பழிக்குப்பழி 1 279

மணி: 5:00
பொழுது: மாலை
10 நிமிடத்தில் வந்தாள், உடனே கோயம்புத்தூர் போனோம், ஃபிலைட் பிடித்தோம், என் தோளில் சாய்ந்தபடி அழுதுகொண்டே இருந்தாள், என்னவள் அழுது அழுது கலையிலந்து இருந்தாள், அவளை என் நெஞ்சோடு அனைத்துக்கொண்டு, கவலைப்படாத தங்கம், நாம யாருக்கும் எந்த தீங்கும் செஞ்சதில்லை, நமக்கு எந்த கெடுதலும் நடக்காது என்றேன். என் நெஞ்ஜோடு தன் முகத்தை அழுத்திக்கொண்டாள். அவள் வெளியே அழுதாள், நான் உள்ளுக்குள் அழுதேன்.

மணி: 6:30
பொழுது: மாலை
ஹாஸ்பிட்டல் வந்தடைந்தோம், எனக்கு தெரிந்த அதே டாக்டரிடம் சொல்லி ஐசியு போனோம், என் மகளின் கோலத்தை பார்த்து கதறித்துடித்தாள், நான் அவளை அணைத்து பிடித்துக்கொண்டேன். அவள் கதறிய கதறலால் அங்கே இருப்பவர்களுக்கு கூட நெஞ்சம் கலங்கி இருக்கும்.

அவளை உட்கார வைத்தேன், ஒரு வார்த்தை தான் அவளிடம் சொன்னேன், நீ ஸ்ட்ராங்கா இருந்தா தான் நானும் ஸ்ட்ராங்கா இருப்பேன், நீயே இப்படி கலங்கிட்டா நான் அவ்ளோதான் என்றேன், கண்களை துடைத்துக் கொண்டாள், நான் என்றால் உயிர் அவளுக்கு, அதன் பின் அவள் அழுகவில்லை.

நான் ஊட்டி போகணும் என்றேன், ஏன் எதற்கு என்று கேட்கவில்லை, எப்போ வருவீர்கள் என்றாள், நான் கூப்படறேன் என்று மட்டும் சொல்லி மீண்டும் ஏர்போர்ட் கிளம்பினேன்.

flight ஏறியவுடன் யோசிக்க ஆரம்பித்தேன், மிகப்பெரிய காரியத்தில் இறங்க போகிறேன், என்னால் இது முடியுமா, என்னிடம் இதை செய்து முடிக்க சக்தி இருக்கிறதா, என்னால் என் குடும்பத்துக்கு எந்த தீங்கும் வராதபடி என்னால் முடிக்க முடியுமா என்று 1000 முறை யோசித்து பார்த்தேன், அப்போது எனக்கு இருந்த கோபத்தை என் செயலில் காட்ட வேண்டும் என்று முடிவெடுத்தேன், நான் செய்யப்போவது தர்மமா அதர்மமா என்று தெரியாது, ஆனால் என்னை பொறுத்தவரை என் மனசு அமைதி ஆகும் வரை நான் எது செய்தாலும் தர்மம் தான் என்று முடிவெடுத்தேன்.

மணி: 8:00
பொழுது: இரவு
ஊட்டியே வந்தடைந்தேன், வீட்டுக்கு போனேன், ஒரு பெட்டி எடுத்தேன், நான் சேமித்து வைத்திருந்த ஒரு 10லட்சத்தை எடுத்துக்கொண்டேன். எங்கள் ஏரியாவில் ராஜபாண்டி என்று ஒருவர் இருக்கிறார், மில்அதிபர், அதுமட்டுமில்லாது கட்டப்பஞ்சாயத்து எல்லாம் செய்பவர்.