வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் எட்டு 47

நான் கூட நீங்க திருந்தியிருப்பீங்களோன்னு நினைச்சேன். ஆனா, அப்படியில்லைன்னு என்கிட்ட காமிச்சதுக்காக தேங்க்ஸ் என்று புன்னகையுடன் அவர்களைப் பார்த்துச் சொன்னார். தங்கள் குட்டு வெளிப்பட்ட அதிர்ச்சியில், அவர்கள் கோவத்துடன் அந்த இடத்தை விட்டுச் சென்றனர்.

தாத்தா வீட்டுக்கு வந்து எல்லாவற்றையும் சொன்னார். சொல்லி விட்டு, லாவண்யாவிடம்,

தாங்க்ஸ் மா! நீ மட்டும் சொல்லாட்டி, நாங்க ஏமாந்துதான் போயிருப்போம். உனக்குதான் நன்றிக்கடன் பட்டிருக்கேன் என்றார் நெகிழ்ச்சியுடன்.

என்ன தாத்தா பெரிய வார்த்தையெல்லாம் பேசிகிட்டு என்று அவரை ஆறுதல் படுத்தினாள் லாவண்யா!

அக்கா அவளையே பார்த்தாள். சரி, இப்பச் சொல்லு, நீ சொல்லாம விட்ட கதையை? அவிங்க ஏன் இப்படி நடந்துகிட்டாங்க?

ஒரு பெருமூச்சை வெளியிட்ட லாவண்யா அமைதியாகச் சொன்னாள். மதன் தான் காரணம்!

எனக்கே அதிர்ச்சியாய் இருந்தது!

நானா?

ஆமா! மதனுக்கு 18 வயசு முடியப் போகுது. இனி ஆஃபிஸ் வரப் போறேன்னு சொன்னது அவங்களுக்குப் பயத்தை கொடுத்திருக்கும். மதனுக்கு, அவிங்க ரெண்டு பேர் மேலியும் பயங்கரக் கோபம்னு எல்லாருக்கும் தெரியும்.

அப்படியிருக்கிறப்ப. ஆஃபிஸ் முழுக்க அவன் கண்ட்ரோலுக்கு போயிட்டா, அப்புறம் அவிங்களால எதையும் அனுபவிக்க முடியாதில்ல? அதான்!

அவிங்க ப்ளான் ஒர்க் அவுட் ஆகியிருந்தா, மதனால டெய்லி ஆஃபிஸ் வர முடியாது. இன்னும் 6 வருஷத்துக்கு அவிங்க கண்ட்ரோல். அதுக்குள்ள எல்லார்கிட்டயும் கொஞ்சம் நல்ல பேரு எடுத்துட்டா, அப்புறம் ஆயுசுக்கும் பிரச்சினையில்லைல்ல? அதான்!

இது என் டவுட்டாத்தான் இருந்தது. முழுக்கத் தெரியாம சொல்ல வேணாமேன்னு நினைச்சேன். ப்ச்.. என் சந்தேகம் உண்மையாகிடுச்சி!

அதுக்கு ஏம்மா இவ்ளோ ஃபீல் பண்ற? விடும்மா!

இல்ல தாத்தா, எனக்குதான் அப்பா அம்மா இருந்தும் பாசம் கிடக்கலை. அவிங்க மேல டவுட்டா இருந்தாலும், ஒரு வேளை உண்மையாலுமே திருந்தியிருந்தா, இனி உங்களுக்கு அந்தப் பாசம் கிடைக்குமில்லன்னு ஆசையா இருந்தேன். அது நடக்கலைன்னு வருத்தம் அதான்!

சரி விடுடி. தப்பு பண்ணவிங்க கூட ஃபீல் பண்ணலை. நீ என்னமோ இவ்ளோ ஃபீல் பண்ணிகிட்டு இருக்க? அது சரி, எப்ப இருந்துடி இவ்ளோ புத்திசாலித்தனமா யோசிக்க ஆரம்பிச்ச? உண்மையாலுமே புத்திசாலி ஆயிட்டியா என்ன என்று கிண்டல் செய்தாள் அக்கா!

