டீச்சரின் அந்தரங்கம் Part 29 5

அன்று இரவு நீண்ட நாட்களுக்கு பின் வீட்டில் என் கணவர் இல்லாமல் தனியாக. மனதில் எந்த சஞ்சலமும் இல்லை என்றாலும், தனிமை கொஞ்சம் வாட்டியது. ஆனால் ஸ்கூலில் வேலை கடுமையாக இருந்த காரணத்தால் சீக்கிரம் உறக்கம் கவ்விக் கொள்ள தூங்கி விட்டேன்.
அன்றும் அடுத்த நாளும் ஸ்கூல் வேலைகளின் நடுவில் எதையும் நினைக்கவோ, யோசிக்கவோ நேரமின்றி கழிய, இரவு கணவருடன் நீண்ட செல்போன் பேச்சுகள் திருப்தியாக போக, நிம்மதியாகவே கழிந்தது. ஆனால் வெள்ளிக் கிழமை மாலை ஸ்கூலை விட்டு கிளம்பும் போது என் கணவர் அனுப்பிய மெசெஜ் கொஞ்சம் எரிச்சலை மூட்டியது.
அம்மு… இன்னைக்கு ரிடர்ன் வர முடியாதுன்னு நினைக்கிறேன். வேலை முடியலை. மே பி சண்டே நைட் ரிடர்ன் வந்துடுவேன் என்று மெசெஜ் அனுப்பியிருக்க, எனக்கு கடுப்பாகி விட்டது. ஸ்கூல் கேட்டை கடந்து பஸ் நிற்கும் இடம் வரை நடந்து கொஞ்சம் முன்னாலேயே ஒரு மர நிழலில் ஒதுங்கி என் கணவருக்கு போன் செய்தேன்.
அவர் எடுத்த உடனேயே எதுவும் பேசாதீங்க. இப்ப நீங்க ப்ளைட் பிடிச்சு உடனே வீட்டுக்கு வந்தாகனும் என்றேன் கடுமையான குரலில்.
என்ன அம்மு இது?
என்ன நொன்ன அம்மு? முடியுமா முடியாதா?
மெளனம்…
சொல்லுங்க…
மெளனம்.
டேய்….
நான் பேசலாமா கூடாதா?
பேசுங்க… ஆனா முடியுமா முடியாதான்னு மட்டும் சொல்லுங்க.
…
என்ன…
90 பர்சண்ட் முடிஞ்சுருச்சு அம்மு. உழைப்பு எல்லாம் வேஸ்ட் ஆகிடும். புரிஞ்சுக்க…
இப்ப எனக்கு பணம் தேவையில்லை… நீங்க தான் வேணும்.
இதை சொல்லிக் கொண்டிருக்கும் போதே பஸ் வந்து விட ஓடிப் போய் ஏறிக் கொண்டேன். ஏர் பட்ஸை எடுத்து காதில் பொருத்திக் கொண்டு என் கணவரிடம் பேச்சை தொடர்ந்தேன். என் கணவர் என்னென்னமோ சொல்லிக் கொண்டிருக்க, பஸ்ஸில் இருந்த கூட்டத்தில் என் கணவரிடம் கடிந்து பேச முடியாமல் அவர் சொல்வதை கேட்டுக் கொண்டே எதேச்சையாக சாலையில் பார்வையை செலுத்தியவளின் கண்களில் லாவண்யாவின் கார் என்னை கடப்பதை கண்டு அந்த பக்கம் பார்வையை திருப்ப, நொடியில் காருக்குள் பின் சீட்டில் ஒரு ஆண் உட்கார்ந்திருக்கும் அசைவு தெரிய, உற்று பார்ப்பதற்குள் காரின் முன் பக்கம் பார்வையை விட்டு விலக, காரின் கருப்பு கண்ணாடிகள் வழியே எதையும் பார்க்க முடியாமல் போக என் கவனம் சிதறியது. உள்ளே இருந்தது யார் என்று தெரியா விட்டாலும் அவன் எட்டி பார்த்ததற்கு லாவண்யா என்னமோ சொல்லி அதட்டியதும், அதற்கு அந்த உருவம் கார் சீட்டில் படுத்து தன்னை மறைத்துக் கொண்டதும் அந்த ஒரு நொடியில் என் கண்களில் பதிந்து விட திருட்டு தேவுடியா. திருந்த மாட்டாளா இவ என்று கோபமாக வந்தது.
லாவண்யாவின் செயலால் என் கவனம் சிதறியதில் என் கணவர் மீதிருந்த கோபம் குறைய, அவர் சொன்னதை கவனமில்லாமலே கேட்டு விட்டு, சரி எப்ப வருவீங்க? என்றேன் ஆயாசமாக.
சண்டே கண்டிப்பா வந்திடுவேண்டி அம்மு.
ம்… கால் பண்ணுங்க… அப்ப்ப்ப…
சரி செல்லம்… கோபப்படாதேடா கன்னுக் குட்டி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *