வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் எட்டு 47

அவளுடைய செய்கை, அக்கறை, அன்பு எல்லாம் என் மனதில் இன்னும் பல மாற்றங்களை ஏற்படுத்தின. லாவண்யா மேல் இருந்த அந்த இனம் புரியாத உணர்வு பெருகி, காதலாக மாறி நின்றது. எந்தத் தருணத்தில், எப்படி மாறியது என்று சொல்ல முடியாவிட்டாலும், அது மாறியதை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

நான் செய்த ஒரே தவறு, வெண்ணை திரண்டு வரும் முன், பானையை உடைத்தது போல், அவளுக்குள் நான் முழுதும் நிரம்பும் முன், என் காதலை, அதுவும் சின்ன வயதில் சொன்னதுதான். நான் இன்னும் கொஞ்சம் பொறுத்திருந்திருக்கலாம்.

எந்த முன் யோசனையும் இன்றி, ஜோடனையும் இன்றி, மிக கேசுவலாக நான் என் காதலைச் சொன்னேன்.

நான், அவளுடைய கல்லூரியில், இஞ்சினியரிங் சேருவதற்க்கு முதல் நாள், கிளம்பும் சமயத்தில், வீட்டுத் தோட்டத்தில் இருந்த என்னிடம், அவள் வந்து வாழ்த்துக்கள், நாளைக்கு ஃபர்ஸ்ட் டே! என்றாள்.

இதற்கு இடையிலும், நாங்கள் அதிகம் பேசிக் கொள்ளாவிடினும், அவள் என் கோபத்தை எப்பொழுதும் பொருட்படுத்தியதே இல்லை!

அவளையேப் பார்த்தவன், இப்ப எனக்கு 18 வயசு ஆகிடுச்சு! இனி நான் சொத்து விஷயத்துலியோ, வேறெந்த விஷயத்துலியும் டெசிஷன் எடுக்கலாமில்ல?

சம்பந்தமேயில்லாமல், இப்பொழுது நான் இதை சொல்லுவதைக் கேட்டு குழம்பிய அவள், ம்ம்ம் எடுக்கலாம். என்ன, இனி நான் வீட்டுக்கு வரக் கூடாதா என்று அலட்சியமாகக் கேட்டாள்.

அவளுக்குத் தெரியும், நான் அப்படிச் சொல்ல மாட்டேன் என்று!

அதெல்லாம் இல்லை. இது வேற விஷயம்.

வேற என்ன விஷயம்?

ஐ லவ் யூ!

வாட்…?

ஐ லவ் யூ?

அதிர்ச்சியில், பல நொடிகள் அமைதியாக இருந்தவள், பின் கோபமாக சிறிது நேரம் கண்டபடி திட்டினாள்.
பின், உன் வயசு என்ன, என் வயசு என்ன, நான் உன்னை விட ரெண்டு வயசு பெரியவ. இந்தச் சமூகம் என்ன நினைக்கும். உன் தாத்தா என்ன நினைப்பாரு? ஏன், உன் அப்பாவே, இதுக்குதான், டெய்லி என் வீட்டுக்கு வந்தியான்னு கேப்பாரு. தவிர, உனக்கு இப்பதான் 18.

இந்த வயசுல இந்த மாதிரில்லாம் தோணத்தான் செய்யும். இது வெறும் இன்ஃபாக்சுவேஷன் தான். அதுனால, இதை மறந்துட்டு, ஒழுங்கா படிக்கிற வழியைப் பாரு. என்று அட்வைஸ் வேறு செய்தாள்.

அமைதியாக எல்லாவற்றையும் கேட்டவன், பின் அவள் கிளம்பும் போது சொன்னேன். எனக்கு வயசு வித்தியாசம்? எனக்கு அது பெரிய விஷயமா தெரியலை. தாத்தா, கண்டிப்பா, என் விருப்பத்துக்கு எதிர்ப்பு சொல்ல மாட்டாரு. அதுவும் நீ அப்படிங்கிறப்ப, வாய்ப்பேயில்லை. என் அம்மாவை ஏமாத்தி கல்யாணம் பண்ண, என் அப்பவோ, எனக்கு பெருசா எதுவும் செய்யாத இந்த சமூகமோ, என்ன சொல்லும்ங்கிற கவலை எனக்கு கிடையாது. எனக்கு வேண்டியது உன் விருப்பம் மட்டும்தான்.
உனக்கு வேணா, எதைப் பத்தியும், யாரைப் பத்தியும் கவலை இல்லாம இருக்கலாம். ஆனா, என்னால அப்டி இருக்க முடியாது. எனக்கு இந்த சமூகம் என்ன சொல்லும்ங்கிற கவலை இருக்கு. அதுனால, இனி என்கிட்ட இப்டி பேசாத! குட் பை!

அதன் பின், இரண்டு நாட்கள் அவள் என் வீட்டுக்கே வரவில்லை. அக்கா வற்புறுத்தியும், சாக்கு போக்கு சொல்லி தவிர்த்தாள்.

மூன்றாம் நாள், அவளைத் தனியாக சந்தித்த நான், வற்புறுத்தி காரில் ஏற்றி வீட்டுக்கு அழைத்துச் சென்றேன்.

என்னையும், அவளையும் ஒன்றாகப் பார்த்த என் அக்காவுக்கோ, பெருத்த ஆச்சரியம். தாத்தாவும் வீட்டிலில்லை.

பின் அக்காவிடம் சொன்னேன். உன் ஃபிரண்டு வீட்டுக்கு வராததுக்கு காரணம் நாந்தான். ஏன்னா, ரெண்டு நாள் முன்னாடி, நான் அவகிட்ட ல… லவ் ப்ரபோஸ் பண்ணேன். அதுனாலத்தான் வர மாட்டேங்கிறா என்றேன்.

என்னுடைய தடாலடிப் பேச்சில், இருவருமே வாய் பிளந்து நின்றனர். பின் லாவண்யாவிடம் திரும்பி,

இங்க பாரு, நான் உன்கிட்ட ப்ரபோஸ் பண்ணது நம்ம ரெண்டு பேரு சம்பந்தப்பட்ட விஷயம். என்னைப் பொறுத்த வரை, என் முடிவுல மாற்றம் இல்லை. அதை ஏத்துக்குறதும், ஏத்துக்காததும் உன் விருப்பம். நான் உன்னை ஏதாவது டிஸ்டர்ப் பண்ணேனா என்ன?

நான் லவ்வைச் சொன்னேன்னு, நீ, இவளோட ஃபிரண்ட்ஷிப்பை கட் பண்ணாத? ஓகே! என்று சொன்னவன், அக்காவை ஒரு பார்வை பார்த்து விட்டு சென்றேன்.

Updated: April 2, 2023 — 7:38 am

2 Comments

  1. Raji un mail ku wait maa

  2. Nice going. Waiting for next part

Comments are closed.