வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் எட்டு 47

அப்பொழுதும் என் நேர்மை அவளை பாதித்தது போலும். அக்கா வேறு அவளை நன்கு திட்டினாள். ஏண்டி என்கிட்ட சொல்லலை? இதுனாலத்தான் ரெண்டு நாளா அவாய்ட் பண்ணியா? ம்ம்?

சாரிடி! எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலை. என்னால, உங்களுக்குள்ள சண்டை வர்றதை நான் விரும்பலை. அதான்…

அதுக்காக, நீயா உன்னை பிரிச்சிக்குவியா என்று நன்கு திட்டினாள்… திட்டி முடித்த என் அக்காவோ, லாவண்யாவையே ஆழமாகப் பார்த்து சொன்னாள்…

லவ்வை சொன்னவனும், நீயும் நானும் பிரியக் கூடாதுன்னு ஃபீல் பண்ணிட்டு போறான். வேணாம்னு சொன்ன நீயும், நாங்க பிரிஞ்சிடக் கூடாதுன்னு ஃபீல் பண்ற! இப்படி பல விஷயங்கள்ல, நீங்க ரெண்டு பேரும் சரியான ஜோடிதாண்டி என்றாள்.

யதேச்சையாக இதைக் கேட்ட எனக்கும் அதிலிருந்த உண்மை மட்டுமல்ல, இன்னொன்றும் உறைத்தது. அது,

இன்னமும் அவள், எனக்கு பிடிக்கலைன்னு சொல்லவில்லை. சமூகம் என்ன சொல்லும்னு தான் பயப்படுறா என்ற உண்மைதான் அது!

அதன் பின், அவள் மீண்டும் எப்பொழுதும் போல் வர ஆரம்பித்தாள். ஆனால், அவள் என்னிடமோ, நான் அவளிடமோ எதுவும் பேசுவதில்லை. ஆனால், ஒருவரைப் பற்றி இன்னொருவர், இன்னும் ஆழமாக புரிந்து கொள்ள ஆரம்பித்தோம்.

என் மனதில் வந்த காதலைச் சொன்ன எனக்கு, அவள் மனதில் காதல் வந்திருக்குமா என்று யோசித்துப் பார்க்கத் தோணவில்லை. அவள் பிடிக்கவில்லை என்று சொல்லாவிட்டாலும், அவள் சொன்ன காரணங்கள் எனக்கு மொக்கையாக இருந்தாலும், அவள் மனதில் நான் இன்னும் முழுதாக வரவில்லை என்ற உண்மை எனக்கு உறைத்தது.

இப்போதைக்கு இதைப் பற்றி அதிகம் பேசாமல், எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது என்று எனக்குப் பட்டது. தவிர என்ன இருந்தாலும், என்னை வேண்டாம் என்று சொன்னது, எனது ஈகோவை கொஞ்சம் சீண்டியிருந்தது. நான் அறியாத ஒரு விஷயம் இருந்தது. அது,

இதுவரை, காதலைப் பற்றிய சிந்தனையே இல்லாதிருந்த லாவண்யாவிற்கு, என்னுடைய காதல் ஒரு அறிமுகத்தைக் கொடுத்தது. அவள் காதலை மறுத்தாலும், இவன் ஏன் ரெண்டு வயசு சின்னவனாப் போனான் என்ற எண்ணத்தை அவள் மனதில் ஏற்படுத்தியிருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, எனக்கு கொடுத்த பதில் உண்மையாகவுமே சரிதானா என்ற குழப்பத்தையும் சலனத்தையும் அவள் மனதில் ஏற்படுத்தியிருந்ததுதான்.

மதனின் கெட்ட நேரம், வேறு யாராவதாக இருந்திருந்தால், லாவண்யா உடனே அவள் தன்னுடைய ஃபிரண்டிடம், மனம் விட்டுப் பேசியிருப்பாள். ஆனால், சொன்னது மதன் என்பதால், அவளால், தன் உயிர் தோழியுடனும் மனதை பகிர்ந்து கொள்ள முடியவில்லை.

இந்தக் குழப்பங்களும், சலனங்களும், அவள் கண்களில் அலைபாய்தலை கொண்டு வந்தது. மதனும், லாவண்யாவும் அவர்களையறியாமல், மற்றவரை ஆராயத் தொடங்கினர். கூர்ந்து கவனிக்கத் தொடங்கினர். சமயங்களில் ஒருவர் செயலை இன்னொருவர் ரசிக்கவும் தொடங்கினர். ஆனால் இவை எல்லாவற்றையும், இந்த இருவர் மீதும் ஆழமான அன்பை வைத்திருக்கும், அந்த மூன்றாவது ஜீவன் மட்டும் தொடர்ந்து கவனித்துக் கொண்டே வந்தது.

