வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் எட்டு 47

நீ எதுவும் திட்டலை? என்று என் அக்காவை அமைதியாகக் கேட்டேன்!

என்னையே பார்த்தவள் சொன்னாள். எனக்கு உன்னைப் பத்தியும் தெரியும், அவளைப் பத்தியும் தெரியும்! ஆனா, அவளுக்குதான், ஒரு விஷயம் கண்ணை மறைக்குது!

கொஞ்ச நேரம் நிறுத்தியவள், நீ என்னமோ பண்ணியிருக்க, அது மட்டும் புரியுது! இல்லாட்டி அவிங்க கூட, சிரிச்சி பேசியிருக்க மாட்ட. ஆனா, அவ, நீ சிரிச்சிதை மட்டும்தான் பாத்திருக்கா! அதான் தப்பா எடுத்துகிட்டா!

ஆனா, எனக்கே புரியாத விஷயம் ஒண்ணு இருக்கு.

நான் அவளையே பார்த்தேன்.

விஜய் லவ் சொன்னப்ப, பெருசா கண்டுக்காதவ, அவன் ஆசிட் அடிச்சிடுவேன்னு சொன்னப்ப கூட, பயந்தாலும், கண்டுக்காம விட்டுடலாம்னு சொன்னவ, அவங்ககிட்ட சண்டைக்கு போகாதவ, நீ அவங்க கூட சிரிச்சி பேசினதுக்கே இவ்ளோ கோவப்படுறா! உன்கிட்டயே வந்து சண்டை போடுறா! இந்த லாவண்யா எனக்குப் புதுசு!

அவ உன்னை, கொஞ்சம் வேற இடத்துல வெச்சிருக்கா!

நீ செஞ்சதை விட, செஞ்சது நீ, அப்படிங்கிறது தான் அவளை ரொம்ப அப்செட் பண்ணியிருக்கு! ஏதோ மறைக்கிறா என்கிட்ட!

நான் கண்களை விரித்துக் கேட்டுக் கொண்டிருந்தேன்!

அவள் புன்சிரிப்புடன் கேட்டாள்,

என்னடா நடக்குது?

நான் உள்ளுக்குள் யோசித்தாலும், கடுப்பாய் சொன்னேன். அவளையே போய் கேளு!

அடுத்த நாள், விஜய் போய் கல்லூரியில், அவளிடம் சாரி சொல்லியிருந்தான். மதன் அவளுக்காக சண்டைக்கு வந்ததையும் சொன்னான்.

ப்ரேம் தனிப்பட்ட முறையில் என் அக்காவுடன் சேர்ந்து, அவளைச் சீண்டியிருக்கிறான், நட்பாக!

அப்படி ஒரு ஹீரோ லவ்வையே அக்செப்ட் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னதுக்கப்புறம், விஜய் வந்து லவ்வைச் சொன்னா கொஞ்சம் கடுப்பாத்தான் இருக்கும், இல்லையா லாவண்யா?

அதன் பின் என் அக்கா, வீட்டுற்கு வந்தவுடன், அவளிடம் வேண்டுமென்றே, சண்டையிட்டாள்!

நேத்து, என்னான்னு தெரியாமியே அவனைத் திட்டுன? இப்ப என்ன பண்ணப் போற? அவன் எவ்ளோ ஃபீல் பண்ணான் தெரியுமா?

யாரு, அந்த சிடுமூஞ்சி ஃபீல் பண்ணுச்சா? இதை என்னை நம்பச் சொல்றியா?

ஏய், என் தம்பி சிடு மூஞ்சிதான்! நீ ரொம்ப யோக்கியமா? நீ ஏண்டி நேத்து அழு மூஞ்சியா இருந்த?

அது, இவன் எப்படி, அப்டி பண்ணலாம்னு, சின்ன கோவம்! அதான்!

அதுக்கு, அப்புடித்தான் திட்டுவியா? நானே அவனை திட்டினதில்லைடி!

விஜய் தப்புக்கு, அவன் சாரி கேட்டுட்டான்! நீ பண்ன தப்புக்கு என்ன பண்ணப் போற? போய் சாரி கேளு!

அதெல்லாம் நான் தனியா கேட்டுக்குறேன்!

நேத்து திட்டுறப்ப மட்டும், என்னை வெச்சுகிட்டே திட்டுன! இப்ப சாரி கேக்கனும்னா வலிக்குதோ!

ஏய், நான், மதன்கிட்ட பேசிக்கிறேன். நீ, உன் வேலையைப் பாரு!

அது சரி, நீங்க லவ் பேர்ட்ஸ், உங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும்! நமக்கெதுக்கு இந்த வம்பு என்று நக்கலாகச் சொன்னாள்?!

இது எல்லாமே, என் வீட்டில், என் முன்பே நடந்தது! நான் அதை கண்டு கொள்ளாமல் லேப் டாப்பில் நோண்டிக் கொண்டிருந்தேன்! அவள் எவ்வளவு கோபித்தாலும், உள்ளுக்குள் சந்தோஷமாக இருந்தது போல் தோன்றியது எனக்கு!

என் அக்காவின் முன் எதுவும் சொல்லாதவள், பின் கிளம்பும் போது, என்னருகே வந்து சாரி என்று மெல்லியதாகச் சொன்னாள்! பின், தாங்க்ஸ் என்றும் சொல்லி விட்டும் சென்றாள்!

அதன் பின், என் அக்கா, நான் இருக்கும் போது, அவளை அதிகம் சீண்டுவாள்! அவளுக்கும் அது லேசாக பிடித்திருக்கும் போலிருந்தது! இருந்தாலும் கோபித்துக் கொள்வாள்! கோபித்தாலும், ஓரக்கண்ணால் என்னைப் பார்ப்பாள்!

அவள் இருக்கும் போது, வேண்டுமென்றே, எங்களை ஐஸ்கிரீம் பார்லருக்கோ, ஏதாவது கடைக்கோ கூட்டிச் செல்லச் சொல்வாள்! அவ்வப்போது, என்னை வைத்து அவளைச் சீண்டினாலும், நான் கண்டு கொள்வதேயில்லை!

இந்தக் கண்ணா மூச்சி ஆட்டம், நான் இஞ்சினியரிங் முடித்து ஐ ஐ எம் செல்லும் வரை தொடர்ந்தது!

இடையில், எங்களுள்ளான, புரிதல் வளர்ந்திருந்தது! அவளும் வேலைக்கு செல்லத் தொடங்கியிருந்தாள்! அவளது குடும்பத்தின் பிரச்சினை, கொடுமையும் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது!

நான் ஐஐஎம் க்கு செல்லும் நாள், அவளும் வீட்டுக்கு வந்திருந்தாள்! செல்லும் போது அக்கா ரொம்ப ஃபீல் பண்ணாலும், நான் வழக்கம் போல என் உணர்வுகளைக் காட்டவில்லை. தாத்தாவைப் பாத்துக்கோ என்று மட்டும் சொன்னேன்!

லாவண்யாவும், ஆல் தி பெஸ்ட் அண்ட் டேக் கேர் என்றாள்!

Updated: April 2, 2023 — 7:38 am

2 Comments

  1. Raji un mail ku wait maa

  2. Nice going. Waiting for next part

Comments are closed.