டீச்சரின் அந்தரங்கம் Part 29 5

இரவு உணவை சாப்பிட்டபடி, நான் பேச துவங்கினேன்.
நான் ஓபனாவே சொல்லிடறேங்க. அன்னைக்கு நான் பேசினது தப்பு தான். மன்னிப்பு கேட்கிறதுக்கு முன்னாடி உங்களுக்கு சில விளக்கங்கள் குடுக்க விரும்புறேன்.
எனக்கு எந்த விளக்கமும் வேண்டாம் அம்மு. நான் புரிஞ்சுக்கிட்டேன். எல்லாத்துக்கும் நான் தான் காரணம்.
அப்படி நமக்குள்ளே பேசிக்காம எல்லாத்தையும் தள்ளி தள்ளி போட்டது தாங்க நாம செஞ்ச தவறுகளுக்கு காரணம். மனசு விட்டு பேசுவோமே. நீங்க சொன்னதாலே தானே இப்ப உங்க மனசிலே இருக்க குறை தெரிஞ்சது.
சரி, என்ன சொல்லனுமோ சொல்லு, நான் முழுசா கேட்டுட்டு உனக்கு பதில் சொல்றேன்.
லாவண்யாவை வீட்டுக்கு வர வைக்க உங்களுக்கு ஒரு காரணம் இருந்த மாதிரி எனக்கும் சில காரணங்கள் அந்த நேரத்திலே இருந்திச்சு. நீங்க லாவண்யா கிட்டே காட்டின ஆர்வம், வீரியம் எல்லாம் எனக்குள்ளே பொறாமையை கொண்டு வந்திடுச்சு. என்னை இனி இந்த மாதிரி உறவெல்லாம் வேண்டாம்ன்னு சொன்ன சில மணி நேரத்திலே அழகா இளமையா ஒரு பொண்ணு வந்ததும் அப்படியே மாறி கிட்ட உங்க குணம் கோபத்தை வர வைச்சது. உங்க விருப்பங்களுக்கு அடிமையா நான்னு ஆத்திரம் மனசிலே. அதனாலே அப்படி பேசிட்டேன். அந்த நொடியோட அந்த வார்த்தைக்களுக்கான அர்த்தம் முடிஞ்சு போச்சு. உணர்ச்சிகள் வடிஞ்ச பிறகு பேசினது தப்புன்னும் தோணுது, தப்பில்லைன்னும் தோணுது. இதெல்லாம் என் அளவிலே காரணங்களா இருந்தாலும், ஒரு மனைவியா நான் உங்களை அப்படி பேசியிருக்கவே கூடாது.
அப்படியில்லை அம்மு….
இருங்க. குறுக்கே பேசாதீங்க. நான் சொல்லி முடிச்சிடறேன்.
ம்ம்ம்…
ஆனா அப்படியெல்லாம் பேசினதுக்கு இன்னொரு காரணம், அது தான் முக்கியமான காரணம், உங்களுக்கு அதுலே ஒரு சந்தோஷம் இருக்கும், உங்களுக்கு அது பிடிக்கும்ன்னு நினைச்சிட்டேன். நீங்க வீட்டிலே இருக்கும் போதே என்னை ராகவ் கூட இருக்க சொன்னீங்க நினைவிருக்கா? அதை வைச்சு நான் இதுவும் உங்களுக்கு பிடிக்கும்ன்னு நினைச்சிட்டேன்.
உண்மைதான். ஒரு டைம்லே எனக்கு அது பிடிச்சிருந்தது. அதிலே எனக்கு எதோ ஒரு சுகம் கிடைச்சது. ஆனா என்னன்னு தெரியலை, அன்னைக்கு சுனில் முன்னாடி நீ சொன்னப்ப எனக்கு கொஞ்சம் மனசு விட்டு போச்சுடி…
எப்படியோ நீங்க மனசிலேயே வைச்சுட்டு இருக்காம ஓபனா சொல்லிட்டீங்க. நானும் இப்ப எல்லாத்தையும் சொல்லிட்டேன். இனி உங்க இஷ்டம் எதுவோ அது படி தான் நடந்துக்குவேன். போதும், நிறுத்திக்கலாம், இனி நாம நமக்காக மட்டும் வாழலாம், நாம ரெண்டு பேர் மட்டும் வாழலாம். நமக்கு நடுவுலே வேற யாரும் வேண்டாம். அதே சமயம் உங்களுக்கு லாவண்யாவை பிடிச்சிருந்தா நீங்க விரும்புற வரைக்கும் அவ கூட பழகுங்க.
இல்லை அம்மு… உன் முடிவு தான் என் முடிவும். நீ சொன்னது எதையும் நான் மறுக்க போறதில்லை அம்மு. எனக்கும் போதும்ன்னு தோணுது. ஒரு மணி நேர சுகத்துக்காக ஒட்டு மொத்த வாழ்க்கையையும் நாம சிக்கலான நிலைமைக்கு கொண்டு போக வேண்டாம். நீ சொன்ன மாதிரியே உனக்கு நான், எனக்கு நீன்னு வாழலாம். ஆனா…
என்ன ஆனா….
நமக்கு ஒரு குழந்தை வேண்டாமா அம்மு.
என் கணவரின் கேள்வி நான் எதிர்பார்க்காத ஒன்று தான் என்றாலும் அதிர்ச்சியை தருவதற்கு பதிலாக சந்தோஷத்தை கொடுத்தது. காரணம் சிறிது காலமென்றாலும் பெரிய அளவில் வாழ்க்கையில் நடந்து விட்ட நிகழ்ச்சிகளின் தாக்கங்களிலிருந்து விடுபட இது ஒரு முக்கியமான காரணமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று நினைத்தேன். என் கணவரால் என்னை கர்ப்பமாக்க முடியும் என்று நான் நம்பினேன். அவருடைய குறை சரி செய்யக் கூடியது தான் என்று நான் முழுமையாக நம்பினேன். என் வயிற்றில் என் கணவரால் ஒரு கரு உருவாவது, நாங்கள் இருவரும் தாய் தந்தையாவது எங்கள் வாழ்க்கையை புதுப் பாதையில் கொண்டு செல்லும் என்று உறுதியாக நம்பினேன். அதற்கான வேலைகளை செய்ய வேண்டும் என்று அந்த நிமிடத்தில் முடிவு செய்தேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *