பழிக்குப்பழி 1 276

உள்ளே போனோம், அங்கே ஒரு 4 பசங்க உட்கார்ந்து இருந்தனர், பார்தாலே தெரிந்தது பணக்கார வீட்டு பசங்கள் என்று, நல்ல வாட்ட சாட்டமாக இருந்தார்கள். என்னை பார்த்ததும் எழுந்தார்கள், பவித்ரா உடனே, இவர் தான் கீர்த்தியோட டாடி என்றாள். அவர்கள் அதிர்ச்சியாக என்னை பார்த்தனர். நான் பக்கம் போய் ஐ யம் டாக்டர் ஜெயசூர்யா என்று கை நீட்டினேன், ஒருவன் விக்கி என்றான், இன்னொருவன் விஷ்ணு என்றான், இன்னொருவன் சம்பத் என்றான், கடைசி ஆள் ராஜ் என்றான். நல்லா இருக்கீங்களா என்றேன், நல்லா இருக்கோம் என்றார்கள்.

நான் ஓகே ப்பா, இன்னொரு நாள் மீட் பண்ணலாம் , என்ஜாய் யுவர் டே என்று சொல்லிவிட்டு, வாம்மா போலாம் என்று அவளை கூட்டிக்கொண்டு போனேன். ஏன் அங்கிள் இப்படி பண்ணீங்க என்றேன், இல்லமா பின்னாடி இவர்களால என்பொண்ணுக்கு எந்த பிரச்னையும் வந்துட கூடாதுல அதான் என்றேன். செரிமா உன்ன பத்தி சொல்லு என்றேன், எங்கம்மா, அப்பா, அண்ணா எல்லாருமே டாக்டர்ஸ் தான் அங்கிள்,

அண்ணா அமெரிக்கால இருக்கான், அம்மா, அப்பா இங்க தான் இருக்காங்க, ஒரு சின்ன சண்டை அதனால எங்கூட ஒரு, ஒரு வருஷமா பேசுறது இல்ல என்றாள். செரிமா நான் உன்னை கோயம்புத்தூர்ல விற்றவா என்றேன், அப்போ கீர்த்தி என்றாள், அவ அங்கேயே இருக்கட்டும், நாளைக்கு அவ அம்மாவை கூட்டிட்டு அங்க போயிருவேன் என்றேன்,

எப்படி அங்கிள் இவ்ளோ கூலா ஹாண்டில் பண்றீங்க என்றாள், முடுஞ்ச விஷயத்துக்கு ரியாக்ட் பண்ணி என்னமா யூஸ் இருக்கு என்றேன். செரி காலேஜ்ல ஏதும் சொல்லவேண்டாம் என்றேன். ச்ச ச்ச கண்டிப்பா சொல்லமாட்டேன் அங்கிள் என்றாள்.

இருவரும் ஃபிலைட் பிடித்து கிளம்பினோம்,
அவளை காலேஜ் ஹாஸ்டலில் விட்டிவிட்டு நான் ஊட்டி போனேன்.

என் மனைவி என்ன நடக்கிறது என்று தெரியாத குழப்பத்தில் தலையில் கைவைத்தப்படி உட்கார்ந்து இருந்தாள்.
போனவுடம் என்னங்க என்று ஓடி வந்தாள், எங்க நம்ம குழந்தை என்றாள், நான் அவளை கட்டிப்பிடித்துக்கொண்டேன், ஷாக் ஆகாத என்று சொல்லி, கீர்த்திக்கு பெங்களூர்ல ஆக்சிடன்ட் ஆயிடுச்சு என்றேன் அய்யயோ என்று அழுதாள், நான் இறுக்கி அணைத்துக்கொண்டேன், ஒன்னும் பயப்பட்றமாதிரி இல்ல, சீக்கிரம் குணம் ஆயிடுவா என்றேன். வாங்க உடனே போலாம் என்று அழுதாள், போ உனக்கு 10 நாளுக்கு தேவையான எல்லா துணியையும் எடுத்துக்க என்றேன். எதுக்கு 10 நாளு அவ்ளோ அடியா சொல்லுங்க என்றாள், என்னால் ஏதும் பதில் கூற முடியவில்லை, கொஞ்சம் கோபமாக சொல்றத மட்டும் செய் என்றேன்.