என்னன்னு சொல்ல தெரியலை. நானும் வயசு கொடுத்த துணிச்சல்லே என்னென்னமோ செஞ்சுட்டேன். நீ இருந்தா ஒரு தைரியம் கிடைச்ச மாதிரி இருக்கும். என்னமோ தெரியலை, உன்னை பிரிஞ்சு இருக்கனும்ன்னு நினைச்சாலே மனசு ரொம்ப வீக்காகிடுது. என் ஹஸ்பண்ட் உட்பட எல்லாரும் என் உடம்பை, என் இளமையை தான் விரும்புறாங்க. என்னை ஒரு மெட்டீரியலா தான் பார்க்குறாங்க. மனசை புரிஞ்சுக்கிட்டு என் கூட பழகினவ நீ ஒருத்தி தான். நீயும் போயிட்டா நான் ரொம்ப லோன்லியா ஆயிடுவேண்டி. பயமா கூட இருக்கு. திரும்பவே முடியாத அளவுக்கு மோசமான பாதைலே ரொம்ப தூரம் போயிடுவேனோ, திருத்தவே முடியாத அளவுக்கு கெட்டு போயிடுவேனோன்னு பயமா இருக்கு.
லூசு… என்னமோ நாளைக்கே நாங்க வேற ஊர் போற மாதிரி புலம்புறே. போறதா இல்லையான்னே இன்னும் முடிவெடுக்கலை. சும்மா மனசை கெடுத்துக்காதே. தேவைப்பட்டா உனக்காக நான் எதுவும் செய்வேன். நான் உன் கூட இருப்பேண்டி, எப்பவும், என் செல்லம் என்று அவளை அணைத்துக் கொண்டேன்.
லாவண்யா உடனே தலையை என் மார்பில் சாய்த்து நிமிர்த்தி என் உதடுகளின் அருகே தன் உதடுகளை கொண்டு வர, நான் அவளை விலக்கி, ச்சீ நாயே… அலையாதே… இப்படி தான் ஆரம்பிச்சது எல்லாம். அப்புறம் பழைய கதை தான். கொஞ்ச நாள் சும்மா இருப்போம் என்றேன்.
ஏண்டி, நானும் வேண்டாமா என்று ஏக்கமாக கேட்டாள் லாவண்யா.
அம்மா, தாயே, அப்படி பார்க்காதே. உன் பார்வை என்னை இழுக்குது. அப்புறம் திரும்ப பழைய நிலைமைக்கு போயிடும். இப்போதைக்கு நானா எந்த ஆசையையும் உண்டாக்கிக்காம, மனசிலே எந்த சஞ்சலமும் சலனமும் இல்லாம இருக்க விரும்புறேன். என் மனசை கெடுக்காதே. என்னை வீட்டிலே ட்ராப் பண்ணிடுடி செல்லம் என்றேன்.
லாவண்யா பொய் கோபத்தோடு, போடி என்று தோளில் அடித்தவள், முகத்தில் நீங்காத ஏக்கத்துடன் எழுந்து சரி வாங்க மஹாராணி வீட்டிலே ட்ராப் பண்றேன் என்று கார் சாவியை எடுத்தாள். இருவரும் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டே காரில் வந்தோம்.
லாவண்யா தெரு முனையில் காரை நிறுத்தி என்னை இறங்கிக் கொள்ள சொல்ல, ஏண்டி என்று புரியாமல் கேட்டேன். நான் வந்தா டிஸ்டர்ப் பண்ணின மாதிரி இருக்கும். நானும் கொஞ்ச நாள் உன் ஹஸ்பண்ட் கண்ணிலே படாம இருக்கறேன். அதான் எல்லோருக்கும் நல்லது என்றவள் அதில்லாம அவரை பார்க்க எனக்கு கொஞ்சம் வெட்கமாவும் இருக்கு என்றாள்.
வெட்கமா? என்னடி இது புது பழக்கம். நானில்லாதப்ப என் புருசனை வந்து பார்த்து இஷ்டத்துக்கு அனுபவிச்சிருக்கீங்க. சும்மா ஒரு ஆர்வத்திலே தெரிஞ்சுக்கலாமேன்னு கேட்டா அவர் ஒரு வார்த்தை கூட சொல்ல மாட்டேங்கிறார். அவரே அசந்து போற அளவுக்கு அவர் கூட ஆட்டம் போட்டுட்டு இப்ப என்னமோ புதுப் பொண்ணு மாதிரி வெட்கமெல்லாம் படுறே என்றேன் கிண்டலாக.
ச்சீ… போடி… நீ எதையாவது ஞாபகப்படுத்தாதே. நான் கிளம்பறேன்.
என்னடி நீ நெளியுறதை பார்த்தா என்னமோ ஸ்பெஷலா நடந்திருக்கு. இரண்டு பேரும் மறைக்க மறைக்க எனக்கு ரொம்ப ஆர்வமா இருக்கு. ஒழுங்கா என்னெல்லாம் செஞ்சீங்கன்னு சொல்லுடி.
இங்கே கார்லே உட்கார்ந்துட்டு தெரு முனைலேயா? போடி…
அப்ப நீ சொல்ல மாட்டே…
போடி… வேணும்ன்னா நான் உன் வீட்டுக்கு வந்து உன் ஹஸ்பண்ட்டையும் கூட வைச்சுட்டு சொல்லவா?
எதுக்கு திரும்ப ஒரு த்ரீசம்க்கு அடி போடுறியா? போடி… என்னதாண்டி கூத்தடிச்சீங்க அன்னைக்கு. சொல்வியா மாட்டியா?
அம்மு… எனக்கு உண்மையிலேயே கூச்சமா இருக்கு. நீ அவர் கிட்டேயே கேட்டு தெரிஞ்சுக்க.
லாவண்யா நான் அத்தனை கேட்டும் சொல்லாதது எனக்கு வருத்தத்தை விட ஆர்வத்தை அதிகமாக்கியது. இன்று என் கணவரிடம் மிரட்டலாக பேசியாவது அவர் லாவண்யாவுடன் என்ன செய்தார் என்று சொல்ல வைத்து விட வேண்டும் என்று முடிவு செய்துக் கொண்டு காரை விட்டு இறங்கி, லாவண்யாவிடமிருந்து விடை பெற்று வீட்டை நோக்கி நடக்க துவங்கினேன்.
ஆனல் வீடுக்குள் நுழைந்ததும் என் கணவர் என் முகத்தை ஆர்வமாக பார்த்து, வாய்ஸ் மெசெஜ் முழுசா கேட்டியா அம்மு என்று கேட்க, நான் அவரை பார்த்து புன்னகைத்து விட்டு, கேட்டேன், நான் குளிச்சுட்டு வந்து நைட் டிபன் ரெடி பண்றேன். சாப்பிட்டுட்டே பேசலாம் என்றேன். சரி என்றார்.
