வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் எட்டு 47

இதுவரை, லாவண்யாவின் மனதினுள் ஏதேனும் குழப்பம் இருந்திருந்தால், அது அத்தனையும் அன்று நீங்கியிருந்திருக்கும். அந்தளவு நான், அவள் மனதில், அந்த நிமிடம் விஸ்வரூபமெடுத்திருந்தேன். என் அக்கா வெளிப்படையாக காட்டிய தூய அன்பிற்கு, சற்றும் குறையாதது, என் அன்பு என்று அன்று நான் நிரூபித்திருந்தேன்.

சற்றே நெகிழ்ச்சியுடனும், பெருமையுடனும், ஆசையுடனும் என்னைப் பார்த்த லாவண்யா, பெரு மூச்சுவிட்டபடி திரும்பச் சென்றாள்.

சென்றவளை லாவண்யா என்று கூப்பிட்டேன்.

வந்து…இங்கப்…

நான் சொல்ல வருவதற்குள், என்னைப் புரிந்திருந்த லாவண்யாவே பதில் சொன்னாள். டோண்ட் ஒர்ரி, அவகிட்ட எதுவும் சொல்ல மாட்டேன் என்று புன்னகைத்தாள்.

அதன் பின் நான் மீண்டும் தனியானேன். அக்கா ஹரீசுடன் கிளம்பி விட்டாள். லாவண்யாவும் கிளம்பி விட்டாள். அக்கா இல்லாத வீட்டிற்கு, அவளால், முன்பு போல் வர முடியாது.

என் வாழ்வின் மூன்று மிக்கிய ஜீவன்கள், ஒரே நேரத்தில், என்னிடமிருந்து விலகி இருக்கும் சூழ்நிலை எனக்கு ஒருவித மனநிம்மதியின்மையைக் கொடுத்தது.

அதனாலேயே, நான் என் வெறியை, என்னுடைய நிறுவன விஸ்தரிப்பில் காட்டினேன். முதல் 4 மாதங்கள், நிறுவனத்தில் சில முக்கிய முடிவுகள் எடுத்து பெரிதாக விஸ்தரிக்க ஆரம்பித்திருந்த நான், அடுத்த 4 மாதங்களில் தான், என்னுடைய தந்தையை, என் நிறுவனத்திலிருந்து ஒட்டு மொத்தமாக ஒதுக்கி வைக்கும் வேலையை ஆரம்பித்தேன்.

நான் நினைத்தது போல் என் தந்தை எளிதில் விட்டுக் கொடுத்துவிடவில்லை. இதற்காகத்தானே, கட்டிய மனைவியையே ஏமாற்றினார். பல வழிகளில் அதற்கு முட்டுக்கட்டைகள் போட்டார். ஒரே சமயத்தில், விஸ்தரிப்பும், தந்தையின் சவால்களையும் சமாளித்து நான் விரும்பும் நிலைக்கு கொண்டு வரவும் எனக்கு அந்த 8 மாதங்கள் தேவைப்பட்டிருந்தது.

அந்த 8 மாதங்களில் நான், என் அக்கா, லாவண்யா என யாரைப் பற்றியும் யோசிக்காமல் வெறி பிடித்தாற் போல் வேலை செய்தேன். மாதக் கணக்கில் நான் கம்பெனி கெஸ்ட் அவுசிலும், ட்ரிப்பிலும் மட்டும் இருந்தேன். ஆஃபிஸ் பர்சனல் நம்பரைத் தவிர வேறெதையும் பார்க்கவே இல்லை. வீட்டிற்கும் அதிகம் போகவில்லை.

இது எல்லாவற்றையும் முடித்து விட்டு இனி லாவண்யாவை மீட் பண்ணி வெளிப்படையாக பேசிடனும்னு நினைத்த சமயத்தில்தான் எனக்கு அந்த அதிர்ச்சி காத்திருந்தது. அதுவும் என் கல்லூரி சீனியர் பிரேம் மூலமாக.

அது, லாவண்யாவிற்கு 1 மாதம் முன்பாகத்தான், அவளுடைய மாமா முறை சார்ந்த ஒருவருடன் (சித்தியின் தம்பி) திருமணம் நடந்திருந்தது என்ற உண்மைதான்.

