வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் எட்டு 47

அடுத்த நாள் யதேச்சையாக அவளும், என் அக்காவும் பேசியதைக் கேட்டேன்.

என்னடி, என்கிட்ட கூட எரிஞ்சு விழுந்தான். நீ கூப்பிட்டவுடனே கம்முனு வந்துட்டான்.

ரொம்பத்தாண்டி அவனை தலைக்கு மேல தூக்கி வெச்சுகிட்டு ஆடுறிங்க! நீங்கல்லாம் அவனைக் கெஞ்சி கூப்புட்டீங்க. ஒர்க் ஆகலை. சரின்னு, நான் போய் திட்டிக் கூப்பிட்டேன். ஒர்க் ஆகிடுச்சி! அவ்ளோதான்.

நீ திட்டுனியா? என்னை விட நீ பயந்த சுபாவம். நானே, சில சமயம் அவன் கோவமா இருந்தா பேச மாட்டேன். நீ எப்பிடிடீ திட்டுன?

தெரில்ல… நான் அதிகம் பழகாதவங்கன்னாதான் அமைதியா இருப்பேன். மதன்கிட்ட எனக்கு அப்படித் தோணலை!

ஓ… டெய்லி ரெண்டு மணி நேரம் பேசிக்கறீங்களோ?

பேசிதான் புரிஞ்சிக்கனும்னு அவசியம் இல்லை. இப்ப நீ மட்டும் என்ன, அவன் கூட டெய்லி ரொம்ப பேசுறியா? ஆனா, அவனை நீ புரிஞ்சிகிட்டதில்லை? அதே மாதிரிதான். நான் வந்ததுல இருந்து பாக்குறேன். நீ சொல்லிக் கேட்டிருக்கேன். அதை வெச்சு, நான் அவனை புரிஞ்சிகிட்டேன். நீயும் கூட, கொஞ்சம் தைரியமா, தாத்தாக்காக வந்து சாப்டுன்னு அதட்டிக் கூப்ட்டிருந்தா, அவனே வந்திருப்பான்.

எனக்கென்னமோ, தாத்தா மதியானமே சாப்பிடலியேன்னு அவனே ஃபீல் பண்ணிட்டு இருந்துருப்பான்னு தோணுது. அதே சமயம் கொஞ்சம் ஈகோ. அவ்ளோதான். நல்லவந்தான். இல்லாட்டி, என் விஷயத்துல தலையிட்டா, வீட்டுக்கு வர விட மாட்டேன்னு சொன்னதுக்கு, உன் சொத்தில்லை, உன் தாத்தா சொத்துன்னு திருப்பி திமிரா நான் பேசியும், அமைதியா சாப்பிட வந்திருப்பானா?

என்னடி சொல்ற? இப்படியில்லாமா பேசுன? உனக்குள்ள ஒரு ஜான்சி ராணி ஒளிஞ்சிருக்கிறதை இப்பதாண்டி பாக்குறேன்! ஹா ஹா!

ஏய் போடி!

அதைக் கேட்டு, எனக்கு அந்த இருவரின் மேலும் நம்பிக்கையும், அன்பும் கூடியது. என்னைச் சரியாக லாவண்யா கணித்திருந்ததும், கொஞ்சம் பயந்த சுபாவம் கொண்டவள், என்னிடம் அப்படி பேசியதும் பெரிய ஆச்சரியத்தை அளித்தது. ஏனோ இனம்புரியாத ஒரு உணர்வு மனதிற்குள் எழுந்தது.

வேண்டுமென்றே அன்று அவள் கிளம்பும் சமயத்தில் அவளைச் சீண்டினேன்.

நேத்து நான் சாப்ட்டுட்டேன். இப்ப, இது என் சொத்துதான? இப்ப நான் நினைச்சா உன்னை வர வேண்டாம்னு சொல்ல முடியுமில்ல என்று நக்கலாகக் கேட்டேன்…

இதுவரை தானாக பேசாத நான், அன்று பேசியது, அதுவும் வெறுமனே சீண்டலுக்காகத்தான் நான் பேசுகிறேன் என்று தெரிந்த என் அக்காவும், மிகவும் ஆச்சரியமாகி நின்றாள்.

சில நொடிகள் திகைத்த லாவண்யாவும், பின் சொன்னாள்.

