இடை அழகி மேடம் சங்கீதா 4 86

சங்கீதாவின் வார்த்தைகள் அவனுக்கு மிகவும் உந்துதலாக இருந்தது… முகத்தில் சற்று லேசாக சிரிப்பு வந்தது… “Thanks sangeetha… நன்றிக்கு அதை விட best word இருக்கனு தெரியல….” என்று கண்ணில் நன்றிகள் பொங்க கூறினான் ராகவ்….

சரி, நான் இப்போ bank க்கு கிளம்புறேன், டைம் கரெக்டா இருக்கும்.. – என்று சொல்லி சங்கீதா அந்த இடத்திலிருந்து கிளம்ப ராகவ் ஒரு நிமிடம் சங்கீதாவை நிற்க சொன்னான்…

சங்கீதா ஒரு நிமிஷம் இருங்க…

என்ன ராகவ்?..

அவளை இரு முறை சுத்தி சுத்தி வந்து தலை முதல் கால் வரை ப் பார்த்தான் ராகவ்….

ராகவ் என்ன பண்ணுற?… – சற்று பயமுடன் கேட்டாள் சங்கீதா, ஏனென்றால் ரகாவின் பார்வை அவளது தலையில் இருந்து கால் வரை ஊடுருவி ப் பார்த்ததை அவளும் கவனித்தாள்.

ராகவ் கடைசியாய் அவள் கிளம்பும்போது ஒரு பெரிய envelope cover ஒன்றை குடுத்து, This is a surprise, இதை வீட்டுக்கு ப் போயி படிச்சி பாருங்க… என்று சொல்லி குடுத்து அனுப்பினான்…

சரி எதுக்கு இப்போ சுத்தி சுத்தி பார்த்த?.. ஒதை வாங்குவா.. ஏன் அந்த envelope நான் இங்கே பார்க்கக்கூடாதா? என்று சங்கீதா கேட்க..

No, please its my request. – என்று புன்னகைத்தான் ராகவ்.

okay..என்று சொல்லி புறப்படும்போது ஏதோ நினைவுக்கு வந்து சங்கீதா திரும்பி பார்த்து ரகாவிடம் “உன்னோட அந்த cheatig girl friend எங்கே இருக்கா சொல்லு நானும் ஒரு பார்வை பார்க்கணும்…” என்று சொல்ல

எதுக்கு – என்று ராகவ் கேட்க…

சும்மாதான்..

அங்கே – என்று தனது ஆள்க்காட்டி விரலால் சங்கீதாவை இறக்கி விடும் வண்டியின் அருகே காமித்தான்…

அதிர்ந்தாள் சங்கீதா…

ராகவ் கை காமித்த இடத்தில் நின்றுகொண்டிருந்தது சஞ்சனா..

என்ன ராகவ் சொல்லுற அவளா? அவள் எப்படி உன் secretorya வேலை பார்க்குறா?.

2 Comments

  1. This part have next leavel pa

Comments are closed.