அதை விட அதிர்ச்சி, அது, ஒரு வலுக்கட்டாயமாக நடந்த திருமணம் என்பதும், அவள் எதிர்பாராத தருணத்தில், அவளை கோவிலுக்கு கூட்டிப் போவது போல் சென்று, தாலி கட்டப்பட்டது என்றும், இதற்கு அவளுடைய தந்தை, சித்தி அனைவரும் உடந்தை என்பதும் தெரிய வந்தது.

நடந்தவுடன் கடும் அதிர்ச்சியடைந்தவள், இயல்பாக பயந்த சுபாவம் கொண்டவள், மிகவும் கோபாவேசம் கொண்டு, அன்றே போலீஸ் ஸ்டேஷனில் சொந்த அப்பா முதற்கொண்டு அனைவரின் மீது புகாரும், பின் உடனே, வீட்டைக் காலி செய்து விட்டு ஒரு லேடீஸ் ஹாஸ்டலுக்கு சென்று விட்டாள் என்பதும், இதெல்லாம் நடந்து 15 நாட்கள் கழித்து, அந்தத் தாலி கட்டியவன், குடித்து விட்டு ஒரு ஆக்சிடெண்டில் அடிபட்டு இறந்து விட்டான் என்பதும், அப்பொழுதும் அவளுடைய ராசிதான் இதற்கு காரணம் என்று சொந்த வீட்டினராலேயே பேசப்பட்டாள் என்பதும் மிகவும் அதிர்ச்சியளித்தது.

அவள் தேடிப்பிடித்து பார்க்கச் சென்ற போது, அவள் என்னிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை. மாறாக என்னையே வெறித்துப் பார்த்தாள்.

ஏன் என்னிடம் சொல்லவில்லை என்று நான் கேட்ட கேள்விக்கு, அவள் பார்த்த பார்வை என்னை மிகவும் உலுக்கியது. ஆனால் என்னால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

அவள் என்னிடம் சொன்னது ஒன்றே ஒன்றுதான்! அது,

இனி என்னைப் பார்க்க விரும்பவில்லை என்பதுதான்.

அக்கா கேட்டான்னா, நான் அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று மனம் வெதும்பினேன்.

சரியாக, அதற்கடுத்த நாள்தான் என் அக்கா, அவள் பிரச்சினைக்காக ஃபோன் செய்திருக்கிறாள். இவள் பிரச்சினை பற்றி தெரிந்து என்னைத் திட்டத்தான் கூப்பிட்டிருக்கிறாள் என்று நானாகவே நினைத்து, அவளிடம் சரியாக பேசவில்லை. பின் அவள் மீண்டும் வீட்டுக்கே வந்து பேச முயற்சித்த போது கூட, அவளிடம் பட்டென்று பேசினேன்.

அக்கா ஃபோன் செய்த போதே பேசியிருந்தால், குறைந்தபட்சம் சில விஷயங்களைத் தவிர்த்திருக்கலாம்.

நேரமும் சூழ்நிலையும், என் வாழ்க்கையில் கன்னாபின்னாவென்று விளையாடியிருக்கிறது…

அதை எப்படி நான் சரி செய்யப் போகின்றேன்???

ஃப்ளாஸ்பேக் முடிந்து, மீண்டும் இன்று!

லாவண்யாவும், அக்காவும், அடுத்த நாள் முழுதும் மனம் விட்டு பேசியிருக்கிறார்கள். அன்று மாலை, நான் லாவண்யாவைப் பார்த்த பொழுது அவள் முகம் கொஞ்சம் தெளிவாய் இருந்தது.

என்னைக் கடுப்பேற்றிய விஷயம் என்னவென்றால், என் முன்பே, ஹரீசிடம், நான் பெங்களுர் வர்றேன். எனக்கு ஏதாச்சும் வேலை வாங்கித் தர முடியுமாண்ணா என்று கேட்டதுதான். அன்று, அவள் செல்லும் போதும், என்னிடம் பேசவேயில்லை.

Updated: April 2, 2023 — 7:38 am

2 Comments

  1. Raji un mail ku wait maa

  2. Nice going. Waiting for next part

Comments are closed.