நைனா தேவி ஆலயம்:- நைனா மலையின் உச்சியில் அமைந்thuதுள்ள, புனிதத் தளங்களில் ஒன்றான, சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படும் நைனா தேவி ஆலயம், நைனிடாலில் உள்ள ஆலயங்களுள் முக்கியமானதாகும். இங்குள்ள பழங்குடியினர் இங்கு வாக்கு கேட்ட பின்பே காரியங்கலைச் செய்ய தொடங்குகிறார்கள்.
புராணக் கதைகளில்,…. சிதைக்கப் பட்டதாக கூறுப்படும், சக்தியின் உடல் பாகங்களில், சக்தியின் கண் விழுந்தாக கருதப்படும் இந்த இடத்தில் இந்தக் கோயில் எழுப்பப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். ஆலயத்தின் இடது முன் புறம் பெரிய பீபல் மரமும், வலது முன் புறத்தில் அனுமன், மற்றும் கணபதி சிலைகள் அமைந்துள்ளது. கோயிலின் உட் புறம் காளிதேவி அம்மனும், நைனா தேவி அம்மனும் விநாயகப் பெருமானும் முக் கடவுள்களாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள்.
கோயில் பகுதியை நெருங்குவதற்கு முன்பே, காரை நிறுத்தி விட்டு, நடைப் பயணமாக,….. ஜில் என்ற காற்று மேனியை வருட, இயற்கை எழில் சூழ்ந்த கரடு முரடான மலைப் பாதையில், பல் வேறு மொழி, இன மனிதர்களோடு நடைப் பயணமாக நடந்து சென்று கோயிலை அடைந்தோம்.
கோயில் கோபுரத்தைக் கண்களில் கண்டதும் பல் வேறு ஆசைகளையும், நினைவுகளையும் மனதில் அசை போட்டபடி வந்தவர்கள், அவற்றை மறந்து, துறந்து அங்கே இருந்த தெய்வங்களைப் பற்றியும் தங்களது வேண்டுதல்களையும் நினைத்து கடவுள்களை வேண்டியபடி வந்தனர்.
அகலமான விசாலமான படிக் கட்டுகளில் பக்தியுடன் ஏறி, ஆலயத்தின் முன்னே வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்த கணேசனை முதலாவதாக வணங்கி, கோயிலின் நீண்ட உட்பிரகார மண்டபத்துக்குள் நுழைய…. வேண்டுதலை முடித்து திரும்பிச் செல்வோரின் பேச்சுகளைக் கேட்க முடிந்தது.
இங்கே வந்து வேண்டிகிட்டா, செய்ய நினைக்கிற காரியம், எந்தத் தடங்களும் இல்லாம நினைச்ச காலத்துக்குள்ள நல்ல படியா முடியுமாம். நினைக்கிற காரியம் பூர்வ ஜென்ம பாவங்களாலே நிரைவேறாதுன்னாலும் அதுக்கும் அறிகுறிகளை கடவுள் காமிச்சிடுமாம்.
அப்படியா?
அதுவுமில்லாம, கோயிலுக்கு வெளியே சிவப்பும், வெள்ளையுமா மலர்கள் பூத்து குலுங்குற மரம் ஒன்னு பாத்தோமே. அதுக்கு அடியில வேண்டுதல் செஞ்சவங்க போய் கை ஏந்தி நின்னு வேண்டிகிட்டா, அப்பவே நாம நினச்சு வேண்டிகிட்டது நிறைவேறுமா… நிறைவேறாதான்னு பூ மூலமா கடவுள் காட்டிக் கொடுத்துடுமாம்.’

Supr next week please 5
Hi radha
Bro nice story but copy paste panitega next part kjm repeated wrds ellama poduga
Next part pls
Next part