பழிக்குப்பழி 1 279

அதன் முதல் படியாக எங்கள் ஊட்டியில் உள்ள பெரியாஸ்பத்திரிக்கு போனேன். அங்கே போக எனக்கு சிறப்பு அனுமதி உண்டு. போகும் போதே ஒரு டிராவல்பேக் கொண்டு போனேன், அறுவை சிகிச்சை பிரிவு பிளாக்குக்கு போனேன், ஆபரேஷன் செய்ய தேவையான அனைத்து உபகரணங்களையும் திருடி எடுத்துக்கொண்டேன். ஒரு ஹார்ட்வார் ஸ்டோர் சென்று, ச்சைன் ஷா, நாய்களை கட்டி வைக்கும் இரும்புச்சங்கிலிகள், பெரிய பாலித்தீன் விரிப்புகள், ட்ரில்லர் மெஷின், வாங்கிக்கொண்டேன்.

மெடிக்கல் ஷாப் சென்று, 15 சாலைன் பாட்டில்கள், 10 இன்ஜெக்ஷன் செட்கள், பஞ்சு, கை உரைகளும் வாங்கிக்கொண்டேன்.
மணி 9:30 இருக்கும், மீண்டும் என் பழைய கிளினிக் போனேன், எல்லாவற்றையும் சுத்தம் செய்தேன், அதிலேயே ஒரு மணிநேரம் ஆனது. இன்றைய நாள் ரொம்ப அலைச்சல் என்பதால் அப்படியே படுத்து உறங்கினேன். காலையில் ஒரு செல்போன் அழைப்பு என்னை எழுப்பியது, மணி 4 இருக்கும், யாரென்று கேட்டேன் நான் பாபு சேகர் என்றார். யாருன்னு தெரிலேயே என்றேன், ராஜா அண்ணன் என்றார், ஓஹ் தூக்கியாச்சா என்றேன், இங்க தான் இருக்கானுக என்றார்.

நான் எங்கே வரட்டும் என்றார். நான் என் வீட்டு அட்ரெஸ்ஸ குடுக்க, ஒரு எய்ச்சேர் வேனில் வந்தார்கள். நான் அதற்குள் பல் விளக்கி, குளித்தேன். ஒரு 20 நிமிடத்தில் வந்தார்கள், எனக்கு பதற்றம் தொற்றிக் கொண்டது. நான் வெளியில் நின்றேன், சேகர் வந்தார் ஒரு 40 வயது இருக்கும், 4 சாக்கு மூட்டைகளை கீழே இறக்கினார்கள், கூட ஒரு பய்யன் இருந்தார், அவன் அப்படியே இழுத்து வந்தான், எங்கே வைக்கணும் டாக்டர் என்றான், நான் உள்ள வெச்சுடுபா என்று சொல்ல, நாலையும் வைத்தான்.

நான் பாக்கலாமா என்றேன், இருங்க என்று சேகரே மூட்டையை திறந்தார், நான்கு மூட்டையையும் திறக்க, அதே நான்கு பேர் தான், விக்கி, விஷ்ணு, சம்பத், ராஜ். நான் இவர்களே தான் என்றேன்.

ஒன்னும் பிரச்சனை வராதே என்றேன், இல்லை டாக்டர் யாருக்கும் தெரியாமல் கிளீன் ஸ்கெட்ச் போட்டு தூங்கினோம், அதும் வீட்டில் இல்லை, வெளியில் வைத்து என்றார். நல்லது நல்லது என்றேன்.
எவ்வளவு என்றேன் 4 பேருக்கு 2 லட்சம் என்றார். நான் 2 லட்சமும் கூட 10ஆயிரம் சேர்த்து கொடுக்க, சந்தோசமாக வாங்கிக்கொண்டார்.

அப்புறம் ஏதாச்சுனா கூப்டுங்க என்றார், உங்க நம்பர் என்றேன், விசிட்டிங் கார்டு கொடுத்தார், அதுல பி.எஸ் என்று போட்டு இருந்தது, பாபு சேகர் அவர் பெயரில் முதல் எழுத்துக்கள். கண்டிப்பாக உதவி வேண்டுமென்றால் கூப்பிடுகிறேன் என்றேன். அவர்கள் கிளம்பினார்கள்.