ஏய், பேசிக்காவே நான் புத்திசாலிதாண்டி! உன் கூட சேந்ததுக்கப்புறம்தான், கொஞ்சம் மழுங்கிடுச்சி என்று பதிலுக்கு கிண்டல் செய்தாலும், பின் சீரியசாகச் சொன்னாள்.

நீங்க பிரச்சினைக்கு உள்ள இருந்து யோசிச்சீங்கடி! நான் வெளிய இருந்து யோசிச்சேன். அவ்ளோதான் வித்தியாசம். எனக்கு எத்தனையோ குழப்பமான சமயத்துல, நீ கரெக்ட்டான ஐடியா கொடுத்ததில்லையா? அது மாதிரிதான் என்றாள்!

லாவண்யா பேச்சு, அவள் மேலிருந்த அன்பு, மதிப்பு, மரியாதை எல்லாவ்ற்றையும் அனைவரிடத்திலும் கூட்டியிருந்தது.

தாத்தாதான் கேட்டார், எப்பிடியும் எங்களுக்கு இந்த விஷயம் தோணலைல்ல?! அதுவும், நீ, உன் ஃபிரண்டைப் பத்தி தெரிஞ்சி வெச்சிருக்குறது ஒன்னும் பெரிய விஷயமே இல்லை. உங்களுக்குள்ள இத்தனை வருஷப் பழக்கம் இருந்திருக்கு.

ஆனா, என்னைப் பத்தியும், மதனைப் பத்தியும் கூட சரியா தெரிஞ்சி வெச்சிருக்கியே. அது பெரிய விஷயம்தாம்மா என்று பாராட்டினார்.

அப்படில்லாம் இல்ல தாத்தா. யாருன்னு தெரியாமியே என் மேல பாசம் காமிச்ச ஆளு நீங்க. எனக்காக மதன் கிட்ட கூட சண்டைக்கு போனிங்க. அவ்ளோ நல்லவரு தாத்தா நீங்க. அதுனால உங்களைப் புரிஞ்சிக்கிறது ஈசி தாத்தா என்று சிரித்தாள் லாவண்யா!

அக்காதான் சீண்டினாள். சரி, தாத்தாவை ஈசியா புரிஞ்சிக்கலாம். மதனை எப்படி புரிஞ்சிகிட்ட? ஆரம்பத்துல என்கிட்ட எவ்ளோ கோபமா பேசியிருக்கான் தெரியுமா? ஆனா, நீ அவன்கிட்ட அதிகம் பேசுனதே இல்லையே? அப்புறம் எப்படி….?

லாவண்யா படு அலட்சியாமாய் சொன்னாள்.

யாரு அவன் கோபப்படுவானா? அதெல்லாம் சும்மா! தாத்தாவைப் புரிஞ்சிக்கிறது கூட கொஞ்சம் சிரமமா இருந்தது. மதன்லாம் ஒண்ணுமே இல்லை. அவன் கோபம் வர்ற மாதிரி நடிப்பான். அவ்ளோதான். ஆனா, உள்ளுக்குள்ள கோவமே இருக்காது.

உங்க எல்லார் மேலியும் அவனுக்கு பாசம் அதிகம். ஆனா வெளிக்காட்டிக்க மாட்டான். இவன் கோபம் எல்லாம், மத்தவிங்க தன்னை சாதாரணமா நினைச்சிடக் கூடாது, யாரும் ஏமாத்த முயற்சி பண்ணக் கூடாதுன்னு போட்டுகிட்ட முகமூடி என்றாள்.

அவளுடைய கணிப்பு அனைவருக்கும் வியப்பாய் இருந்தது. இவள் இந்தளவு கணிப்பாளா என்று!

எனக்கோ, அவள் என்னைச் சரியாகக் கணித்திருந்தது பெரிய வியப்பாய் இருந்தாலும், வழக்கம் போல, எனது முகமூடியாக, கோபமாக அவளை முறைத்தேன்.

வேதாளம் முருங்கைமரம் ஏறுது. நான் எஸ்கேப்பா என்று அவள், என் அக்காவை இழுத்துக் கொண்டு ஓடினாள்.

Updated: April 2, 2023 — 7:38 am

2 Comments

  1. Raji un mail ku wait maa

  2. Nice going. Waiting for next part

Comments are closed.