”ஹாய்..” சொன்னாள் வஞ்சனா.
கீர்த்தனா.. சரவணனைப் பார்த்துச் சிரித்தாள்.
”வேலைக்கா…?” சரவணன் கேட்டான்.
” ஆமா… நீ போகல…?”
” போகனும்…!!”
வேன் வரும்வரை… அங்குதான் பேசிக்கொண்டிருந்தான் சரவணன்.
தாமு வேன் ஏற..வழக்கம்போல கையசைத்து டாடா காட்டினாள் வஞ்சனா. பின்னாலேயே அவளது பேருந்தும் வந்து விட்டது.
மதிய உணவின்போது.. கேண்டீனில் வைத்துக் கேட்டாள் கீர்த்தனா.
”சரவணன் எதுக்கு.. காலைல பஸ் ஸ்டாப்புக்கு வந்தான்..?”
” சும்மாதான்.. ஏன்…?” என்றான் தாமு.
”இல்ல… நீ.. அவன்கிட்ட.. வஞ்சனாவக் காட்டி என்னவோ பேசிட்டிருந்த மாதிரி இருந்துச்சு..?”
”அ… அது.. வஞ்சனா பத்தி கேட்டான்..! யாரு என்னன்னு.. அதான் சொல்லிட்டிருந்தேன்..”
” அவன் ஒரு மாதிரியான ஆளாச்சே…?”
” ஒரு மாதிரியானவன்னா…?”
”உன்ன மாதிரி.. கேனயன் இல்லேன்னு சொன்னேன்..” என்று சிரித்தாள்.
”நா.. கேனயனா..?”
” அதுலென்ன சந்தேகம்..? ஆனா அவன் அப்படிப்பட்ட ஆள் இல்ல..! ஒரு பொண்ணுகூட பழகினா.. உடனே கணக்கு பண்ணிருவான்..!! ஆனா நீ அப்படியா..? எத்தனை நாளா உன்கூட பழகறேன்..? உன்னைப் பத்தி தெரியாதா.. எனக்கு…?” என்றாள்.
அதன் பிறகு..கீர்த்தனா அவனிடம் வலிய.. வலிய வந்து பேசினாள்..!!
☉ ☉ ☉
வேலை முடிந்து.. வீடு போனபோது.. உமா மிகவும் களைப்பாக உணர்ந்தாள்..! உடம்பெல்லாம் பயங்கர சோர்வு. கை கால்கள் குடைவது போண்ற ஒரு அவஸ்தை. முகம் கழுவி வந்து சிறிது நேரம் கண்களை மூடிப்படுத்தாள்.!
தாமு வந்தான். அவள் பக்கத்தில் உட்கார்ந்து ”காபி வெக்கலியா..?” என்று கேட்டான்.
”போய் பால் வாங்கிட்டு வா..” என்றாள்.
அவன் எழ…” அப்படியே ஒரு விக்ஸ் ஆக்ஸன் மாத்திரை..” என்றாள்.
கடைக்குப் போய் பாலும்..மாத்திரையும் வாங்கி வந்து கொடுத்தான் தாமு.
டிவியை சத்தமாக வைத்துப் பாட்டுக் கேட்டான். பாடலோடு சேர்ந்து.. அவனும் பாடினான்.
காபி வைத்த உமா கத்தினாள். ”சத்தத்தை கொறைடா…பரதேசி…”
ஆனாலும் அவன் குறைக்கவே இல்லை.
அவளே வந்து… சத்தத்தைக் குறைத்தாள்.
”சொன்னா கேக்க மாட்டியா..?” என அவன் தலையில் அடித்து விட்டுக் கேட்டாள் ”என்னடா.. ரொம்ப குஷியா இருக்க..?”
”இருந்தா.. என்னவாம்..?”
”சரிதான்.. கழுதைக்கு குஷி வந்தா.. நாமதான் காதைப் பொத்திக்கனும்…!!” என்றாள்.
”நான் ஒன்னும் கழுதை இல்லை..!!”
” உனக்கு கழுதையே தேவலை..” என்க..
அவளது முதுகில் குத்தினான் ”நானும் ஏதாவது சொல்லிருவேன்.. பாத்துக்கோ..”
” சொல்லி பாரு..! பல்ல பேக்கறேன்..!”
” அக்கானு பாக்கறேன். இல்லேன்னு வெச்சுக்கோ…”
”ஆ.. ! என்ன சார் பண்ணுவீங்க..?”
”போ… போ.. போ…!! போய் காபிய பாரு… போ…!!” என அவளைத் தள்ளி விட்டான்.
உமா சிரித்துக் கொண்டே போனாள். இருவரும் வம்பளத்தவாறே.. காபி குடித்தார்கள்..!!
காபி குடித்த பின்.. சரவணன் வீட்டுக்குப் போனான் தாமு.
தங்கை சரண்யாவோடு உட்கார்ந்து கேரம்போர்டு விளையாடிக்கொண்டிருந்தான் சரவணன்.
தாமுவைப் பார்த்ததும்..
”ஹாய்டா..மச்சான்..” என்றான்.
தாமு ”ஹாய்..” சொல்ல…
ஸ்ட்ரைக்கரைச் சுண்டிய சரண்யாவும் ”ஹாய் மச்சான்..” என்றாள்.
”என்னது.. நான்.. உனக்கு மச்சானா…?” தாமு.
” எங்கண்ணனுக்கு நீ.. மச்சான்னா…எனக்கு மட்டும் என்ன சித்தப்பனா…?” என்றுவிட்டுச் சிரித்தாள்.