வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் எட்டு 47

ஏன்னா உங்க கிட்டதான், பாசம்னு சொல்லி ஏமாத்த முடியும். தவிர, நீங்கதான், உங்களுக்கு அப்புறம் இவிங்களுக்கு என்ன வழின்னு ரொம்ப வருத்தப்பட்டுக்கிட்டு இருக்குறீங்க! ஒருவேளை அவிங்க எமாத்தனும்னு நினைச்சா, உங்களைத்தான், அவிங்களால ஈசியா ஏமாத்த முடியும்! அதான்!

லாவண்யாவின் கேள்விகளில் இருந்த தர்க்கம், எல்லாரையும் யோசிக்க வைத்தது. சிறிது நேர யோசனைக்குப் பின், தாத்தாதான் சொன்னார்.

நீ சொல்றது சரிதான்மா! நானே கொஞ்சம் ஏமாந்துட்டேன். ச்சே! அவிங்களைக் கூப்பிட்டு, கட் அண்ட் ரைட்டா, இது ஒத்து வராதுன்னு சொல்லிடுறேன்!

அதற்கும் பதில், லாவண்யாவே சொன்னாள்.

அவசரப்படாதீங்க தாத்தா! நான் சொன்னது எல்லாமே என் டவுட்டுதான். எதுவும் கன்ஃபர்ம் கிடையாது. அப்படியிருக்கிறப்ப, சந்தேகத்தின் பலனை அவிங்களுக்கும் கொடுக்கனுமில்லையா? ஒரு வேளை அவிங்க உண்மையாலுமே மனசு மாறியிருந்தா?

தாத்தா சிரித்துக் கொண்டே சொன்னார். சரி, நான் என்ன பண்ணனும்ன்னும் நீயே சொல்லும்மா!

இதையேச் சொல்லுங்க தாத்தா. முதல்ல, பையன்கிட்டயும், பொண்ணுகிட்டயும் பாசம் காட்டச் சொல்லுங்க. அவங்க, அப்பா, அம்மாவா எத்துக்குற வரைக்கும் பொறுமையா நடந்துக்கச் சொல்லுங்க. அவிங்க ஏத்துகிட்டா, நீங்க ஏத்துக்குறதுல எந்தப் பிரச்சினையும் இல்லைன்னு சொல்லுங்க என்று சொல்லி நிறுத்தியவள்… பின் தயங்கிச் சொன்னாள்.

அதுனால, இப்போதைக்கு மதன் இங்கியேதான் படிப்பான். ஹைதராபாத்லாம் போகலைன்னு சொல்லுங்க என்றாள்.

தாத்தா சரி என்று சொன்னார். ஆனால், அக்காவோ, அவளையே யோசனையாகப் பார்த்தாள்.

என்னடி அப்படி பாக்குற? நான் சொன்னது தப்பா?

நீ சொன்னது எல்லாம் சரிதான். ஆனா, நீ இன்னும் முழுசா உன் மனசுல இருந்ததைச் சொல்லலைன்னு தோணுது!

ஏய்… அப்படில்லாம் இல்லை என்று பதறினாள் லாவண்யா!

உண்மையைச் சொல்லு, அவிங்க இது மாதிரி ஒரு ப்ளானோட தாத்தாவை அப்ரோச் பண்ணதுக்கு பின்னாடி ஏதோ ஒரு காரணம் இருக்கும்னு நீ நம்புற! அப்படித்தானே? அது என்னான்னு சொல்லு!

இ… இல்லடி… அது வ… வந்து.

சரி இப்பச் சொல்ல வேணாம். ஒருவேளை, நீ சொன்னது மாதிரி, தாத்தா நடந்ததுக்கப்புறம், அவிங்க ஏமாத்ததான் நினைச்சாங்கன்னு தெரிஞ்சா, அதுக்கப்புறம் நீ சொல்லு! ஓகே?!

ஓகேடி!

அப்ப, நான் நினைச்ச மாதிரியே, உண்மையாலுமே, முழுசா உன் மனசுல இருந்ததைச் சொல்லலை, அப்படித்தானே?!

அக்காவின் கிடுக்கிப்புடி கேள்வியில் லாவண்யா திணறினாள்…

அக்காவோ புன்னகையுடன் சொன்னாள். சரி, நான் நினைச்சது சரியான்னு தெரிஞ்சிக்கதான் அப்படி கேட்டேன். நீ இப்ப எதுவும் சொல்ல வேண்டாம். அப்புறமாச் சொல்லு.

அவர்களுக்கிடையேயான புரிதல், எனக்கும், தாத்தாவுக்கும் நெகிழ்ச்சியாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது.

இப்படி ஒரு நட்பிற்காக, அக்கா ஆரம்பத்தில் இருந்து, அவள் துணை நிற்பது, மிகவும் சரியே என்று தோன்றியது.

திட்டப்படியே, அவர்கள் ஊரில் இருந்து வந்தவுடன், தாத்தா கொஞ்சம் பிடி கொடுக்காமல் இருந்து, ஒரு 5 நாட்கள் கழித்து, அவர்களிடம் லாவண்யா சொன்ன படியே சொன்னார்.

நீங்க, அவிங்ககிட்ட அன்பா முதல்ல நடந்துக்கோங்க என்று சொன்ன போது கூட லேசாக கடுப்படைந்தாலும், அமைதியாக இருந்தவர்கள், மதன் இங்கதான் படிப்பான், ஹைதராபாத் போக மாட்டான் என்று சொன்னவுடன் வெளிப்படையாக கோபமடைந்தார்கள்.

கோபத்துடன், நீங்கதான் அவிங்களைக் கெடுக்குறீங்க. உங்க காலத்துக்கப்புறம் அவிங்களுக்கு யாரும் துணை வேணாமா? இப்படியே இருங்க என்று கத்தி விட்டுச் சென்றனர்.

முன்பாயிருந்திருந்தால், தாத்தா அதிர்ச்சியடைந்திருப்பாரோ என்னமோ, லாவண்யாவின் பேச்சிலேயே ஓரளவு சுதாரித்திருந்தவர், இவர்களின் கோபத்தால் அதிர்ச்சியடையவில்லை.

Updated: April 2, 2023 — 7:38 am

2 Comments

  1. Raji un mail ku wait maa

  2. Nice going. Waiting for next part

Comments are closed.