என்னாலேயும் முடியும்ன்னு உங்களுக்கு காட்டனும்ன்னு தோணுச்சு. அப்ப அதுக்கு லாவண்யா ஹெல்ப் பண்ணினா. அவ எதோ காரியத்துக்காகவோ, காரணத்தோடவோ என் கிட்டே அவ்ளோ இன்வால்வ்மெண்டோட செக்ஸ் வைச்சிக்கிட்ட மாதிரி தெரியலை. அவளுக்கு என்னை பிடிச்சிருந்தது. நீயும் என் கிட்டே அன்பா, பாசமா, காதலா இருந்தே… ஆனா.. என் மனசு… நான் உன் கழுத்திலே நான் கட்டின தாலி தான் என் குடும்பம் நடத்த வேண்டிய கட்டாயத்தை உனக்கு குடுத்திருக்குன்னு ஒரு எண்ணம் இருந்திச்சு. அதனாலே எந்த காரணமும் இல்லாம, எந்த நோக்கமும் இல்லாம, எந்த கட்டாயமும் இல்லாம லாவண்யா என் கிட்டே அப்படி நடந்திக்கிட்டதும் நான் ஆளே மாறிட்டேன். என்னாலேயே நம்ப முடியாத அளவுக்கு நான்… நான்… ஒரு ஆம்பிளைன்னு உணர்ந்துட்டேன். அதை எனக்கு உணர வைச்சது லாவண்யா. என்னை எனக்கு மீட்டுக் குடுத்தது லாவண்யா. அதனாலே தான் நீ இல்லாதப்ப அவளை வீட்டுக்கு வர சொல்ற அளவுக்கு துணிஞ்சேன். அவ சம்மதிச்சா அவ கூட நீண்ட நாள் தொடர்பிலே இருக்கனும்ன்னு கூட நினைச்சிருப்பேன். ஆனா நேத்து ராத்திரி உன் கூட சேர்ந்திருப்புறம் நீ முதல் தடவையா சொன்ன அந்த வார்த்தை நான் இத்தனை நாள் எதுக்காக காத்திட்டிருந்தேனோ… அது நடந்திடுச்சு. நீதான் என் வாழ்க்கைன்னு புரிஞ்சுக்கிட்டேன். செய்றதை எல்லாம் செஞ்சுட்டு… லாவண்யாவை பத்தி இத்தனை சொல்லிட்டு… ரொம்ப யோக்கியன் மாதிரி பேசுறேன்னு நினைக்காதே. இனி நான் உன்னை தவிர யாரையும் என் வாழ்க்கைக்குள்ளே கொண்டு வர மாட்டேன். அதை போக போக நீயே புரிஞ்சுக்குவே. உனக்கு நான் செஞ்ச துரோகத்துக்கு மன்னிப்பு கேட்டுக்கிறேன்.
என் கணவரின் வாய்ஸ் மெசெஜை படித்து விட்டு நீண்ட நேரம் அங்கேயே நின்றிருந்தேன். மனதில் பல விதமான எண்ணங்கள். ஆரம்பத்தில் என் கணவர் லாவண்யாவிடம் நன்றாகவே மயங்கி கிடப்பதாக நினைத்து கோபமாக வந்தது. பின் நான் அவரை பல நேரங்களில் அவமதித்திருப்பதும் நினைவுக்கு வர, அவர் பக்கத்து நியாயங்கள் புரிய, இது அவருடைய தவறு மட்டுமில்லை, நானும் ஒரு விதத்தில் காரணம் என்று புரிய, மனம் மெல்ல மெல்ல லேசானது.
என் கவனம் வேறு பக்கம் இருந்ததால் வகுப்பில் மாணவர்கள் படிப்பதை விட்டு விட்டு மெல்ல தங்களுக்குள் குசுகுசுப்பாக பேச துவங்கி, அது மெல்ல மெல்ல அறையெங்கும் சலசலப்பாக மாற, என் சொந்த ப்ரசனைகளிலிருந்து மனதை மீட்டுக் கொண்டு, வகுப்பின் பக்கம் திரும்பி, சைலன்ஸ்… பேசாம படிங்க என்று அதட்டினேன். வகுப்பு அமைதியானது, என் மனதை போலவே.
மாலை ஸ்கூல் வாசலை தாண்டியதும் லாவண்யாவின் கார் அருகில் வந்து நிற்க, கண்டுக் கொள்ளாமல் போய் விடலாமா என்று நினைத்தவள், பிறகு வீண் பிடிவாதம் வேண்டாம் என்று முடிவு செய்து, காரின் முன் கதவை திறந்து, காருக்குள் ஏறி அவள் அருகில் அமர்ந்தேன்.
காரை மெதுவாக நகர்த்திய லாவண்யா, மேடம் ரொம்ப கோபமா இருப்பீங்க போல என்றாள்.
ஏண்டி போனை எடுக்கலை?
ஸாரி… ஸாரி… லைட்டா ஃபீவர்டி… டேப்லெட் போட்டுட்டு போனை சைலண்ட் மோட்லே போட்டுட்டு தூங்கிட்டேன். ஈவனிங் தான் பார்த்தேன். ரொம்ப டயர்டா இருந்திச்சு. காலைலே ஸ்கூல்லே நேர்லே பேசிக்கலாம்ன்னு திரும்ப கால் பண்ணலை என்றாள்.
அவள் பதில் திருப்தியாக இல்லா விட்டாலும், நான் பதிலுக்கு ஒன்றும் சொல்லவில்லை. லாவண்யா காரை தன் வீட்டுக்கு ஓட்ட, எனக்கும் அவளிடம் கொஞ்சம் பேச வேண்டும் போல இருந்ததால், ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தேன்.
லாவண்யா வீட்டு ஹால் ஷோபாவில் இருவரும் அமர்ந்து பொதுவான விசயங்களை பேசிக் கொண்டிருந்து விட்டு, பிறகு நான் மெல்ல என் கணவர் விசயத்தை ஆரம்பித்தேன்.
லாவண்யா என் கணவர் பற்றி பேச சங்கடப்பட்டாள். நான் என் கணவரின் வாய்ஸ் மெசெஜை அவளுக்கு ஓபன் செய்து கேட்க வைத்தேன்.
கேட்டு முடித்ததும் லாவண்யா ஸாரி என்றாள்.
எதுக்கு என்றேன்.
