யாருடா நீ எனக்கு இதலாம் செய்ய – 1 394

அம்மா “ரவி………..”* என கத்தினாள்.

*பள்ளி உடையில் இருந்து வேறு உடைக்கு மாற்றிருந்தான் ரவி. எனினும், தலைமுடியை புதிய தோற்றதிலேயே சீவியிருந்தான் . ரவி தயங்கிக் கொண்டே வெளியே வந்தான்.
*அம்மாவோ, ” இவ்வளவு நேரமா ” என கத்த வாயெடுத்தவள் , அவன் முகத்தில் ஏதோ மாற்றம் தெரிய அப்படியே வாயை மூடினாள். தொடர்ந்து அம்மாவின் பார்வை ரவியின் தலையை பார்த்தபடி இருந்தது. எப்போதும் தன் கனவன் போல் இருக்கும் முடியை இப்போது, அவன் வேறு விதமாக அழகாக வாரியிருப்பது , அவளுக்கு தன் கனவன் போல் “இவன்” இல்லை என ஒரு ஆறுதலை தந்தது.

*”ரவி உக்காந்து சாப்பிடுடா” என மெதுவாக கூறினாள்.

அம்மா ஆச்சிரியத்துடன் பார்ப்பதை தேன்மொழியும் உணர்ந்தாள். மனதிற்குள் “நான் சாயுங்காளமே பாத்தாச்சி” என கூறிக்கொண்டாள்.
*எப்போதும் ரவியை குறைக்கூறிக்கொண்டே சாப்பிடும் “அக்காவும், அம்மாவும் ” இன்று அமைதியாக சாப்பிட்டார்கள். ரவியும் யாரிடமும் பேசவில்லை,…

*சாப்பிட்டு முடித்துவிட்டு ரவி தன் அறைக்கு சென்று, கட்டிலில் படுத்தான். அவன் மனமோ நேற்றை விட இன்று லேசானது போல் உணர்ந்தான், உடனே உறங்கினான்.

தேன்மொழிக்கோ உறக்கம் அவ்வளவு எளிதாக வருவதாக தெரியவில்லை, “மனம்” கனமாக இருப்பது போல் உணர்ந்தாள். ஆனால், எதற்கு என தெரியாமல் சிந்தித்துக்கொண்டிருந்தாள் . கடைசியில் ரவி தன்னிடம் பேசாததே காரணம் என அறிய தொடங்கினாள்.

* ………………ஆமாம் “அவரு பெரிய இவரு ” அவன் பேசலனா எனக்கின்ன. .. என்றது “ஒரு மனது”
*”இன்னொரு மனதோ” ………. அப்போ எதுக்குடி இன்னும் தூங்காம தவிச்சிகிட்டு இருக்க.. என்றது.
* எப்படி எப்போது உறங்கினாள் என அவளுக்கே தெரியவில்லை.
*.
.
காலையில் ரவி உடற்பயிற்சி செய்து கொண்டும், அம்மா காலை உணவு தயார் செய்து கொண்டிருந்தார்கள்.

தேன்மொழி அதிகாலையிலே குளிக்கும் பழக்கம் உடையவள், தலையை காயவைப்பதற்க்கு மின்விசிறி காற்றிலோ அல்லது தலையில் துண்டை கட்டிக் கொல்வதோ வழக்கம். ஆனால் இன்று மேலே மாடிக்கு செல்ல வெளியே நடந்தாள்,..

*…அம்மா, உடனே ” எங்கடி போற ” என்றாள்,

தேன்மொழி ” தல காயவைக்கம்மா ”

அம்மா. “எப்பையும் அவன் மேல இருக்கும் போது நீ போக மாட்டியே ”

தேன்னோ “இன்னைக்கு குளுருது மா அதான் மேல வெயில்ல நிக்கலாம்னு” என கூறினாள்.

அம்மா “சரி போ” என்றதும் அவள் படி ஏறி மாடியை அடைந்தாள். அங்கு ரவி உடம்பில் வேர்வை வழிய “தண்டால்” எடுத்து கொண்டு இருந்தான்.
.
.
.
ரவி, இவளை பார்த்ததும்!!!!!

ரவி, இவளை பார்த்ததும், அமைதியாக எழுந்து,துண்டை எடுத்து தன் வியர்வையை துடைத்தான். தேன்மொழி, அவனை கண்டும் காணாதது போல் தன் தலைமுடியை வெயிலில் காட்டிக் கொண்டே உலர்த்தி கொண்டிருந்தாள்.

5 Comments

  1. Superbbbb…kadhayoada meedhi eppo varum

  2. Super admin intha kathaivuda endding nalla irukkum.

  3. Aluga vaikra kaathai
    Posted in wrong site?

  4. ஆரம்பம் சூப்பர்

Comments are closed.