மதன மோக ரூப சுந்தரி – 1 54

“இந்தப்பாவம் உங்களை எல்லாம் சும்மா விடாது..!!” – ஆவேசமாக கர்ஜித்தாள் குறிஞ்சி.

அடுத்தநொடியே.. கையிலிருந்த பந்தத்தை புவனகிரி தூக்கியெறிய.. குறிஞ்சியின் உடலில் குப்பென்று தீப்பற்றிக் கொண்டது..!! உயிருடன் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தாள் குறிஞ்சி.. உடனடியாய் சதைகள் பொசுங்கிப்போக, உள்ளடங்கிய ரத்தநாளங்கள் வெடித்து சிதறின..!!

“ஆஆஆஆஆஆஆஆஆ..!!” ஆவிகொதிக்க அலறி துடித்தாள் குறிஞ்சி.

மலையுச்சியில் சூறைக்காற்று இப்போது திடீரென சுழற்றி அடித்தது.. நிலையாக நிற்கக்கூட முடியாமல் அனைவரும் தடுமாறினார்.. கையை முகத்துக்கு முன்னர் கொண்டு வந்து காற்றை மறைத்தனர்..!!

“ஆஆஆஆஆஆஆஆஆ..!!”

அலறிக்கொண்டே குறிஞ்சி உடலை முறுக்கி திமிறினாள்.. கட்டி வைத்திருந்த கயிறு இப்போது இற்றுப்போய் அற்றுக்கொண்டது..!! அக்னிஜுவாலை பற்றி எரிய.. அங்கும் இங்கும் அலறியடித்து ஓடினாள் குறிஞ்சி..!! ஊர்மக்கள் மிரண்டு போய் அந்த கோரக்காட்சியை பார்த்துக் கொண்டிருக்கையிலேயே.. திகுதிகுவென தீப்பற்றிய தேகத்துடன் மலையுச்சியில் இருந்து கீழே பாய்ந்தாள்..!!

அடித்த சுழல்காற்றுக்கு.. அவள் நேற்று அணிந்திருந்த சிவப்பு நிற அங்கி.. எங்கிருந்தோ இப்போது பறந்து வந்தது..!! பள்ளத்தாக்கில் அவள் பாய்ந்த திசையிலேயே.. அந்த அங்கியும் வீழ்ந்து அவளுடன் பயணித்தது..!!

ஆயிரத்து ஐநூறு அடி உயரமான சரிவில்.. அங்கமெங்கும் எரிகிற நெருப்புடன்.. ஆங்காங்கே பாறைகளில் முட்டி மோதியவாறு.. குறிஞ்சி கீழே சென்று கொண்டேயிருந்தாள்..!! இறுதியாக சமதளத்தை அடைந்து.. குழலாற்றின் தெளிந்த நீரை கிழித்துக்கொண்டு தொப்பென்று விழுந்தாள்.. அந்த ஆறும் அதற்காகத்தான் காத்திருந்தமாதிரி அவளை தனக்குள் வாங்கி புதைத்துக்கொண்டது..!! பறந்து சென்ற சிவப்பு அங்கியும்.. அவள் விழுந்த இடத்திலேயே சென்று விழ.. ஆற்றுச்சுழல் அதனை உள்ளிழுத்துக் கொண்டது..!!