வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் எட்டு 47

நான் ஹாஃப் டே லீவ் எடுத்துக்கட்டுமா? ஒரு வித தவிப்புடன் கேட்டாள்.

அவ்ளோதான? போயிட்டு வா!

கதவருகே சென்றவளை, மனசு கேட்காமல் கூப்பிட்டு, அவளருகே சென்றேன்.

ஏய்… என்ன பிரச்சினைன்னாலும் சரி, சமாளிக்க முடியாதுன்னு ஒண்ணும் இல்லை! ஓகே?! நீ, என்னை நம்பாட்டியும் பராவாயில்லை. ஆனா, இனி என் அக்கா, ஹரீஸ் உனக்காக இருப்பாங்க! சரியா?! இப்டி ஃபீல் பண்ணாத! என்னால, உன்னை இப்படி பாக்க முடியலை! சின்ன வயசுலியே எதையெதையோ சமாளிச்சு வந்தவ நீ! புரியுதா? தைரியமா இரு!

என்னுடைய ஆறுதல், அவளது கண்ணீரை அதிகப்படுத்தியிருந்தது. என்னையே வெறித்துப் பார்த்தாள்.

அடுத்த நாள் வந்தவள், முழுக்க பழைய லாவண்யாவாக மாறியிருந்தாள். மிகுந்த ஆர்வமாக, நிறுவனத்தின் உயர்வுக்காக கற்றுக் கொள்ளவும், உழைக்கவும் ஆரம்பித்தாள்.

என்னிடமே ஒரு நாள் சொன்னாள். சான்சே இல்லை மதன். கடைசி ஒரு வருஷத்துல ஏகப்பட்ட சேஞ்சஸ். நல்ல இம்ப்ரூவ்மெண்ட்ஸ். எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு!

நான் அவளைப் பார்த்து புன்னகைத்தேன். ஒரு வருஷம் கூட இல்லை லாவண்யா! இதுல ரொம்ப முக்கியம் அந்த 8 மாசந்தான். வீட்டுக்கு கூட பல சமயம் போனதில்லை. போனாலும், அங்க எனக்குன்னு யாரும் இல்லை! அதுவும் கடைசி 4 மாசம், எங்கப்பா எப்படி எப்பிடியோ தொந்தரவு பண்ணார். ஒரு கட்டத்துல, சித்தியை அனுப்பி, அழுது எமோஷனல் டிராமால்லாம் போட ட்ரை பண்ணார். ப்ச்ச்… ரொம்ப கடுப்பான பீரியட் அது!

பழைய லாவண்யாவை வெளிக் கொண்டுவர, நான் வேண்டுமென்றே ஒன்று சொன்னேன்.

என் நிலைமையைப் பாத்தியா?! ஒரு பக்கம், சின்ன வயசுன்னு கூட பாக்காம, என்னை ஏமாத்தி என் சொத்தை அடைய நினைக்கிற சொந்த அப்பா ஒரு பக்கம்! இன்னொரு பக்கம், எவ்ளோ காசு, திறமை இருந்தாலும் பரவாயில்லை, ஆனாலும், வயசுல சின்னவனா போயிட்டதுனால வேணாம்னு சொல்லி தள்ளிப் போற நீ! எல்லாருக்கும் எளக்காரமா போயிட்டேன் இல்லை?!

அவ்ளோதான், லாவண்யா கடும் கோபமடைந்தாள்.

ஏய், இனி இந்த மாதிரி லூசுத்தனமா பேசுன கொன்னுடுவேன்!

உனக்கு என்னடா குறைச்சல்?

நானே உன்னை வேணாம்னு சொல்லியிருந்தாலும், ஏண்டா, அப்படிச் சொன்னோம்னு, என்னை நீ ஃபீல் பண்ண வைக்கனும்! அதான் உனக்கு கெத்து! நீ ஃபீல் பண்ண வைப்பன்னு எனக்கு தெரியும்… அதை விட்டுட்டு, இனி இப்படி உளறுன… என்று விரலைக் காட்டி எச்சரித்து விட்டுச் சென்றாள்.

லாவண்யா ஈஸ் பேக் டூ ஃபார்ம்! நான் பாஸாம்… இவ செக்ரட்டரியாம்! என்று உள்ளுக்குள் சிரித்துக் கொண்டேன்.

இப்படியே இரண்டு வாரம் சென்றது! இப்பொழுதெல்லாம் என்னைக் கோபமாகப் பார்ப்பதில்லை. அதே சமயம், அவள் ஏன் அந்தச் சமயத்தில், என்னைத் தேடி வரவில்லை என்று தெரிந்து கொள்ள நெருங்கினால், என்னைப் பார்வையாலேயே முறைப்பாள்.

இடையே ஒரு முறை என்னைத் தேடி வந்தாள்!

என்ன லாவண்யா?

அந்த பர்சேஸ் இஞ்சினியர், கொஞ்சம் தப்பா பேசுறான்.

யாரு, மணியா?

ம்ம்…

என்ன பண்றான்? உன்கிட்ட தப்பா நடந்துகிட்டானா?

அப்படி இல்ல, ஆனா, நான் இருக்கிறப்ப, அவன் ஃபிரண்டுகிட்ட வேணும்னே தப்பா பேசுறான்!

என்னான்னு?

அவள் உதடுகளைக் கடித்தாள்!

சொல்லு!

நா… நான் சின்ன வயசுலியே புருஷனை உதறிட்டு வந்தவ, அதுனால என்னை ஈசியா கரெக்ட்… அதற்கு மேல் அவளால் சொல்ல முடியவில்லை!

Updated: April 2, 2023 — 7:38 am

2 Comments

  1. Raji un mail ku wait maa

  2. Nice going. Waiting for next part

Comments are closed.