மாதங்கள் இப்படியே ஓடின. இடையில் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. மதன் கல்லூரியில் சேர்ந்தான். சொன்ன படி நிறுவனத்தில் தாத்தாவிற்கு உதவி செய்ய ஆரம்பித்தான். சமயங்களில், அவனுடைய புத்திசாலித்தனத்தை அவன் இல்லாத சமயத்தில் தாத்தா சிலாகித்து பேசும் போது, லாவண்யா, ஏனோ தானே சாதித்தது போல் பெருமிதம் கொள்வாள்.

மதன் கல்லூரியில் சேர்ந்து முதல் வருடம் முடியப் போகிறது. கல்லூரியில் அவன் எந்த இடத்திலும் அவனது பணத்தைக் காட்டியதில்லை. அவனுடைய படிப்பு, விளையாட்டில் திறமை, தெளிவான சிந்தனை போன்றவற்றால் அதற்குள்ளாகவே, ஆசிரியர்களிடத்திலும், மாணவர்களிடத்திலும், பெரிய பெயரை வாங்கியிருந்தான். அது அவனுக்கென்று பல பெண் ரசிகைகளை உருவாக்கியிருந்தது. அவனுடைய முதிர்ச்சியான பேச்சும், அப்ரோச்சும், வாட்ட சாட்டமான ஆத்லடிக் உடம்பும், அவன் அக்காவின் வகுப்பில் கூட, சில பெண் ரசிகைகளை உருவாக்கியிருந்தது.

பெண்களை அதிகம் பிடிக்காத அவனுக்கு, பெண்கள் வலிய வந்து பேசும் போது, அவர்களிடம் வழியாமல், விஷயத்திற்காக மட்டும் பேசும், அவன் பழக்க வழக்கம் வேறு, இன்னும் அவனுடைய புகழை கூட்டியிருந்தது.

மதனின் அக்காவின் நண்பர்கள் சிலருக்கு மட்டும், அவளுடைய தம்பி மதன் என்பது தெரியும். அதனால் அவளிடம் வேண்டுமென்றே சிலர், உன் தம்பியை நான் லவ் பண்ணலாம்னு இருக்கேன் என்பார்கள். லாவண்யாவைச் சீண்டுவதற்காகவே, அவன் வயசுல ரெண்டு வயசு சின்னவனாச்சே பரவாயில்லையா என்று அவனது அக்காவும் வம்பு வளர்ப்பாள்.

மூணு வயசு வித்தியாசம் வரனுமே? அவன் 1st இயர் தானே?

1st இயர்தான். ஆனா, அவன் ஸ்கூல் சேந்ததே கொஞ்சம் லேட்டு. அதுனால ரெண்டு வயசுதான் சின்னவன்.

அவன் 5 வயசு சின்னவன்னாலும் கவலை இல்லை. எங்களுக்கு ஓகே! தவிர ஆளு அப்படி ஒண்ணும் சின்னப் பையன் மாதிரில்லாம் இல்லை!

ஏய், இந்த சொசைட்டி என்ன சொல்லும்னு கவலை இல்லையா உங்களுக்கு? அக்கா வேண்டுமென்றே சீண்டினாள்.

அது என்ன கருமத்தையோ சொல்லிட்டு போகுது! அது எதுக்கு எங்களுக்கு? நீ பேசிப் பாரேன், உன் தம்பிகிட்ட!

சனியனுங்களா, தம்பி மூலமா அக்காவுக்கு லெட்டர் கொடுத்த கதையைக் கேட்டிருக்கேன். இந்த உலகத்துலியே, அக்கா மூலமா, தம்பிக்கு லவ் ப்ரபோஸ் பண்ற பொண்ணுங்க நீங்கதாண்டி! அதுவும் கூட்டமா வேற வந்து சொல்லுறீங்க. வெக்கமே இல்லீயா உங்களுக்கு?

ஆம்பிளைகிட்டதாண்டி பொண்ணுங்க வெக்கப்படனும். நீ எதுக்குடி பொண்ணுகிட்டயே வெக்கப்படச் சொல்லுற? அவளா நீயி?

ஏய் ச்சீ! என்னைக் கட்டிக்கிறவரைத்தான், என் தம்பி மாமான்னு கூப்பிடனும். நீங்க என்னான்னா, என்னையே, என் தம்பிக்கு மாமாவாக்குறீங்க?

Updated: April 2, 2023 — 7:38 am

2 Comments

  1. Raji un mail ku wait maa

  2. Nice going. Waiting for next part

Comments are closed.