பழிக்குப்பழி 1 278

எங்கள் மகள் குழந்தையாக இருக்கும் போதே முடிவெடுத்துவிட்டோம், ஒருவர் அன்பு காட்ட வேண்டும், இன்னொருவர் கண்டிப்புடன் இருக்க வேண்டும் என்று.
நான் அன்பானவனாகவும், என் மனைவி கண்டிப்பானவளாகவும் நடிக்க ஆரம்பித்து, இன்று வரை வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கிறது. எங்கள் குழந்தைக்கு எங்கள் இருவர் மேலும் உயிர். நான் கொஞ்சம் ஜாலி டைப் என்பதால் என்னுடன் தான் அதிகமாக ஷேர் செய்துகொள்வாள். சில விஷயங்களை அம்மாக்கு தெரிய வேணாம்பா என்று சொல்வாள். ஆனால் நான் என் மனைவியிடம் சொல்லி விடுவேன். அவளிடம் எதையும் நான் மறைத்ததில்லை.

மிகவும் சந்தோசமாக போய் கொண்டிருந்தது எங்கள் வாழ்க்கை. ஒருநாள் கிளினிக்கில் இருக்கும் போது என் மகள் கால் பண்ணினாள். டாடி இதுபோல் எங்கள் காலேஜில் ஹாஸ்பிடல் விசிட் கூட்டி கொண்டு போகிறார்கள், பெங்களூரு போகணும் என்று சொன்னாள். அம்மாகிட்ட கேட்டுக்கடா செல்லம் என்றேன். நீங்க ஓகேவா சொல்லுங்க என்றாள். எனக்கு ஓகேமா, ஆனா அம்மாகிட்ட கேட்டுக்க என்றேன். எப்படியோ என் மனைவியிடமும் சொல்லி பெர்மிஸ்ஸன் வாங்கிவிட்டாள். 30 பேர் போவதாகவும், 4நாட்கள் என்றும் சொன்னாள்.

கொஞ்ச நேரத்தில் மீண்டும் கூப்பிட்டாள், எப்போமா போகணும் என்றேன், நாளைக்கு டாடி என்றாள், என்ன ஒடனேவா என்றேன். ஆமாம் டாடி என்றாள். நானும் அம்மாவும் ட்ரெயின் ஏத்தி விட அப்போ வந்தர்றோம்மா என்றேன். இல்ல வேணாம், பேரண்ட்ஸ்லாம் வர அல்லோடு இல்ல, அதில்லாம நான் என்ன குழந்தையா என்றெல்லாம் சொல்ல, செரி என்றும் நானும் விட்டுவிட்டேன்.

இருந்தாலும் எனக்கு உள்ளுக்குள் ஒரு உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. ஏதோ எனக்கு செரியாகபடவில்லை.

வீட்டுக்கு வந்ததும் இரவு மனைவியிடம் சொன்னேன், அவளும் ரொம்ப யோசிக்காதீங்க என்று மட்டும் சொல்லி விட்டு படுக்க போனாள். முதல் நாள் ஃபோனில் பேசினாள் என் குழந்தை, இங்கே வந்துசேர்ந்துவிட்டோம் என்று. அடுத்த இரண்டு நாட்கள் ஃபோன் வரவில்லை, ட்ரை பண்ணி பார்த்தாலும் சுவிட்ச் ஆஃப் என்று வந்தது.