இடை அழகி மேடம் சங்கீதா 4 86

சஞ்சனா ரகாவின் காதல் பற்றி, அவளின் பிறந்தநாளுக்கு ராகவ் அழைகாததுக்கு சஞ்சனா அவன் மீதுள்ள கோவத்தில் அனாவசியமாக விட்ட வார்த்தைகள் என்னென்ன!!, அதன் விளைவு எதில் சென்று முடிந்தது என்றும், mithun ராகவ் competition, மற்றும் mithun சந்தர்ப்பத்தை பயன் படுத்தி எப்படி ராகவ் சஞ்சனா காதலில் விளையாடினான் என்றும். கடைசியில் இதெல்லம் தெரிந்திருந்தும் ராகவ் எப்படி சஞ்சனாவிடம் பெரிய மனதுடன் பழகி, அவளின் தந்தைக்கு உதவி செய்து மறு வாழ்க்கை அளித்தான் என்றும், பிறகு எப்படி சஞ்சனாவுக்கு பாதுகாப்பு குடுத்து வருகிறான் என்று அனைத்தையும் வெகு விரைவாக அதே சமயம் தெளிவாக ரம்யாவுக்கு எடுத்துரைத்தாள் சங்கீதா.

அனைத்தையும் கேட்ட பிறகு, ரம்யாவுக்கு வார்த்தைகள் எதுவும் வரவில்லை. பிறகு மெல்ல பேச ஆரம்பித்தாள் “only one word madam” என்றாள்.

என்ன? – மென்மையாக சிரித்து, புருவங்களை உயர்த்தி தலையில் கை வைத்து சாய்ந்தவாறு ரம்யாவைப் பார்த்து கேட்டாள் சங்கீதா.

Raghav… – என்று one word answer சொல்வதுபோல பேசினாள் ரம்யா..

ஹாஹாஹ், என்னடி ரகாவ்க்கு? – மீண்டும் மெலிதாக சிரித்தாள் சங்கீதா.

he is chanceless madam.. very rare personality. உங்க கிட்ட இருக்குற ஒரு விஷயம் அவன் கிட்டயும் இருக்குறா மாதிரி தோணுது.

ஹ்ம்ம் சொல்லு என்னன்னு கேட்ப்போம்? – சுவாரஸ்யமாக கேட்டாள் சங்கீதா..

வெளித்தோற்றதுல மட்டும் personality யான ஆள் னு சொல்ல முடியாது, மனசலவிலும் ஒரு கம்பீரம் இருக்கு.

இதை ரம்யா சொல்லும்போது சங்கீதாவின் முகத்தினில் என்றும் தோன்றாத ஒரு வினோத சந்தோஷம் மலர்ந்தது.. அவள் சிரிக்கவில்லை ஆனால் புன்னகைத்தாள், கண்களும் ரம்யாவை பார்க்கவில்லை, வேறு என்கோதான் பார்த்தது. பொதுவாக தன்னை யாரேனும் ஒரு சின்ன வரியில் புகழ்தால் கூட மனது சத்தம் போடாமல் உள்ளுக்குள் சிறிதாக துள்ளிக்குதித்து ஆடும். அதே சமயம் நம் மனது மிகவும் மதிக்கும் ஒருவரை நம்முடனே ஒப்பிட்டு பாராட்டும்போது மணம் அனுபவிக்கும் அந்த ரகசிய ஆனந்தத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. ஆனால் அது நம் முகத்தினில் ஒரு பொலிவை உண்டாக்கும். அந்தப்பொளிவை ரம்யா சங்கீதாவின் முகத்தினில் கண்டாள். ஆனால் சங்கீதாவிடம் அதைப்பற்றி எதுவும் கூரிக்கொள்ளவில்லை, மேலே தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தாள்.
படையப்பா படத்துல வர்ற பாட்டுல ஒரு லைன் வரும் அதுதான் நியாபகம் வருது மேடம்..

ஹ்ம்ம்.. சொல்லு என்ன லைன்?

“ஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம் உன்னிடத்தில் கண்டேன்..”

ஹாஹாஹ்.. வாலு செம timing sense டி உனக்கு.. – இயற்கையாகவே முகத்தில் இருக்கும் பொலிவுடன் அவள் மென்மையாக சிரிக்கையில் அந்த சிரிப்பு அவளுடைய முகத்துக்கு இன்னும் அழகைக் கூட்டியது. அதை கவனிக்க தவறவில்லை ரம்யா.

2 Comments

  1. This part have next leavel pa

Comments are closed.