பழிக்குப்பழி 1 278

செரி வீட்டுக்கு போகலாம் என்று முடிவெடுத்து கிளம்ப ஆரம்பிக்கும் போது, டீன் கால் செய்தார். நான் சொல்லுங்கமேம் என்றேன். பவித்ரா அப்பாக்கு கூப்பிட்டேன், அவரு அவகிட்ட பேசி இருக்காரு, பேசுனதுல அவளுக்கும், உங்க பொண்ணுக்கும் ஆக்சிடன்ட் ஆனதா சொல்றாங்க, என்றார்.

அவர் ஆக்சிடன்ட் என்று சொன்னதுமே எனக்கு அதிர்ச்சியில் அந்த இடமே ஃபேடு அவுட் ஆகி, மயக்கம் வந்தது, நல்ல வேலையாக கீழே விழுகவில்லை, உட்கார்ந்து விட்டேன். ஃபோன் கைதவறி கீழே விழுந்தது, மூச்சு இறைத்து, நெஞ்சு பக்கம் வலி வேறு. கொஞ்சம் ஆசுவாசப்படுத்தினேன்.

மீண்டும் அவருக்கு கால் பண்ணினேன், என்னாச்சு சார் என்றார், ஒண்ணுமில்ல மேம், ஃபோன் கீழ விழுந்திடுச்சு என்றேன், எந்த இடத்துல இருக்காங்க, எந்த ஹாஸ்பிடல் என்று கேட்டேன், அவர் சொன்னதும் நோட் பண்ணிக்கொண்டேன்,

மணி: 11:00
பொழுது: காலை
என் மனைவியிடம் நான் வெளியூர் போகிறேன் என்று மட்டும் சொல்லி ஃபோனை கட் செய்து, காரை அங்கேயே போட்டுவிட்டு, ஃபிலைட் பிடித்து ஒரு மணிநேரத்தில் பெங்களூரு போனேன்,

ஹாஸ்பிட்டலையும் சென்றடைந்தேன், கண்களெல்லாம் கண்ணீர், தேடி ஓடினேன், பேரை கண்டுபிடித்தேன் ஐசியுவில் இருப்பதாக சொன்னார்கள், எனக்கு அப்போதே எதோ பெரிய அடி போல என்று புரிந்தது, ஐசியு போனேன், அங்கே என்னை உள்ளே அனுமதிக்கவில்லை, பிறகு நானும் டாக்டர் என்று சொல்ல, என்னை அனுமதித்தார்கள், என் அன்பு மகளை நான் பார்த்தேன், முகமெல்லாம் காயம், கீறல், கையில் கட்டு, காலில் கட்டு, உடம்பில் அடிபடாத இடமே இல்லை, அவள் இதய துடிப்பு சத்தமும், மெஷினின் கிலிங் கிலிங் சத்தம் மட்டுமே கேட்டது.