வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் எட்டு 47

ஏய் ஓவர் சீன் போடாத? எங்களுக்காக உன் தம்பிகிட்ட பேசப் போறியா இல்லையா?

ஏய் போங்கடி! என்னதான், நான், என் தம்பிகிட்ட அதிகம் பேச மாட்டேன்னாலும், தெரிஞ்சே அவன் வாழ்க்கையை நான் கெடுக்க மாட்டேன். உங்கள்ல ஒருத்தியை என் தம்பிக்கு கட்டி வெச்சு, அவன் வாழ்க்கையை நான் நாசமாக்கனுமா? அதுக்கு அவனை காலத்துக்கும் பிரம்மச்சாரியாவே இருக்கச் சொல்லிடுவேன்…

ஏய்… ஓவரா பேசாதடி! எங்கள்ல ஒருத்தர் கூடவா உன் தம்பிக்கு மேட்ச் இல்லை. சும்மா ரொம்பத்தான்…

ஏய், அப்படி நம்ம கிளாஸ்ல இருந்துதான் ஒருத்தரை கட்டி வெக்கனும்னா…… என்று சொன்னவள் ஓரக்கண்ணால் லாவண்யாவைப் பார்த்தாள்.

இது வரை தன் தோழிகள் மதனைப் பற்றி சொல்லியதால் பொறாமை கொண்டிருந்த, அதற்கு பதிலளித்த அவன் அக்காவின் பேச்சுக்களால் கோபம் கொண்டிருந்த லாவண்யா, இப்போது அவளது சீண்டல் பார்வையில் படபடத்துப் போனாள்.

அவளைச் அதிகம் சீண்ட விரும்பாதவள், என் தம்பி யாரையாவது லவ் பண்ணி, அந்தப் பொண்ணும் திரும்ப லவ் பண்ணா, எனக்கு வயசு எப்படி இருந்தாலும் பிரச்சினை இல்லைப்பா என்று அதற்கு முற்றுப் புள்ளி வைத்தாள்.

அதன் பின் சில நாட்கள் கழித்து, லாவண்யாவிற்கு வேறொரு பிரச்சினை வந்தது. அது, அவளுடைய வகுப்புத் தோழன் விஜய், லாவண்யாவிடம் ப்ரபோஸ் பண்ணியதுதான். வெறும் ப்ரபோஸ் அல்ல அது. தன்னை கண்டிப்பாக திரும்பி லவ் பண்ணியாக வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதுதான், அவளுடைய பிரச்சினை.

ஏற்கனவே, அவன் தொடர்ந்து ஃபாலோ செய்வதும், அவளிடம் வழிவதும் என்று இருக்கும் போதே, அவன் எண்ணம் லாவண்யாவிற்கும், மதனின் அக்காவிற்கும் நன்கு தெரிந்தது. அதனாலேயே கொஞ்ச நாட்களாக அவனை அவாய்ட் செய்து வந்தாள் லாவண்யா.

அவனாக புரிந்து விலகிக் கொள்வான் என்று நினைக்கையில், திடீரென வந்து லவ்வைச் சொன்னதும், திரும்ப லவ் பண்ண வேண்டும் என்றதும் அவளுக்கு கடுப்பானது.

அவனை மீண்டும் அவாய்ட் செய்கையில், இரண்டு நாட்கள் கழித்து, அவன் நண்பன் ரமேஷூடன் வந்தவன், ஒழுங்கா லவ் பண்ணு, இல்லை ஆசிட் அடிக்கவும் தயங்க மாட்டேன் என்று மிரட்டி விட்டு சென்றான்.

அதில் மிகவும் பயந்து போனாள் லாவண்யா! அதை அப்படியே மதனிடம், அவனுடைய அக்கா, லாவண்யா சொல்லக்கூடாது என்று சொல்லியும் கேட்காமல், அவள் இல்லாத போது சொல்லிவிட்டாள்.

