வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் எட்டு 47

இல்ல, நான் அவிங்களை லவ் பண்றேன்! அவிங்ககிட்ட போய் லவ்வைச் சொன்னா, எப்பிடியும் உங்ககிட்ட சொல்லலாம் இல்லையா? அதான் நேரா உங்ககிட்டயே சொல்லிடலாம்னு! நீங்க வேணா உங்க சிஸ்டர்கிட்ட பேசுறீங்களா?

விஜய் மட்டுமல்ல, அவன் நண்பர்கள் இருவரும் கூட கோபம் அடைந்திருந்தனர்! விஜய் என்னைப் பிடித்து கீழே தள்ளினான்!

டேய், என்ன திமிரா? யார்கிட்ட விளையாடுற?

மெல்ல எழுந்தேன். அவனைப் பார்த்து சிரித்தேன்!

என்ன சீனியர், அமைதியா லவ்வைச் சொன்னதுக்கே இவ்ளோ கோவப்படுறீங்க?

அவன் நண்பன், ரமேஷ் சொன்னான், டேய், இன்னிக்கு சாவப் போற நீ? அடி வாங்கி செத்துடாத, ஓடிடு!

நான் விஜய் தங்கச்சியை லவ் பண்றேன்! அதை அவருகிட்ட சொல்றேன். இடையில நீங்க யாரு? ஓ, மாமன் மச்சான்னு, விளையாட்டுக்குப் பேசிக்கறீங்கன்னு நினைச்சேன்! இல்லையா? உண்மையாலுமேவா?

இப்போது ரமேஷ் கோபம் அடைந்திருந்தான்!

டேய், என்று என் சட்டையை இறுகப் பற்றினான்!

உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயம்ன்னா, ஒழுங்கா தள்ளி நில்லுங்க, இல்லாட்டி கேள்வி வரத்தான் செய்யும்!

இப்போது அவன் அடிக்க கை ஓங்கியிருந்தான்!

நான் அவன் கையைப் பிடித்து நிறுத்தினேன்! இதுவரையிலான எனது உடற்பயிற்சிகளும், நான் சென்றிருந்த கராத்தே கிளாஸ்களும், இதைப் பற்றி எதுவுமே தெரியாத இவர்களை, என் முன் தூசு போல் காட்டியது!

இருந்தும் சொன்னேன், நீங்க என்னை 10 அடி அடிச்சாலும் எனக்கு அசிங்கமில்லை! ஆனா, நான் திருப்பி ரெண்டு அடி அடிச்சாலும், காலேஜ்ல உங்களுக்குதான் அசிங்கம்! ஏன்னா, நீங்க சீனியர், நான் ஜீனியர்!

தவிர, நான் கராத்தே, மார்ஷல் ஆர்ட்ஸ்லாம் போயிருக்கேன், நிமிஷத்துல உங்களை என்னால அடிச்சிட முடியும். அதுனால கொஞ்சம் யோசிச்சி கை வைங்க!

எனது தைரியமும், தெனாவெட்டான பேச்சும் அவனை கொஞ்சம் யோசிக்க வைத்தது! தவிர தூரத்தில் இருந்து சிலர் இதை கவனிப்பது போலும் இருந்தது! இது தன்மானப் பிரச்சினையாச்சே?

ஆனாலும், விஜய் கொலை வெறியில் இருந்தான்! என்னா மிரட்டுறியா? அடிச்சிட்டு போயிடுவியா? எங்கன்னாலும், இங்கதான் வந்தாகனும்! சீனியர்ஸ் மேல கை வெச்சிட்டு தைரியமா இருந்துடுவியா?

ஹலோ, நான் அடிக்கல்லாம் வரலை. லவ்வைச் சொல்லத்தான் வந்தேன். நீங்கதான் சண்டைக்கு வர்றீங்க! என்னை அடிக்க வந்தா, நான் ஒண்ணும் வேடிக்கை பாத்துட்டிருக்க மாட்டேன்! பிரிச்சு மேஞ்சுடுவேன்!
இப்போதுதான், அவனுடைய இன்னொரு நண்பன் ப்ரேம் வாய் திறந்தான்? டேய், நானும் பாக்குறேன், ஓவரா போயிட்டிருக்க! என்ன நினைச்சிட்டிருக்க? உனக்கு கராத்தே தெரியும்னு திமிரா? பாத்துரலாமா?

அந்தக் கூட்டத்திலேயே நல்லவன் ப்ரேம்தான்! அதனால், அவனுக்குரிய மரியாதையை கொடுக்க நினைத்தேன்!

ஏன் சீனியர், இவிங்க சிஸ்டர்ன்னா, லவ் பண்றேன்னு சொல்றது கூட கொலைக் குத்தம்! ஆனா, இன்னொரு பொண்ணுன்னா, லவ் பண்ணாட்டி, ஆசிட் அடிச்சிருவேன்னு கூட இவிங்க மிரட்டலாம் இல்லை?

இப்போதுதான் அவர்களுக்கு ஏதோ விஷயம் புரிவது போல் இருந்தது! ஏற்கனவே, ப்ரேம், அதற்காக விஜய்யை திட்டியிருந்தான்.

