வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் எட்டு 47

ப்ச்… அவதான் வர விட மாட்டேங்குறாளே? இப்ப நீ வேலை கொடுக்குறியா இல்லையா?

நீ இண்டர்வியூவுக்கு வந்திருக்கியா இல்ல இண்டர்வியூ பண்ண வந்திருக்கியா?

அவள் முறைத்தாள். பின் கேட்டாள், அவ உன்கிட்ட பேசுனாளா இல்லையா?

ஆமா! பேசுனா, ஆனா, என் செக்ரட்டரி வேலைதான் காலியா இருக்கு! அது ஓகேயா?

அவளுக்கு வேறு வழி தெரியவில்லை! ஓகே என்றாள்!

நாளையிலருந்து ஜாயின் பண்ணிக்கோ!

ஏன் இன்னைக்கே வேணா கூட…

நான் அவளைக் கூர்ந்து கவனித்தேன்! அவள் முகத்தில்ஒரு விதத் தவிப்பு தெரிந்தது!

இன்னிக்கு ஜாயிண் பண்ணிக்கிறதுல பிரச்சினையில்லை! ஆனா, இது என் செக்ரட்டரி போஸ்ட்! உன் திறமையைப் பத்தி எனக்கு தெரியும்! ஆனா, நீ மேக்சிமம் என் கூட பல மீட்டிங்க்கு வர வேண்டியிருக்கும்! பல அவுட்சைட் ட்ரிப்புக்கு கூடத்தான்!

இங்கியும் என்னைப் பாக்குறதுக்கு முன்னாடி, உன்னைதான் எல்லாரும் பாக்க வேண்டியிருக்கும்! அதுனால, நீ, இப்படி டல்லா, சோகமா, வந்தா அது நல்லாயிருக்காது! அது உனக்கு மரியாதையாவும் இருக்காது!

சோ, போயிட்டு நாளைக்கு வா! ஆனா, எனக்குத் தெரிஞ்ச லாவண்யாவா வா! இப்படி வராத! என் லாவண்யாவுக்கு, எவ்ளோ கஷ்டமான விஷயத்துலியும், எப்படி தன்னை மீட்டெடுத்துக்கனும்னு தெரியும். நான் வேண்டுமென்றே, என் லாவண்யா என்று சொன்னேன்.

அவள் முறைத்தாலும், வேறு வழியில்லாமல் ஒத்துக் கொண்டாள்!

அவள் செல்லும் போது சொன்னேன். நேரத்தைப் பாத்தியா, என் மூஞ்சிலியே முழிக்கக் கூடாதுன்னு சொன்ன, ஆனா, இப்ப டெய்லி, என் மூஞ்சிலதான் முழிக்கனும் நீ! இல்ல?!

அவள் கடுப்பானாள். எல்லாம் என் நேரம் என்ன பண்றது என்றாள். அவள் என்னிடம் சண்டைக்கு நிற்கும் போதும், உரிமையுள்ளவனிடம் எடுத்துக் கொள்ளும் சலுகை போல்தான் இருந்ததே ஒழிய, வெறுப்பின் சாயல் எங்கும் இல்லை. எல்லாரும் ரொமான்ஸ் பண்ணி லவ் பண்ண வைக்கனும்ன்னா, நம்மாளை சீண்டி விட்டுதான் லவ பண்ண வைக்கனும் போல என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டேன்

முறைத்தவளை அமைதியாக நெருங்கினேன். நான் நெருங்க நெருங்க, அவள் ஒரு வித தவிப்புக்கு உள்ளானாள். ஆனாலும், அசையாமல் அப்படியே நின்றாள். எவ்வளவு கோபமாகக் காட்டிக்கொண்டாலும், என்னுடனே இருக்கும் வேலை என்பது அவளுக்கு மகிழ்ச்சியையும், ஆறுதலையும் தந்தது என்பது தெரிந்தது.

பின் அவள் கண்களையேப் பார்த்துச் சொன்னேன். உனக்கு வேணா, என் முகத்துல முழிக்கிறது கஷ்டமா இருக்கலாம்! ஆனா, எனக்கு, இனி உன் முகத்துலதான் நான் முழிப்பேங்கிறது, ரொம்ப சந்தோஷமா இருக்கு! போய், நான் சொன்ன மாதிரி நாளைக்கு வா என்று சொல்லிவிட்டு விலகினேன்.

அடுத்த நாள் வந்தாள்! எதிர்பார்த்த மாதிரியே மாறியிருந்தாள்!

நான் அவளை ரசித்து விட்டு, முன்னிருந்த செக்ரட்டரியைப் போய் பார்க்கச் சொல்லி, அவளுக்கான வேலைகளை சொல்லிக் கொடுக்கச் சொன்னேன். நேற்று பழைய செக்ரட்டரி வந்திருக்கவில்லை.

அவள் ரூமை விட்டு விலகும் போது, கூப்பிட்டேன்!

லாவண்யா!

திரும்பிப் பார்த்தாள்! மெல்ல எழுந்து அவளருகில் சென்றேன். அவளையேப் பார்த்தேன்!

மேக் அப் இல்லாத முகமே, அழகாய் இருந்தது! உணர்வுகளைச் சொட்டும் அவள் கண்களும், முகமும், இன்று எந்தச் சலனமும் இல்லாமல் வெறுமையாய் இருந்தது. அது எனக்கு மிகுந்த வருத்தத்தைத் தந்தது! எந்த ஒப்பனையும் இல்லாத இயற்கையாகச் சிவந்திருந்த அவளது உதடுகள், கொஞ்சச் சொல்லி என்னைத் தூண்டின! அவளை இழுத்து அணைக்க வேண்டும் என்ற என் ஆர்வத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டேன்.

பின் சொன்னேன். குட்! இதான் நல்லாயிருக்கு! இப்படியே டெய்லி வா!

அவள் முறைத்தாலும், உள்ளுக்குள், நான் அவளை ரசிப்பதைக் கண்டு, வெட்கமடைந்திருந்தாள்.

ஏனோ தெரியவில்லை. காலையில் மிக நன்றாக இருந்தவள், மதியத்தில் ஒரு மாதிரி இருந்தாள். மிகவும் டிஸ்டர்ப்டாக, தவிப்புடன் இருந்தாள்.

என்ன ஆச்சு என்று கேட்ட என்னையும் வெறித்துப் பார்த்தாள். அவள் கண் கலங்கியிருந்தது. எனக்கே மிகவும் வருத்தமாயிருந்தது.

தலைவலியா? ஏன் இப்டி இருக்க? வந்த முதல் நாளே நீ இப்டி இருந்தா, எல்லாம் என்ன நினைப்பாங்க? ம்ம்ம்?

Updated: April 2, 2023 — 7:38 am

2 Comments

  1. Raji un mail ku wait maa

  2. Nice going. Waiting for next part

Comments are closed.