இடை அழகி மேடம் சங்கீதா 4 86

மெலிதான வெட்கத்தில் இருவரும் திசைக்கு ஒரு புறம் திரும்பி லேசாக சிரித்துக்கொண்டே மெதுவாக தலையை சாய்த்துக்கொண்டார்கள்….. பில் குடுக்க வந்த நபரிடம் “tissue please” என்று சங்கீதா கேட்க்கையில் எதேச்சையாக ராகவும் “tissue please” என்று அதே வார்த்தையை சொல்ல இருவரும் மீண்டும் ஒருவருக்கு ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர்…. – இந்த முறை கொஞ்சம் சத்தமாகவே சிரித்தனர் இருவரும்…. cafe coffee day வில் இருந்து கிளம்பிய பிறகு, இருவரும் மீண்டும் நடந்து செல்கையில், சங்கீதா உண்மையில் சற்றுமுன் ராகவிடம் பேசுகையில் அவளது 20 ஆண்டு காலத்தை பின் நோக்கி சில நிமிடங்கள் வாழ்ந்தாள் என்பதுதான் உண்மை…. மற்றபடி நிஜத்தில் தன்னை விட 15 குறைவான ஒரு வாலிபனுடன் பேசுகிறோம் என்ற எண்ணம் அவளுக்கு அப்போது தோன்றவில்லை…. அந்த விதத்தில் கால வெள்ளம அவளது மனதை அடித்து ச் சென்றது…. ரகாவிடம் மெதுவாக மீண்டும் பேச்சை ஆரம்பித்தாள்…. நீங்க கல்யாணம் செஞ்சிக்கலையா Raghav? i mean, i know you are just 23 but…. என்று சங்கீதா லேசாக இழுக்கையில்…. கண்டிப்பா பண்ணிப்பேன், ஆனா நம்ம சமுதாயம் சொல்லுற கண்டிஷன படி எல்லாம் என்னால் செஞ்சிக்க முடியாது….
என் மனசு உண்மையில் ஒரு பெண்ணுக்கு எங்கணும், அவள் இல்லாமல் வாழ்க்கையே இல்லைன்னு தொணனும் ஒரு ஒரு நிமிஷமும் அவளோடு இனைந்து காதலை அனுபவிச்சி வாழனும், அணு அணுவா அவள் அழகை ரசிக்கணும்…. அப்படி நான் ரசிக்க அதை பார்த்து அவள் வெட்கப்பட அதையும் பார்த்து ரசிக்கணும், அவளை மனைவி ஆக்கின பிறகும் காதல் குறையாமல் அவள் கூடவே இருக்கணும்… இப்படி எல்லாம் செய்யலேன்னா என்ன வாழ்க்கை மேடம்….? என்று அவன் தலையை ஆட்டி ஆட்டி கைகளை pant pocket உள் வைத்து பேசிக்கொண்டே வந்தான்…“இது ஏதோ டும் டும் டும் படத்துல மாதவன் சொல்லுற வசனம் மாதிரி தெரியுதே….”– என்று சொல்லி சிரித்தாள் சங்கீதா…என்னதான் அவள் கிண்டலாக சொன்னாலும் அவள் மனதில் ரகாவின் எண்ணங்கள் அவளுடைய எண்ணங்களோட ஒட்டி போவதை கவணிக்க தவறவில்லை…. அதே சமயம் மனதளவில் அவனுக்கு வரும் பெண் குடுத்து வைத்தவள் என்று எண்ணி, “that girl would be a lucky being” என்று சிரித்துக்கொண்டே சொன்னாள் சங்கீதா..

2 Comments

  1. This part have next leavel pa

Comments are closed.