பழிக்குப்பழி 1 279

இதெல்லாம் உண்மை இல்லை, எல்லாமே கனவு, கனவு என்று கண்மூடி திறந்தேன், இல்லை எல்லாம் நிஜம் தான், என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. செத்துவிடலாம் போல இருந்தது, என் குழந்தை எவ்வளவு துயரத்தை அனுபவித்து இருப்பாளோ தெரியவில்லை.

நினைக்கயில் நெஞ்சில் ரத்தம் வழிவது போல இருந்தது. எல்லோரும் எங்கள் ஏரியாவில் என்னை பொறுமையான டாக்டர், நல்ல டாக்டர், என்பார்கள், ஏழைகளிடம் நான் காசு வாங்கியதே இல்லை, எல்லோரும் என்னை வாழ்த்தி விட்டு தான் போவார்கள்,

ஒருவரின் வாழ்த்து கூடவா என் குழந்தையை காப்பாற்றவில்லை. என்று எனக்குள் புலப்பினேன், மீண்டும் அந்த டாக்டரிடம் போனேன், அவரிடம் விசாரிக்க, கர்ப்பப்பை severeஆக டேமேஜ் ஆகி இருப்பதால், எடுக்க வேண்டும் என்றார், என் மகளுடனே என் வம்சம் முடிந்து விட போகிறதே என்று கவலையாக இருந்தது, எனினும் என் குழந்தை உயிரோடு இருந்தாலே போதும் என்று தோன்றியது.

ஏதாவது முன்னேற்றம் இருக்கிறதா என்றேன், இப்போ அன்கான்சியஸாக இருக்கிறாள், தலையிலும் அடிபட்டு இருக்கு, ஸ்கேன் செய்யவேண்டும் என்றார். இன்னும் ஒரு 10 நாட்களில் கண் முழித்து விடுவார். வலி தெரியக்கூடாது என்பதற்காக ஹெவி செடேடிவ் குடுத்திருப்பதாக கூறினார்.

பார்க்க allow பண்ணுவீர்களா என்றேன், ஓகே என்றார், நான் பக்கம் போனேன், என் குழந்தை வெறிபிடித்த ஓநாய்களிடம் சிக்கி சின்னாபின்னமான ஒரு ஆட்டிக்குட்டியை போல கிடந்தாள். என்னை அறியாமல் என் கண்ணில் இருத்து கண்ணீர் ஊற்றியது.

உங்க ஊருக்கு கொண்டு போவது என்றால் கொண்டு செல்லுங்கள் என்றார். இல்லை டாக்டர் இங்கேயே இருக்கட்டும் என்றேன். நாளை என் மனைவியை கூட்டி வருவேன், அவளிடம் ஆக்சிடன்ட் என்றே சொல்லுங்கள் என்றேன். அவர் சிரித்து, யு டோன்ட் ஒர்ரி டாக்டர் என்றார். நான் தேங்க்ஸ் சொல்லிவிட்டு என் குழந்தையுடன் போன அந்த பெண்ணை தேடி போனேன்.