பழிக்குப்பழி 1 278

ரிவன்ஜ் பொருள் : பழிக்குப்பழி;
பழிக்குப் பழிவாங்கும் செயல்;
பழிவாங்கும் எண்ணம்;

என் பெயர் ஜெயசூர்யா. நான் ஒரு எம்பிபிஎஸ் டாக்டர். இந்த டிசம்பர் வந்தால் எனக்கு வயது 50. எனக்கு இருப்பதோ ஒரே வீடு, ஒரே கிளினிக், ஒரே மனைவி, ஒரே பெண் குழந்தை.
என் மனைவிக்கு வயது 40, என் குழந்தைக்கு வயது 19.

நாங்கள் இருப்பது ஊட்டி, எங்கள் இருவருக்குமே சொந்த ஊரு கோயம்புத்தூர் தான், ஆனால் கல்யாணம் ஆன முதல் வருடத்திலேயே ஊட்டியில் வந்து செட்டில் ஆகிவிட்டோம். எங்களுக்கு நாங்கள் மூவர் தான்,

கல்யாணம் ஆகி 20 வருடமாகிறது. என் மனைவி பக்கத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் தலைமையாசிரியையாக பணிபுரிகிறாள். அவள் பெயர் சந்திரா.
அப்புறம் எங்களின் ஒரே செல்ல மகள் கீர்த்திகா. 12ஆவது வரை எங்களுடன் ஊட்டியில் தான் கான்வென்ட்டில் படித்தாள், இப்பொழுது கோயம்புத்தூரில் உள்ள ஒரு மெடிக்கல் காலேஜில் இரண்டாமாண்டு ஹாஸ்டலில் தங்கி படித்துக்கொண்டிருக்கிறாள். மிகவும் அன்பான குடும்பம் எங்களுடையது. என் மனைவியே பேரழகி, எங்கள் குழந்தை என் மனைவியைவிட அழகாக இருக்கும்.

அவள் எங்களுடன் இல்லாத இந்த இரண்டு வருடமும் ரொம்ப கஷ்டமாக இருந்தது, சனிக்கிழமை ஆனால் போதும், நாங்கள் இருவரும் எங்கள் குழந்தையை பார்க்க கிளம்பி விடுவோம். ஒவ்வொரு வாரமும் இப்படித்தான். அந்த ஏரியாவிலேயே கிளினிக் வைத்திருக்கும் ஒரே டாக்டர் நான்தான், அதனால் ரொம்ப பிரபலம் நாங்கள்.

காசுக்கும், அன்புக்கும் பஞ்சமில்லை. இந்த 20 வருடத்தில் ஒருமுறை கூட எங்களுக்குள் சண்டை சச்சரவு வந்ததில்லை. பொறுமையின் சிகரம் என்று என்னை எல்லோரும் சொல்வார்கள், நான் கோபப்பட்டதே இல்லை. எதற்கும் அழட்டிக்கொள்ள மாட்டேன்.