பழிக்குப்பழி 1 280

ஒருகட்டத்தில் பயம் வந்துவிட்டது, என் மனைவி, கீர்த்தி போன் பண்ணினாலா என்று கேட்டாள், நான் நேற்று தான் பேசினேன் என்று பொய் சொல்லிவிட்டேன். ஏதோ தவறாக இருக்கிறது என்பது மட்டும் எனக்கு புரிந்தது.

மணி: 8:00
நேரம்: காலை
என்னால் இங்கே இருப்பு கொள்ள முடியவில்லை நேராக காலேஜ்க்கே பார்க்க போய்விட்டேன். அங்கே போனதும் அவர்கள் டீனை பார்க்க சொன்னார்கள், விசாரித்து பார்த்ததில், அப்படி ஏதும் ஹாஸ்பிடல் விசிட் எங்கள் காலேஜ் மூலமாக போகவில்லை என்று சொன்னார்கள். அதுவே எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

என் குழந்தை இப்படி என்னிடம் பொய் சொல்லிவிட்டாலே என்று இருந்தது, நான் பெரிதாக காட்டிக்கொள்ளவில்லை, செரி யாரெல்லாம் மேம் லீவ் போட்டு போயிருக்கிறார்கள் என்றேன். பவித்ரா தான் உங்க பொண்ணோட க்ளோஸ் ஃபிரெண்டு அவளும் மூணுநாளா வரல, இது சந்தேகம் தான், அவகூட தான் போயிருக்கா என்று சூர்றா சொல்ல முடியாது என்றார். நான் அவர்களிடம் கேட்டு அந்த பெண்ணின் நம்பரை வாங்கிக்கொண்டேன்.

அவர்கள் திரும்பி வரும்போது கண்டிப்பாக பனிஷ்மெண்ட் உண்டு என்றார். நான் மெலிதாக சிரித்தபடி கிளம்பினேன். அந்த பவித்ரா பொண்ணுக்கு கால் செய்தேன், அவள் போன் சுவிட்ச்ஆஃப் என்று வந்தது, எனக்கு தலையே வெடிக்கும் போல இருந்தது, பேசாமல் பெங்களூர் கிளம்பி போய் விடலாமா என்று கூட யோசித்தேன், ஆனால் அங்கே எங்கு போவது, எப்படி தேடுவது.

இதற்கிடையே என் மனைவி வேற கால் செய்து என்னாச்சு, எங்க போனீங்க என்று கேள்வி வேறு, நான் எதையோ சொல்லி சமாளித்தேன்,
பேசாமல் போலீஸ் ஸ்டேஷன் போகலாம் என்றால், நம்மூரு என்றால் பரவாயில்லை, வேறு மாநிலம் வேறு, என்ன செய்வது. குழப்பத்தில் எனக்கு பைத்தியமே பிடிப்பது போல இருந்தது.