பழிக்குப்பழி 2 138

ரத்தம் நெறய போக எனக்கு மயக்கம் வருவது போல ஆனது, நான் உள்ளே போக பவித்ரா என்னை பார்த்து பயந்து அலறினாள், என்னாச்சு என்னாச்சு என்றாள், நான் accident என்று சொன்னேன், இருவரையும் உள்ளே இழுத்து வந்து போட்டேன், அவள் பயத்தில் நடுங்க ஆரம்பித்தாள், என்னாச்சு யாரு இவுங்க என்றாள், என் வண்டில அடி பட்டுடாங்க என்றேன், செரி ஹாஸ்பிடல் போக வேண்டியது தான என்றாள், இல்லை அதில சிக்கல் இருக்கு கொஞ்சம் அமைதியா இரு என்றேன், அவள் விடாமல் பேசிக்கொண்டே இருந்தாள், அவள் பேசுவதால் என்னால் யோசிக்க முடியவில்லை, chloroform கொஞ்சம் எடுத்து என் kerchiefல் நனைத்து அதை வலுக்கட்டாயமாக அவளுக்கு கொடுக்க அவள் மயங்கினாள்…

பின்பு எனக்கு முதலுதவி செய்து கொண்டேன், ஒரு 20 நிமிடம் கழித்து , இவனுகளை என்ன செய்வது என்று எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது, முத்துக்கு முதலுதவி செய்தேன், இன்னொருவனுக்கு அவ்வளவு அடி இல்லை, கண்டிப்பாக இவனுகளால் எனக்கு ஆபத்து தான், கொன்றாலும் பிரச்சனை, உயிரோடு விட்டாலும் ஆபத்து தான், செரி என்று இறுதியில் பல யோசனைக்கு பிறகு இன்னொரு experimental ஆப்பேரஷன் இவர்களை வைத்து செய்யலாம் என்று முடிவு செய்தேன், பவித்ரா இங்கே இருந்தால் என்னால் ஏதும் செய்யமுடியாது, செரி என்று ஒரு பிளான் செய்தேன், ஒரு 2 வாரத்திற்கு என் மனைவி மற்றும் குழந்தையை, எங்கள் சொந்த ஊரான கோயம்புத்தூருக்கு அனுப்பி வெக்கலாம் என்று முடிவெடுத்தேன்,

வீட்டிற்கு போனேன் என்னை பார்த்து பயந்துவிட்டாள் என் மனைவி, சாதாரண அடிதான் பதராதே என்று சமாதானம் செய்தேன், நான் கோயம்புத்தூர் பேச்சை ஆரம்பிக்க அதற்க்கு ஏத்தது போல் அவளும் இங்கே நமக்கு நேரம் செரி இல்லைங்க பேசாம நாம கோயம்புத்தூரில் செட்டில் ஆயிடலாம் என்று சொன்னால், உடனே நான் அவளை convince செய்து 2 வாரம் அங்கே இருங்க நான் சீக்கிரமாக எல்லா ஏற்பாடும் செய்து அங்கே வந்துவிடுகிறேன் என்றேன், எல்லாம் ஒரே நாளில் என்னால் முடிந்தது, அவர்கள் போனதும் வீடு வெறிச்சோடி இருந்தது, ஒரு தவறு செய்தால் அதை ஒட்டி அதை மறைக்க எத்தனை தவறுகள் செய்யவேண்டும் என்பதை புரிந்து கொண்டேன், பவித்ராவை இங்கே கொண்டு வந்து விடலாம் என்று முடிவெடுத்தேன்.

அடுத்த நாள் காலை என் மனைவி, மகள், கிளம்பினார்கள், அவர்கள் போன பின்பு நான் என் கிளினிக் சென்று, பவித்ராவை என் ஜீப்பில் போட்டுவிட்டு வீட்டுக்கு வந்து, எங்கள் வீட்டின் bedroomஇல் விட்டு, கதவை பூட்டிவிட்டேன். மீண்டும் அங்கே சென்று பார்க்கையில், முத்து பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்தான், பிறகு தான் அவன் இறந்துவிட்டான் என்று தெரிந்தது, ரொம்ப பயமாக இருந்தது, அந்த நால்வரை பழி வாங்கியது கூட என்னை பெரிதாக பாதிக்கவில்லை, முதல் கொலை என்பதால் என்ன செய்வதென்றே தெரியவில்லை, ச்ச நான் என்ன தவறு செஞ்சுருப்பேன், எல்லாருக்கும் நல்லவனா தான இருந்தேன், எனக்கு மட்டும் ஏன் இப்படி என்று தோன்றியது, என்னை அறியாமல் கண்ணீர் ஊற்றியது, ரொம்ப படப்படப்பாக இருந்தது.