இருந்தும் இப்போதும், ரமேஷ் திமிறினான்! டேய், லாவண்யாகிட்ட லவ்வைச் சொன்னா, உனக்கு என்னடா வந்தது?

ப்ரேமை பார்த்துக் கொண்டிருந்தவன், அவனை முறைத்தேன். விஜய் தங்கச்சிகிட்ட, நான் லவ்வைச் சொன்னா, உனக்கு என்னடா வந்தது? ப்ரண்டு தங்கச்சிக்காக நீ வரலாம், அக்காவோட ஃப்ரண்டுக்காக நான் வரக் கூடாதா?

நான் இவன் தங்கச்சியை லவ் பண்றேன்னு சொன்னாலே உங்களுக்குல்லாம் கோவம் வரும்? ஆனா, இன்னொரு பொண்ணுகிட்ட, லவ் பண்ணாட்டி, ஆசிட் அடிப்பேன்னு சொல்றதுக்கு, உங்களுக்குல்லாம் நாக்கு கூசலை இல்லை?

ப்ரெண்டு லவ் பண்றேன்னு சொன்னா, அதுக்கு ஹெல்ப் பண்ணு! அவன் ஆசிட் அடிப்பேன்னு சொன்னப்ப, நீயும் வேடிக்கை பாத்துட்டுதானே நின்னிட்டிருந்த? அசிங்கமா இல்ல? இதுக்கு பேருதான் ஃப்ரண்ட்ஷிப்பா?

என் கேள்வி அவர்களை அமைதியாக்கியிருந்தது! ப்ரேமுக்கும் அது சரியென்று தோன்றியதால், என்னைத் தடுக்கவில்லை! இருந்தும் நான் தொடர்ந்து திட்டுவதால், என்னை தடுக்கக் கேட்டான்!

அப்படின்னா, இவன் லவ் பண்ணக் கூடாதா மதன்?

நான் ப்ரேமை பார்த்தேன். என்ன சீனியர் பேசுறீங்க? நான் என்ன, லவ் பண்ண வேணாம்னு சொன்னேனா? போய் லவ்வைச் சொல்லட்டும்! அவ ஒத்துகிட்டா, லவ் பண்ணட்டும், இல்லாட்டி மூடிட்டு இருக்கனும்!

இல்ல, அவ மேல தீராத லவ்வு இருக்குன்னா, அவளை ஹர்ட் பண்ணாம, தொடர்ந்து லவ்வைச் சொல்லட்டும்! கடைசி வரைக்கும் அவ ஒத்துக்காட்டி, கம்முனு விட்டுடனும். அதை விட்டுட்டு, லவ் பண்னனும் இல்லாட்டி, ஆசிட் அடிக்கனும்னு சொல்றதுக்கு பேரு லவ்வா?

நான் கடுங்கோபத்தில் இருந்தேன். என் கோபத்தில் இருந்த நியாயம் ப்ரேமுக்கும் புரிந்தது!

நான் இன்னும் பேசினேன். இவன் என்ன பெரிய புடுங்கியா? கைல காசு பெருசா இருக்கா? இல்லை ஏதாவது கேம்ல ப்ளேயரா? இல்ல படிப்புல பெரிய ஆளா? இல்ல, ஏதாவது ஆர்ட் அது இதுன்னு திறமைசாலியா? ஃபைனல் இயர் முடிச்சிட்டு என்ன புடுங்கப் போறான்? கையில வேலை இருக்கா? இவன் லவ்வைச் சொன்ன லாவண்யா, கேம்பஸ்ல செலக்ட் ஆயிட்டா! இவன் என்ன கிழிச்சிருக்கான்?

அவ யாரு தெரியுமா? ஒரு கோடிஸ்வர வீட்டுப் பையன், லவ் சொன்னதுக்கே, நியாயம் பேசி, தப்பு, முடியாதுன்னு சொன்னவ! ஆனா இவன்?

எதுவுமே இல்லாத, ஒரு சாதா மிடில் கிளாஸ்ல இருக்குற, ஆவரேஜ் பையன். இவன் வந்து சொன்னவுடனே, அவ லவ்வுக்கு ஓகே சொல்லிடனுமா? லவ்வை தனியா சொல்றதுக்கு கூட திராணியில்லாம, கூட இந்த ரமேஷைக் கூட்டிட்டு போயி சொல்ற கோழைக்குல்லாம் எதுக்கு லவ்வு? கேரக்டரும் இல்லை! திறமையும் இல்லை! குறைந்த பட்சம் தைரியம் கூட இல்லை! அப்பேர்பட்ட இவன், லவ்வைச் சொன்னா அவ எதுக்கு ஒத்துக்கனும்?

விஜய், அமைதியாய் இருந்தான். இருந்தாலும் நான் திட்டுவது அவனுக்கு அசிங்கமாய் இருந்தது.

Updated: April 2, 2023 — 7:38 am

2 Comments

  1. Raji un mail ku wait maa

  2. Nice going. Waiting for next part

Comments are closed.