யாருடா நீ எனக்கு இதலாம் செய்ய – 1 394

அது அவளின் சிறுவயது சுபாவம், யாராவது தனக்கு பிடிக்காததை செய்து விட்டால் போதும் கண்களாலியே எரித்து விடுவாள் இந்த தேன்மொழி.

ரவியோ அவளின் முறைப்பை பார்த்து இரு வினாடிகள்* அவளின் கண்களை பார்த்து ரசித்தான் “யப்பா எவ்வளவு பெரிய அழகான கண்கள் “* பின் உள்ளுக்குல் பயம் எடுக்கவே தன் தட்டை எடுத்து சமையல் அறைக்கு சென்று கை கழுவிட்டு நேராக தன் அறைக்குள் விருவிருயென நடந்தான் அவளை பார்க்காமல்.

***** தேனுக்கோ நடந்ததை நினைக்க,நினைக்க ரவி மீது கோபமும், எரிச்சலும் அதிகமானது, அதை வெளிகாட்ட சரியான தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்ததாள்.

ஆனால், “அந்த தருனம் இன்று இரவே வரும் என அவள் நினைக்கவில்லை.”

ரவி கட்டிலில் படுத்துக்கொண்டு ” எப்படி நமக்கு இந்த தைரியம் வந்தது , சரி அடிமேல் அடிவைத்தால் அம்மியும் நகரும் ,அக்காவும் மாறுவாள்” என யோசித்துக் கொண்டிருந்தான். புரண்டு புரண்டு படுத்து பார்த்தான் தூக்கம் வரவில்லை, சரி அக்கா அறைக்கு போலாமா என ஏதோ நினைப்பு வர, அவள் அறையை நோக்கி அடி வைக்க ஆரம்பித்தான்

மணி இரவு 11:00
.
.
.
ரவி, மெதுவாக தன் அக்கா தேன் அறையை அடைந்தான், கதவு மூடியிருந்தது, அம்மாவும், அக்காவும் இரவு தூங்கும் போது தாழிடமாட்டார்கள் என்பது இவனுக்கு தெரியும்.* அவன் முளையோ வேன்டாம் என்றது, அவன் “மனம்”மோ போய்தான் பாரேன் என்றது. சரி தைரியத்தை வர வைத்துக் கொண்டு கதவில் கைவைத்து தள்ளினான் திறந்து கொண்டது.
**

*** உள்ளே சென்றான் ரவி,

* இதுவரை அக்கா அறைக்கு ரவி வந்ததே கிடையாது, அவன் 7ஆம் வகுப்பு படித்தபோது, இவள் 9ஆம் வகுப்பு படித்தாள். அன்று இருவருக்கும் சண்டையென , அம்மா இருவருக்கும் தனித்தனி அறைகள் ஒதிக்கி கொடுத்தாள். ஆனால் இன்று அக்கா அறையில் ரவி..

*** ஏன் அக்கா அறைக்கு இப்போது வந்தான் என அவனுக்கே தெரியவில்லை, ஆனால் அவனை “ஏதோ ஒன்று ” இழுத்துட்டு வந்திருக்கிறது . அது அவனுடைய பாசத்திற்க்காக ஏங்கும் “மனசு ” தான்.

அருகில் செல்லலாமா இல்லை, வெளியே போய் விடலாமா என மீண்டும் யோசனையில் ஆழ்ந்தான். மீண்டும் அவன் “மனம்” சொல்வதை கேட்டான்.
அருகில் சென்று பார்த்தால், அங்கே அவள் அக்கா தேன்மொழி கட்டிலில் ஒரு குழந்தையைப் போல ஒரு பக்கமாக படுத்து இரண்டு கால்களை மடக்கி உறங்கி கொண்டிருந்தாள்.
ரவி,…சிறிது நேரம் அவள் தூங்குவதையே பார்த்துக்கொண்டிருந்தான், மற்ற குடும்பத்தில் உள்ள அக்காவை போல இவளும் தம்பிமேல் பாசம் பொழியமாட்டாளா என ஏங்கிக் கொன்டிருந்தான். அப்போது அவன் பார்த்த அந்த அழகான கண்கள் எங்கே என தேடிக்கொண்டிருந்தான். அது அவளுடைய இமைக்கு கிழே பாதுக்காப்பாக உறங்கிக் கொண்டிருந்தன.
* அப்போதுதான் கவனித்தான் ரவி.. அவள் குளிரில் நடுங்கி கொண்டிருந்தாள் , எப்படி என சுற்றி பார்த்தான் ரவி, அங்கே ஜன்னல் கதவுகள் திறந்திருந்தன, மூடலாம் என அருகே சென்றான். ஜன்னலுக்கு வெளியே கொள்ளை புரத்தில் “மா”மரத்தில் இலைகள் காற்றில் அசைந்து கொன்டிருந்தன. சிறிது நேரம் மரத்தையே பார்த்தவன், சிறு வயதில் அக்கா உடன் அங்கே விளையாடியது நியாபகம் வந்தது.
*ஜன்னலை மூடும் முயற்சியை கைவிட்டு, மின்விசிறியின் வேகத்தை குறைத்தான், பின்பு அருகில் இருந்த போர்வையை எடுத்து அவள் கழுத்து வரை மெதுவாக போர்த்தி விட்டான்.
.
.
அப்போது மணி இரவு 11:20
.
.
* சரி கிளம்புவோம் என திரும்பி நடக்க தொடங்கினான். எல்லாருக்கும் கெட்ட நேரம் இருக்கும் போல, ரவிக்கு, அது கெட்ட நேரமோ, விதியோ அல்லது தற்செயலா என தெரியவில்லை, வாசல் வரை கூட போகவில்லை,. கொள்ளைபுரத்தில் காற்று வேகமாக வீச, ஜன்னல் கதவுகள் “டப் ” என வேகமாக அடித்து மோதியது, உண்மையில் அதிக ஒலியே எழுப்பியது.
* அவ்வளவுதான் ரவி அந்த இடத்திலே நின்றான்,,வாசலை பார்த்தவாரு . அவன் நெஞ்சசோ படபடவென அடித்துக் கொண்டிருந்தது, அவன் இதய துடிப்போ 72 முறைக்கு பதில் அதிகமாக துடித்துக் கொண்டுருந்தது, முகத்திலோ வியர்வை துளிகள். இவை அனைத்தும் ரவிக்கு கன நேரத்தில் நடந்த சம்பவங்கள்.

5 Comments

  1. Superbbbb…kadhayoada meedhi eppo varum

  2. Super admin intha kathaivuda endding nalla irukkum.

  3. Aluga vaikra kaathai
    Posted in wrong site?

  4. ஆரம்பம் சூப்பர்

Comments are closed.