கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 8 12

அவள் தந்தியடிக்க … நடராஜன் அவள் செல்லை வாங்கி … ஹலோ என கத்தி … யாரும் லைன்ல இல்லடி மீனா” … அவர் நடுக்கத்துடன் கூச்சலிட்டார். குளித்துவிட்டு தலையை உலர்த்திக்கொண்டிருந்த மல்லிகா அரையும் குறையுமாக மீனா பேசுவதை கேட்டவள் … என்னாச்சு … அப்பாவும் பொண்ணும் ஆரம்பிச்சிட்டீங்களா உங்க சண்டையை? விஷயம் தெரியாமல் அவள் தன் போக்கில் உளறினாள். மீனா தன் கண் கலங்க அம்மாவின் கையை பிடித்துக்கொண்டு, அம்மா செல்வாவுக்கு ஆக்ஸிடெண்ட் ஆயிடுச்சாம். இப்ப நாம ஆஸ்பத்திரிக்கு போவணும். சுகன்யா ஆஸ்பத்திரிக்கு போய்கிட்டு இருக்காளாம். இப்பத்தான் போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து நீயூஸ் தெரிஞ்சுது.”
“எனக்கு நல்லாத் தெரியுண்டி; அந்த சுகன்யா என் புள்ளையை முழுசா தின்னுட்டுத்தான் மூச்சு விடப்போறா; என் பேச்சை இந்த பாவி மனுஷன் கேட்டாத்தானே? செல்வா கிட்ட சொல்லி அவளை நம்ம வீட்டுக்கு கூப்பிடுவோம். அவகிட்ட ஒரு தரம் பேசி பாருடி; பேசி பாத்துட்டு முடிவெடுக்கலாம்ன்னு ராத்திரி பூரா ஒரே புலம்பல் எங்கிட்ட; எனக்கு புத்தி சொல்றாரு இந்த புத்தி கெட்ட மனுஷன்… இப்பவாது உங்களுக்கெல்லாம் புரிஞ்சா சரிடி … அவ நல்ல அதிர்ஷ்ட கட்டைடி… என் உயிரை எடுக்க பொறந்து இருக்கா” பெண்ணின் கையை உதறியவள் கத்திக்கொண்டே இலக்கில்லாமல் தெருவுக்கு ஓடினாள். அவள் பின்னால் ஓடிய நடராஜன் … மல்லிகா … என் புள்ளையை காப்பத்தணும் முதல்ல … ஆஸ்பத்திரியில வந்து நீ சாமியாட ஆரம்பிச்சே … உன்னை அங்கேயே பொலி போட்டுடுவேன் … அங்க வந்து நீ பொத்திகிட்டு சும்மா இருக்கறதா இருந்த எங்க கூட வா … இல்லயா நீ இங்கேயே வீட்டுல கத்திக்கிட்டு கிட … சொல்லிட்டேன் நான் … நடராஜன் பதிலுக்கு கூவினார். மீனா, கார் சாவியை முதல்ல என் கிட்ட எடுத்து குடுத்துட்டு அலமாரியை திறந்து இருக்கிற பணத்தை எடுத்துக்கோ, நான் வண்டியை எடுக்கிறேன்; வீட்டை பூட்டிகிட்டு சீக்கிரமா ஓடிவா.. உங்கம்மாளுக்கு இப்ப எது சொன்னாலும் புரியாது.” நடராஜன் லுங்கியிலிருந்து பேண்ட்டுக்கு மாறினார். தலையில் கையை வைத்துக்கொண்டு பிரமை பிடித்தவள் போல எங்கேயோ பார்த்துக்கொண்டு, தெரு படிக்கட்டில் உட்கார்ந்திருந்த மல்லிகாவின் தோளைப் பிடித்து இழுத்த மீனா,
“அம்மா, வண்டியில ஏறும்மா என இழுத்து பின் சீட்டில் உட்க்காரவைத்து கதவை அடித்து மூடினாள். வண்டி கிளம்பியதும், செல்லை எடுத்து செல்வாவின் ஃப்ரெண்ட் சீனுவை கூப்பிட்டு விஷயத்தை சொல்லி நேராக ஹாஸ்பெட்டலுக்கு வரச்சொன்னாள்.
“மீனா இப்ப ஏம்மா எல்லாருக்கும் போன் பண்ணி கலவரப்படுத்திகிட்டு இருக்கே?”
“இல்லப்பா … நமக்கு அண்ணன் நிலைமை என்னன்னு சரியா தெரியலை; உதவிக்கு கூட ஒரு ஆம்பிளை இருக்கறது நல்லது தானேப்பா; அதுவும் இல்லாம செல்வாவுக்கு ரொம்ப ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட் அவன், அவனுக்கு சொல்லலன்னா அவன் அப்புறமா வீட்டுக்கு வந்து சண்டை போடுவான்.
“ அந்த இக்கட்டான நேரத்திலும் நடராஜன் தன் மகளின் புத்திசாலித்தனத்தைப் பார்த்து மனதுக்குள் சிலாகித்து கொண்டு பக்கத்தில் உட்க்கார்ந்திருந்த தன் பெண்ணின் கையை அழுத்தி சிரித்தார்.
“அப்பா நீங்க வண்டியை கவனமா ஓட்டுங்கப்பா” அவள் சுரத்தில்லாமல் அவரைப்பார்த்து முறுவலித்தாள். *** சங்கர் வண்டியை நிறுத்தியதும் சுகன்யா பாய்ந்து ஓடினாள். மூச்சிரைக்க ரிசப்ஷனில் செல்வாவின் பேரை சொல்லி விசாரிக்க, அங்கிருந்த ராமச்சந்திரன்
“மெதுவாம்மா … நீ யாரு … உன் பேரு என்ன?”
“நான் சுகன்யா” தான் யார் என அவள் சொல்ல அவர் அவளை ட்யூட்டி டாக்டரிடம் அழைத்து சென்றார்.
“செல்வாவுக்கு சீரியஸா ஒண்ணுமில்லையே சார்” சுகன்யா கேட்டுக்கொண்டிருக்கும் போது சீனுவும் பதைபதைப்புடன் அங்கு வந்து சேர்ந்தான்.

“ஃப்ர்ஸ்ட் எய்ட் குடுத்தாச்சு. இப்போதைக்கு ஒண்ணும் சொல்ல முடியாதும்மா. பேஷண்ட்க்கு இன்னும் நினைவு வரல. பையன் ஹெல்மெட் போட்டிருந்ததால தலையில காயம் அதிகமில்லை. ஆனா ஹெல்மெட் உடைஞ்சு தலையில காதுக்கு பக்கத்துல ஆழமா குத்தி ப்ளட் லாஸ் ஆகியிருக்கு. காயத்துக்கு எக்ஸ்டர்னலா ஸ்டிச் போட்டாச்சு. ரெண்டு யூனிட் ப்ளட் ஏத்தியிருக்கோம். இப்ப ப்ரெய்ன் ஸ்கேன் நடந்துகிட்டு இருக்கு. முதல்ல ஸ்கேன் முடியட்டும். மத்தபடி உடம்புல அங்கங்க ஸ்க்ராட்ச்சஸ் இருக்கு. பையன் முழிச்சதுக்கு பின் டீடெயில்லா செக் பண்ணாத்தான் எதுவும் சொல்ல முடியும். அப்புறம் தான் மேற்கொண்டு என்ன பண்றதுன்னு முடிவு செய்யமுடியும்.
“ அவர் தன் தோள்களை குலுக்கிக்கொண்டு எழுந்தார்.