை மழுங்கி விட்டது போல தோன்றியது, உடல் முழுவதும் தாங்க முடியாத அளவு வலி, இருந்தும் மூச்சை இழுத்து பிடித்து அழுது கொண்டே இரவு விடிய விடிய என் கிளினிக் பக்கமே பெரிய குழியை தோண்டினேன்,

தோண்டி முடித்த பின்பு ஒரு யோசனை, ஒருவேளை மண் சரிவு ஏற்ப்பட்டால் மாட்டிக்கொள்வேனே, அடக்கொடுமையே இது தோண்டும் போதே தோன்றி இருக்க கூடாதா, அந்த குழியை ஒரு பெரிய தார்பாயினால் மூடிவைத்தேன், பயம் ஒரு புறம், உடல் வலி ஒரு புறம், இனியும் இங்கே இருந்தால் பைத்தியம் பிடித்து விடும் என்று தோன்றியது,செரி அப்பறம் யோசித்து கொள்ளலாம் என்று முடிவு செய்து, மீண்டும் அவர்களை இழுத்து உள்ளே போட்டேன், polythene கவரால் நன்கு சுற்றி வைத்தேன், பசிக்கிறது ஆனால் சாப்பிட கூட யோசனை இல்லை, பவித்ரா ஞாபகம் வர அவளுக்கு மட்டும் உணவு வாங்கிக்கொண்டு வீட்டுக்கு சென்றேன், என்ன செய்வது என்று யோசித்தபடியே இருந்தேன்,

வீட்டுக்குள் போய் கதவை திறக்க, தலையில் கைவைத்தபடி உட்கார்ந்து இருந்தாள், நான் அங்கே இருந்தே சாப்பாட்டை நகர்த்தி, சாப்பிடி என்றேன், என் ட்ரெஸ் லாம் அங்கே இருக்கு, எனக்கு குளிக்கனும் என்றாள், செரி என் மகள் அறை சென்று அவள் உடைகள் சிலது எடுத்து அவளுக்கு கொடுத்தேன், பிறகு நானும் போய் என் அறையில் heaterஇல் வெந்நீர் போட்டு அமைதியாக அப்படியே உட்கார்ந்து கொண்டேன், என் காயங்களுக்கு மருந்து போட்டுகொண்டு கொஞ்ச நேரம் கழித்து பவித்ரா அறைக்கு சென்றேன்,