வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் எட்டு 47

உங்க அம்மாவும் கூட, நான் வந்ததுல இருந்து மதன் என்னை நெருங்கவே விடலை. என்னை எதிரியாவே பாக்குறான். சின்ன பையன் மனசு கஷ்டப்படக் கூடாதுன்னுதான் நான் தள்ளி நின்னேன். மத்த படி நான், மதன்கிட்ட கோபமாவோ, வெறுப்பாவோ பேசி நீங்க பாத்திருக்கீங்களா?

பெத்த புள்ளை, வளர்க்க வேண்டிய புள்ளை ரெண்டு பேரையும் தள்ளி நின்னே பாக்க வேண்டிய கொடுமை யாருக்கும் வரக் கூடாதுன்னு ரொம்ப ஃபீல் பண்ணாங்க. யோசிச்சு பாத்தா, அவிங்க சொன்னது எல்லாம் உண்மைதான்னு தோணுது!

இப்பிடியே எத்தனை நாள், எல்லார் மேலியும் வெறுப்பை காட்டிகிட்டு இருக்க முடியும்? அதுனால, யாருக்கு என்ன பலன்?

அதான் உங்ககிட்ட பேசுறேன். இப்ப எனக்கும் நிம்மதியா இருக்கு. உங்க அப்பா அம்மாவும் திருந்திட்டாங்க. உங்களுக்கும், நீங்க இழந்த அன்பு, பாசம்லாம் இனி கிடைக்கும். எல்லாரும் சந்தோஷமா இருக்கிறதைத் தவிர வேற என்ன எனக்கு வேணும்? என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார்.

எனக்கு, என் அக்காவிற்கும் கூட மனம் கொஞ்சம் நெகிழ்ந்திருந்தது. அதே சமயம் உள்ளுக்குள் கோபமும் இருந்தது. செய்யுறதெல்லாம் செஞ்சுட்டு, இப்ப மன்னிப்பு கேட்டா ஆச்சா? அது மன்னிப்பு கேட்ட உடனே கொடுத்துடக் கூடிய தப்பா? என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்தது.

அதே சமயம், இந்த நிகழ்ச்சி தாத்தாவிற்கு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் கொடுத்திருக்கிறது என்ற உண்மையும் புரிந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, எங்களுக்குள்ளேயே, இனி வழக்கம் போல, ஒரு இயல்பான குடும்பமாக நாங்கள் இருக்க முடியும், எல்லா மகிழ்ச்சிகளும் எங்களுக்கும் கிடைக்கும் என்ற செய்தி ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்திருந்தது.

என்ன இருந்தாலும் பெண் என்பதோடு மட்டுமல்லாமல், இயல்பிலேயே கருணை கொண்டவள் என்பதால், அக்காவும் மிக இளகி இருக்கிறாள், உள்ளுக்குள் இது நல்லது என்ற மனநிலையில் இருக்கிறாள் என்பது அவள் முகத்திலேயே தெரிந்தது.

அப்பொதுதான் லாவண்யா பேசத் தொடங்கினாள்!

இது உங்க குடும்ப விஷயம். நான் தலையிடக் கூடாது. இருந்தாலும், என் ஒபீனியனைச் சொல்லலாமா தாத்தா?

என்னமா இப்படி கேக்குற? நீயும் எனக்கு பேத்தி மாதிரிதாண்டா! அதுனாலதான் உன் முன்னாடி இந்த விஷயத்தை பேசுறேன்.

இல்ல, இவளுக்கும், மதனுக்கும் திரும்ப, அவிங்க அப்பா அம்மாவோட பாசம் கிடைக்குதுங்கிறது நல்ல விஷயம்தான். ஆனா, நான் விரும்புறதெல்லாம், அது உண்மையா இருக்கனும்னுதான், இன்னொரு பெரிய ஏமாற்றம் அவங்களுக்கு கிடைச்சிடக் கூடாதுன்னுதான் பயப்படுறேன்.

அக்கா அவளையே ஆழமாகப் பார்த்தாள். தாத்தாவோ குழப்பமாகப் பார்த்தார். நான் அமைதியாக வேடிக்கை பார்த்தேன், வழக்கம் போல!

நீ என்னம்மா சொல்ற? எனக்குப் புரியலை.

தாத்தா, என்னைத் தப்பா நினைச்சிக்காதீங்க. நான் இப்பவும் யாரையும் குற்றம் சாட்டலை. எனக்குள்ள சில சந்தேகங்கள். அதுனாலத்தான் இப்படிச் சொன்னேன்.

சரிம்மா, உனக்கு என்ன சந்தேகம்னு சொல்லு. எங்களுக்கும் புரியுமில்ல?!!

ஏன் தாத்தா, அவிங்க சொன்னது உங்களுக்கு கண்டிப்பா சந்தோஷமா இருந்திருக்கும். அவிங்க, இதை மட்டும்தான் சொன்னாங்களா? இல்ல வேறெதாவது சொன்னாங்களா?

வேற! என்று யோசித்தவர், மெயின் விஷயம் இதுதான்மா. அப்புறம், தன் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணனும், இப்பருந்து பாக்க ஆரம்பிச்சா, காலேஜ் முடிச்சிட்டு பண்ணிடலாம். இதுவரை நீங்க எங்களுக்கு செஞ்சதுக்காக, நீங்களே உங்களுக்குப் பிடிச்ச மாதிரி மாப்பிள்ளை பாருங்க, என்ன வேலை செய்யனும்னு மட்டும் எங்களுக்குச் சொல்லுங்கன்னாங்க! அதுல எதுவும் தப்பு இருக்குறதா எனக்கு தெரியலையேம்மா…

வேற ஏதாச்சும்?

வேற….. என்று யோசித்தவர், ஆங்… நம்ம மதனை, அவன் ஆசைப்பட்ட படி, IIM ல MBA படிக்க வைக்கனும். ஹைதராபாத்ல, IIM க்கு பெஸ்ட் ட்ரெய்னிங் இன்ஸ்டியூட் இருக்கு. அங்க இருக்குற IIT ல சேத்துட்டு, அப்படியே அந்த ட்ரெயினிங் இன்ஸ்டியூட்ல சேக்கலாம், அங்க வேலை செய்யுறவரை எனக்கு நல்லா தெரியும். நான் அவர்கிட்ட உடனே பேசுறேன்ன்னு சூப்பர் ஐடியா சொன்னாரும்மா? இது ரெண்டுதான் சொன்னாரு!

அடுத்து லாவண்யா கேட்ட கேள்வி, எல்லாரையும் அதிர வைத்தது!

மதன் IIM ல படிக்க ஆசைப்பட்டது, அவிங்களுக்கு எப்படி தெரியும்?

Updated: April 2, 2023 — 7:38 am

2 Comments

  1. Raji un mail ku wait maa

  2. Nice going. Waiting for next part

Comments are closed.