இதுக்கு எதுக்கு பயப்படுறா அவ? அவன் வீடு தெரியுமில்ல? நேரா, அவிங்க அம்மாகிட்ட போயி, உங்க புள்ளை இப்படி சொல்றாரு ஆண்ட்டி, நான் அவரை லவ் பண்ணட்டுமா, இல்ல ஆசிட் அடிக்க மூஞ்சியைக் காமிக்கட்டுமான்னு கேக்கச் சொல்லு. அவன் ஒரு ஆளுன்னு, பயப்படுறா இவ, என்கிட்ட மட்டும்தான் வீராப்பெல்லாம்… என்று முணுமுணுத்து விட்டு சென்றான் மதன்.

அதே சமயம், இந்தச் சந்தர்ப்பத்தை விடக் கூடாது என்று நினைத்த அவன் அக்காவோ, லாவண்யாவிடம்,

ஏண்டி அந்த விஜய் ஒன்னும் சின்னப் பையன் இல்லீல்ல? ஓரளவு நல்லாதானே இருக்கான். என்னா அரியர் வெச்சிருக்கான் அவ்ளோதானே? எப்டியும் உங்க வீட்ல, ஒரு நல்ல மாப்பிள்ளையை பாக்க மாட்டாங்க. அப்ப, பேசாம இந்த விஜய்யை லவ் பண்ண வேண்டியதுதானே என்று சீண்டினாள்.

ஏய் போடி! நீ எனக்கு சப்போர்ட் பண்ணுவன்னு பாத்தா, அவனுக்கு பேசுற?

உனக்காகத்தாண்டி பேசுறேன். அவனுக்கென்ன குறை? உன்னை விட வயசு கம்மியா? இல்லை கல்யாணம் பண்ணா, இந்த சொசைட்டிதான் ஏதாவது சொல்லுமா? அப்புறம் என்ன? அதுதானே உன் கவலை எப்பவுமே?

லாவண்யா முறைத்தாள்.

ம்க்கும்.. எங்ககிட்டதான் இந்த முறைப்பெல்லாம். அந்த விஜய்கிட்டன்னா பம்முவ! உனக்கெல்லாம், விஜய்தான் கரெக்ட்டு. புடிச்சா லவ் பண்ணு, புடிக்கலைன்னா, புடிக்கிற வரைக்கும் காத்திருப்பேன்னு சொல்றவனை எல்லாம் கண்டுக்க மாட்டீங்க! என்னமோ பண்ணு போ! என்று சென்று விட்டாள்.

ஆனால், அவனுடைய அக்காவிற்கு தெரியும். மதனின் காதல் லாவண்யாவின் மனதில் வேரூன்றுவதற்கான வாய்ப்பை அவள் ஏற்படுத்தி விட்டாள் என்று!

ஹாய், உங்கள்ல விஜய் யாரு? எனக்கு யார் விஜய் என்று தெரியும், இருந்தும் கேட்டேன்!

டேய், நீ மதன் தானே? ஃபர்ஸ்ட் இயர், ஜூனியர் இல்ல? அவனுடைய நண்பன் ரமேஷ், என்னை பதில் கேள்வி கேட்டான்!

ஆமா, ஃபர்ஸ்ட் இயர் தான்! நீங்கதான் விஜய்யா?

இல்லை, இவந்தான் விஜய். என்ன விஷயம்?

ஓ இவரா? ஹாய்!

எஸ், நான்தான் விஜய்! என்ன விஷயம்?

உங்க சிஸ்டர், ஹேமா, ____ காலேஜ்ல ஃபர்ஸ்ட் இயர் BSc படிக்கிறாங்கல்ல?

ஆமா, உனக்கு எப்படி அது தெரியும்?

Updated: April 2, 2023 — 7:38 am

2 Comments

  1. Raji un mail ku wait maa

  2. Nice going. Waiting for next part

Comments are closed.