கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 8 12

சுற்றி நின்றவர்கள் வாயடைத்து நிற்க சுகன்யா ஒரு நிமிடம் மல்லிகாவை கூர்ந்து நோக்கினாள்.
“எனக்கு நான் நேசிச்ச என் செல்வா நல்லபடியா பிழைச்சு எழுந்தா போதும் … வேற எதுவும் எனக்கு வேண்டாம் … அவன் உயிரோட இருக்கணும் அதுதான் எனக்கு முக்கியம் … நீங்க கேட்டுக்கிட்ட படி உங்க புள்ளை கிட்ட இந்த நிமிடத்துலேருந்து எனக்கு எந்த உரிமையும் இல்ல … நான் எல்லாத்தையும் விட்டு குடுத்துடறேன். நீங்க நிம்மதியா அவன் கூட இருந்து அவனை பாத்துக்குங்க. கூப்பிய அவள் கைகளை பிரித்து தன் வலது கையை மல்லிகாவின் கையில் வைத்து அழுத்தினாள்.

“அம்மா, மாமா … வாங்க நாம போகலாம் … நாம வந்த வேலை முடிஞ்சு போச்சு …
“ யாரையும் திரும்பி பார்க்காமல் விடுவிடுவென வாசலை நோக்கி நடக்கத்தொடங்கினாள். *** I.C.U வின் கதவை திறந்துகொண்டு ஒரு நர்ஸ் அவர்களை நோக்கி வேகமாக வந்தாள். பேஷண்ட்டுக்கு நினைவு வந்துடுச்சு …. அவருக்கு ப்ளட் குடுத்துக்கிட்டு இருக்காங்க; அவரு சுகன்யா … சுகன்யான்னு முனகறார் … இங்க சுகன்யாங்கறது யாரு? டாக்டர் அவங்களை மட்டும் உள்ளே கூப்பிடறார்…. யாரு அவங்க? அவங்களை சீக்கிரமா உள்ளே அனுப்புங்க … சொல்லிவிட்டு அவள் திரும்பி நடந்தாள்..

சுகன்யா மருத்துவமனையிலிருந்து விருட்டென நடக்க ஆரம்பித்ததும், சுந்தரியும், ரகுவும் அவள் பின்னால் எதுவும் பேசாமல் மவுனமாக அவளைப் பின் தொடர்ந்தார்கள். அவர்கள் போவதை பார்த்துக்கொண்டிருந்த சீனுவுக்கு மல்லிகா மீது தலைக்கு மேல் கோபம் வந்தது; வந்த கோபத்தை அடக்க தன் பற்களை கடித்துக்கொண்டான். மல்லிகாவை அவன் அம்மா என்றுதான் கூப்பிடுவான். அவள் பேசியதை பொறுக்கமுடியாமல், கொஞ்சம் நேரம் பேசாம இருங்கம்மா; இப்படியெல்லாம் பேசற நேரமா இது? அடிக்குரலில் பேசிய அவன், உரிமையுடன் அவள் கையை பிடித்து இழுத்து சென்று சற்று தள்ளி இருந்த நாற்காலியில் அவளை உட்க்கார வைத்தான். மல்லிகா, நடராஜன் இருவருமே அவனைத் தங்கள் வீட்டில் பிறக்காத இன்னொரு பிள்ளையாகத்தான் நினைத்தார்கள். அவன் செல்வாவின் வீட்டிற்கு இரவு பகலென நேரம் காலம் இல்லாமல் வருவான்; குளிப்பான்; சாப்பிடுவான்; தூங்கி, கண் விழித்தெழுந்து திரும்பிப் போவான்.

அந்த வீட்டில் நடக்கும் நல்லது கெட்டது என்று எந்த நிகழ்ச்சியிலும் முதல் ஆளாக நிற்பவன் அவன். அதற்கு மேல் அவனால் அந்த நேரத்தில் மல்லிகாவிடம் வேறு எதுவும் சொல்ல முடியாமல் தன் பல்லைக் கடித்துக்கொண்டு பின்னால் திரும்பிப்பார்க்க, அங்கு தன் கீழுதட்டைக்கடித்துக்கொண்டு கண் கலங்கி நின்று கொண்டிருக்கும் மீனாவைப் பார்த்தான். ஏன் இந்த பொம்பளைங்க எல்லாம் சட்டு சட்டுன்னு எமோஷனலா ஆவறாளுங்க என யோசித்தான். நடராஜன் தன் கைகளைப் பிசைந்துகொண்டு தன் மனைவியை முறைத்தவர், சட்டென விரைந்து சுகன்யாவின் பின்னால் நடந்து கொண்டிருந்த ரகுவின் கையை பிடித்து நிறுத்தினார்,
“சாரி சார் … உங்க கிட்ட நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன் … என் மனைவி பேசினது தப்புத்தான்; ஏன் அப்படி பேசினான்னு எனக்குப் புரியல; இப்ப அவளை எதுவும் கேக்கற நிலைமையில நான் இல்ல; உங்களுக்குப் புரியும்ன்னு நினைக்கிறேன்; புள்ளை அடிபட்டு கிடக்கிறானேன்ற மன வேதனையில, ஏதோ கோபத்துல கன்னா பின்னான்னு அவ பேசினதை மனசுல வெச்சிக்காதீங்க.” சுந்தரியிடம் சென்று,
“அம்மா; என் பொண்டாட்டி கொஞ்சம் முன் கோபக்காரி; ஆனா கெட்டவ இல்லை; முதல் தடவையா நீங்க அவளைப் பாக்கறீங்க, உங்க மனசுல அவளைப் பத்தி ஒரு தப்பு எண்ணம் உருவாகலாம். அவ மனசுல எந்த காரணம் இருந்தாலும், பொது இடத்துல இப்படி நடந்துகிட்டு இருக்கக்கூடாது; நான் இதுக்கு ரொம்ப வருத்தப்படறேன்; நீங்க உங்க பொண்ணு சுகன்யாவை இப்ப திரும்பி போக வேண்டாம்ன்னு சொல்லுங்க … ப்ளீஸ் …” நடராஜன் கெஞ்சலாக பேசினார். சுகன்யா பேரை செல்வா முனகுகிறான், டாக்டர் அவளை கூப்பிடுகிறார் என்று நர்ஸ் சொன்னதை கேட்டதும் மீனாதான் முதலில் சுதாரித்துக்கொண்டு, வேகமாக மருத்துவமனை வாசலை நோக்கி சென்ற சுகன்யாவை நிறுத்த வெளியில் ஓடினாள். சீனுவுக்கும் கோபத்துடனும், ரோஷத்துடனும் போகும் சுகன்யாவை, கெஞ்சி கூத்தாடி அவளை திரும்ப கூப்பிட்டுக்கொண்டு வருவதுதான் முக்கியம், என மனதில் தோன்ற மல்லிகாவை விட்டுவிட்டு மீனாவின் பின்னால் ஓடினான். சுகன்யா, ஒரு மரத்தடியில், கான்கீரிட் பெஞ்சில், தன் நெஞ்சு பதைபதைக்க, தாடைகள் இறுகி, சுருங்கிய கண்கள் கலங்கி, வெறித்த பார்வையுடன், தன் கைப்பையின்
“ஜிப்” பை காரணமில்லாமல் திறப்பதும் மூடுவதுமாக உட்க்கார்ந்திருந்தாள்.