சட்டம் தெரியாதா உனக்கு! சட்டப்படி, நீ இன்னும் மைனர். அதுனால டெசிஷன்லாம் நீ எடுக்க முடியாது தெரிஞ்சுதா. மேஜர் ஆன பின்னாடி, சொல்லு பாத்துக்கலாம்… என்று அவளும் சீண்டி விட்டுச் சென்றதைப் பார்த்து, என் அக்காவிற்கு இன்னும் ஆச்சரியமானது.

ஆனால், அவள் சென்றதையே பார்த்துக் கொண்டிருந்த என் உதடுகளில் பல நாட்கள் கழித்து ஒரு புன்னகை குடி வந்தது!

அதன் பின், நாங்கள் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. ஆனால், அவளது செயல்களை அவளையறியாமல் கவனிக்க ஆரம்பித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக அவள் என்னுள் நிரம்ப ஆரம்பித்தாள். அடுத்து வந்த சின்னச் சின்ன நிகழ்ச்சிகளிலெல்லாம், அவளுடைய செயல்கள் எனக்குள் சின்னச் சின்ன சலனங்களை ஏற்படுத்தின. தினமும் அவளுடைய வருகையை நான் எதிர் நோக்க ஆரம்பித்திருந்தேன்.

நான் +2வில் எடுத்த மார்க்குக்கு வாழ்த்து சொன்னாள். அவளும், என் அக்காவும் படிக்கும் கல்லூரியில் சேரும் என் முடிவுக்கு மகிழ்ச்சியடைந்தாள். நான் அவளுடைய கல்லூரியை தேர்வு செய்ததற்கு அவளும் ஒரு காரணம்.

அவள் மேலான என் காதல் வலுப் பெறுவதற்கு மிக முக்கிய சம்பவம் அப்பொழுது மீண்டும் நிகழ்ந்தது.

நான் +2 முடித்து விட்டு என்னச் செய்யப் போகிறேன் என்று சொல்லி, இரண்டு நாட்கள் கழித்து…

அன்று தாத்தா ஏனோ மகிழ்ச்சியாக இருந்தார். என் அப்பாவும், அம்மாவும் ஏதோ அலுவலக விஷயமாக வெளியூர் சென்றிருந்தார்கள். அடுத்த இரு நாட்கள், வார இறுதி.

தாத்தா, என்னையும், என் அக்காவையும் கூப்பிட்டார். லாவண்யா சமயங்களில், அக்காவுடன் தங்கி விடுவாள். அன்று அவளும் இருந்தாள்.

தாத்தா கொஞ்சம் பீடிகையுடன் ஆரம்பித்தார். எனக்கு இத்தனை நாளா கவலையா இருந்துச்சு. எனக்கு அப்புறம், உங்களுக்குன்னு யாரு இருக்கான்னு! ஆனா, உன் அக்கா வந்தப்பவே பாதி கவலை தீந்துருச்சு. ரெண்டு பேரும், ஒருத்தருக்கொருத்தர் இருக்கீங்கன்னு. மீதி கவலையும் கூட நேத்து தீந்துடுச்சு!

அக்காதான் கேட்டாள். என்ன தாத்தா சொல்லுறீங்க? அப்படி என்ன நடந்தது?

நேத்து உங்க அப்பாவும், அம்மாவும் வந்து என்னை பார்த்தாங்கம்மா! அவன் ரொம்ப மனசு நொந்து பேசுனான். முன்னல்லாம், காசுன்னு பேசுனவரு, இப்ப அடியோட மாறிட்டாரு. பெத்த புள்ளைங்களே வெறுத்து ஒதுக்குற வாழ்க்கை என்ன மாதிரியான வாழ்க்கை. நாங்களே ஒரு விதத்துல அனாதைங்கதான்னு ரொம்ப ஃபீல் பண்ணாங்க!

உங்க அப்பாவும் சின்ன வயசுல இருந்து பணத்துக்காக ரொம்ப கஷ்டப்பட்டிருக்காரு. இந்த உலகமும் காசில்லாதவங்களை என்னிக்குமா மதிச்சிருக்கு? அதான் காசு வேணும்ங்கிறதுக்காக சில தப்புகளை செய்ய வெச்சிருச்சு. அதனால தயவு செஞ்சு மன்னிச்சிருங்க, என்னையும் ஏத்துக்கோங்கன்னு கெஞ்சி கேட்டுகிட்டாரும்மா!

Updated: April 2, 2023 — 7:38 am

2 Comments

  1. Raji un mail ku wait maa

  2. Nice going. Waiting for next part

Comments are closed.