கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 8 12

மேற்கொண்டு சண்டை போடாம இருந்தா சரி; இப்ப மல்லிகா தன் புள்ளை கிட்ட தனிமையில ஏதாவது பேச நினைக்கலாம். நான் இங்கே அம்மவுக்கும் புள்ளைக்கும் நடுவுல நிக்கறது சரிதானா? சரியான நேரத்துல ரெண்டு பேரும் உள்ள வந்துட்டாங்க; நான் அவனுக்கு உதட்டுல முத்தம் குடுத்ததை கண்டிப்பா அவங்க பாத்து இருப்பாங்க; இந்த நேரத்தில இதை ஒரு பெரிய பிரச்சனையா ஆக்கி வெளியே போய் இவன் அம்மா கூச்சல் போட்டா என் மானம் கப்பல் ஏறிடும்? ஆனா இப்ப இதுக்கு என்ன பண்றது? எங்க ரெண்டு பேருக்கும் நேரமே சரியில்லை. சுகன்யா தன் மனதுக்குள் தன்னையே நொந்து கொண்டாள். அடியே சுகன்யா, நீ செல்வாவுக்கு முத்தம் குடுத்ததை யார் பாத்தா உனக்கு என்னடி; என்னைக்கு இருந்தாலும் இவன்தான் உன் புருஷன்னு அவன் கிட்ட காலையில போன்ல சொன்னே. எவ்வளவு நாளானாலும் காத்திருந்து அவன் கையாலதான் தாலி கட்டிக்குவேன்னு சொன்னே. அப்படின்னா இந்த மல்லிகாதான் உன் மாமியார், எதிர்ல நிக்கற நடராஜன்தான் உன் மாமனார்; இந்த ரெண்டு பேரும் செல்வாவுக்கும் உனக்கும் ரொம்ப ரொம்ப வேண்டியவங்க தானே. நீ முத்தம் குடுக்கறதை உனக்கு வேண்டியவங்க தானே பாத்தாங்க; பாத்தா பாத்துட்டு போறாங்கடி; இதைப் பாத்ததுக்கு அப்புறமாவது நம்ம புள்ளைக்காக இவ இப்படி உருகிப் போறாளேன்னு மல்லிகா மனசு மாறாதா? நீ ஒண்ணும் திட்டம் போட்டுப் பண்ணல; அவங்க உள்ளே வர நேரத்துக்கு, அவன் உதட்டை கவ்வல. மல்லிகா எதாவது கேட்டா; உன் ஆசை புள்ளைதான் முத்தம் குடுன்னு உதட்டை காமிச்சான்; ஆசையா கேக்கறவனுக்கு நான் எப்படி மாட்டேங்கறதுன்னு தீத்து சொல்லு. நீங்களும் ரெண்டு புள்ளையை பெத்த பொம்பளைத்தானே உங்களுக்கு உங்க புள்ளையோட அவஸ்தை புரியலயான்னு, சிரிச்சுக்கிட்டே கேளுடி. மீனா சொன்ன மாதிரி இவனுக்காக நான் எல்லாத்தையும் ஓடி ஓடி பண்ணிட்டு, இப்ப நான் ஏன் வெளியிலே போவணும்? நான் ஆசை பட்டவன் அடி பட்டு ரோடுல கிடக்கிறானே; என்ன ஆகுமோ; ஏது ஆகுமோன்னு மனசு குழம்பி கிடந்தப்ப, நாலு பேரு நிக்கற இந்த இடத்துல எதாவது பிரச்சனை ஆயிட வேணாமேன்னு, உன் புள்ளையை உனக்கு முழுசா திருப்பிக் குடுக்கறேன்னு மடத்தனமா உளறிட்டேன். நான் ஒரு பைத்தியக்காரி; எமோஷனல் ஆயிட்டா என்னப் பேசறோம், ஏது பேசறோமுன்னு தெரியாம உளறிடறேன். காரணம் எதுவும் கேக்காதே, உன்னை நான் மருமகளா ஏத்துக்க எனக்கு இஷ்டமில்லேன்னு நாலு பேரு எதிர்ல என் மூஞ்சியிலே அடிச்சாங்களே இவங்களை எப்படி என் வழிக்கு கொண்டு வரது? முகத்தைப் பாத்தா அப்பாவியாதான் தெரியறாங்க; ஆனா சொல்லால அடிச்சாங்களே; என்னைப்பாத்து ஏன் பயப்படறாங்க; செல்வா என்ன சின்னக்குழந்தையா? நான் என்ன அவங்க புள்ளையை தூக்கிக்கிட்டு எங்கயாவது கண்காணாத இடத்துக்கா ஓடிட போறேன்? அவங்க புள்ளையை நான் சந்தோஷமா நான் வெச்சுக்கமாட்டேனா? அப்படி என்ன பெரிய தப்பு நான் பண்ணிடேன்? என்னை மருமகளா ஏத்துக்கமாட்டேங்கிறாங்க?அவங்க பார்வையில அவனை நான் காதலிச்சதே தப்பா? உன் புள்ளையை நான் காதலிக்கப்போறேன்; நீங்க பர்மிஷன் குடுங்கன்னு நான் கேட்டிருக்கணுமா? குற்றவாளிக்கு அவ பண்ண தப்பைக்கூட சொல்லாம தண்டிப்பேங்கிறது என்ன நியாயம்? இதைத்தானே செல்வா அன்னைக்கு எங்கிட்ட கேட்டான்” இந்த பாவி செல்வா கூட சேர்ந்து, அவன் எப்படி குழம்பி குழம்பி பேசுவானோ, அப்படியே அவனை மாதிரி நானும் ஆயிட்டேன்; ஆனா இவன் தங்கச்சி மீனா என்னா லாஜிக்கா பேசறா? வெளியில ஒடின என்னை ரெண்டு நிமிஷத்துல உள்ள கூப்பிட்டுக்கிட்டு வந்துட்டாளே; அவகிட்டத்தான் நான் பேசறதுக்கு ட்ரெயினிங்க் எடுக்கணும் போல இருக்கு; அவள் உதடுகளில் மெல்லிய புன்னகை விரிந்தது. காலையிலேருந்து, இவனை நான்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு, போலீஸ் இன்ஸ்பெக்டர்லேருந்து, ஆஸ்பத்திரி டாக்டர் வரைக்கும் எல்லோர்கிட்டவும் தண்டோரா போட்டுட்டு, இப்ப உன் உரிமையை நீ ஏண்டி விட்டுக்குடுக்கறே? இங்கேயே நீ நில்லு. மல்லிகா என்ன பேசினாலும், வாயை மூடிகிட்டு பொறுமையா கேட்டுக்கோ. அவளுக்கு பதில் எதுவும் சொல்லாதே. எதுவா இருந்தாலும் இனிமே நீ நடராஜன் கிட்ட பேசு. அவரு பார்வையே சொல்லுது. அவருக்கு உன்னைப் பிடிச்சுப்போச்சுன்னு! சுகன்யா கட்டிலுக்கு மறுபுறம் நின்று கொண்டிருந்த நடராஜனிடம் சென்றாள். மல்லிகாவின் பார்வை சுகன்யாவை பின் தொடர்ந்தது. சுகன்யா ஓரக்கண்ணால் மல்லிகாவைப் பார்த்தவாறு பேசினாள்.