மதன மோக ரூப சுந்தரி – 1 53

“வெள்ளன நாலு அஞ்சு மணி இருக்கும்.. நல்ல உறக்கம் எனக்கு.. திக்குன்னு நெஞ்சுக்குழி அடிச்ச மாதிரி இருந்துச்சு.. திடீர்னு முழிச்சு பாத்தா.. பக்கத்துல புள்ளைய காணோம்.. தூரத்துல குறிஞ்சி போயிட்டு இருந்தா..!!”

“எங்க இருந்துதான் எனக்கு அப்படி ஒரு துணிச்சல் வந்துச்சோ.. நாம செத்தாலும் பரவால, நம்ம புள்ளையை அவளுக்கு காவு குடுக்க கூடாதுன்னு நெனச்சேன்..!!”

“விடாம அவளை வெரட்டிக்கிட்டே போயி.. அவ வீடு வரை போயி மல்லு கட்டி.. புடிவாதமா என் புள்ளையை புடுங்கிட்டு வந்தேன்..!!

“நாம பயப்பட பயப்படத்தான்டி பேய்க்கு பலம்.. எதுத்து நின்னமுன்னா எந்த பேயா இருந்தாலும் பணிஞ்சுதான் ஆகணும்..!! அப்படி எதுத்து நின்னுதான் உன் தாத்தனை நான் மீட்டுக் கொண்டாந்தேன்..!! அதனால.. பயத்தை விடுங்க மொதல்ல.. பயந்தான் பேயை விட பெரிய சனியன்..!!”

தானும் தாமிராவும் சிறுமிகளாக இருந்தபோது.. தைரியம் ஊட்டுகிற மாதிரி கொள்ளுப்பாட்டி சொன்ன கதை.. ஆதிராவுக்கு இப்போது நினைவுக்கு வந்தது..!!

கொள்ளுப்பாட்டியின் அந்த போதனைகள் எல்லாம் கடுகளவும் அப்போது ஆதிராவின் புத்தியில் ஏறவில்லை..!! அவளுக்கு ஏனோ துணிச்சல் என்பது.. ஆரம்பம் முதலே தூரத்து உறவாகவே இருந்தது..!! தூங்கும்போது கூட முகம் வரைக்கும் இழுத்துப் போர்த்திக்கொண்டே தூங்குவாள்..!! கையில் டார்ச்சுடன் அவளுடைய போர்வைக்குள் புகும் தாமிரா.. முகத்தை கோணலாக வைத்துக்கொண்டு.. அதை அக்காவுக்கு வெளிச்சமுமிட்டு காட்டியவாறு..

“பே…..!!!!!!!!!!!!!!!!!” என்று பெரிதாக கத்துவாள்.

“ஆஆஆஆஆஆ..!!” என்று பயத்தில் அலறி துடிப்பாள் ஆதிரா.

“பேயி.. பிசாசு..!!!” என்று தங்கையை வண்டை வண்டையாக திட்டுவாள்

“ஹாஹாஹாஹா..!!”

தாமிரா குலுங்கி குலுங்கி சிரிப்பாள்.. அக்காவை இந்த மாதிரி சீண்டுவதில் ஏனோ அவளுக்கு ஒரு அலாதி ப்ரியம்..!! பருவ வயது வந்த பிறகும் கூட.. பலமுறை அந்த மாதிரி பயந்தும் கூட.. அதே ட்ரிக்குக்கு திரும்ப திரும்ப அலறுவாள் ஆதிரா..!! அவ்வளவுதான் அவளுடைய துணிச்சலும் வீரமும்..!!

ஆனால்.. தாமிரா அப்படியல்ல.. இயல்பிலேயே மிக தைரியம் வாய்ந்தவளாக இருந்தாள்..!! அவளுடைய தைரியமும்.. அந்த தைரியம் தந்த துடுக்குத்தனமும்.. எல்லா சூட்சுமங்களை அறிந்து கொள்ள நினைக்கிற அவளுடைய ஆர்வமும்.. அந்த ஆர்வத்தினால் வீட்டிலுள்ள பொருட்கள் எதையாவது போட்டுடைப்பதும்..!!

“சர்க்கஸ்க்காரியா பொறக்க வேண்டியவ என் வயித்துல பொறந்து என்னை சாவடிக்கிறா..!!”

சிறுவயதில் தாமிராவை பூவள்ளி இந்தமாதிரித்தான் அவ்வப்போது கடிந்து கொள்வாள்..!! தாமிராவின் சுட்டித்தனமும் அவள் செய்கிற சேட்டைகளும்.. அடியையும் திட்டையுமே அவளுக்கு அடிக்கடி வாங்கித்தரும்..!! அமைதியும் அடக்கமும் ஒன்றாக உருவான ஆதிராவையே.. அனைவருக்கும் தாமிராவை விட அதிகமாக பிடித்து போகும்..!!