கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 8 12

“உங்க எல்லோரையும் எங்களுக்குப் பிடிச்சிருக்கு; பத்து நாள் போகட்டும்; சுகன்யாவோட அப்பாவைப்பத்தி உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன். இந்த விஷயத்துல உங்க அம்மாவுக்கு கொஞ்சம் மனக்குறை இருக்கலாம்ன்னு தோணுது. இதைத் தவிர வேற எந்த மனக்குறை அவங்களுக்கு இருந்தாலும் அதை சரி பண்ண நாங்க முயற்சி பண்றோம்.
“நீங்க உங்க அம்மாவை சமாதானம் பண்ணுங்க; முறைப்படி எல்லோருமா ஒரு தரம் எங்க வீட்டுக்கு வந்து இவளைப் பாருங்க; உங்கப்பா கிட்ட நான் பேசணும்னு நீங்க விருப்பப்பட்டா அவரிடம் நான் பேசத் தயார். நீங்க இருக்கற நிலைமையில அவருகிட்ட உங்க கல்யாண விஷயத்தை பேசினா அது நல்லாயிருக்காது; எங்க வீட்டுப்பொண்ணு உங்களுக்காக மனசுல தவிப்போட காத்துகிட்டு இருக்காங்கறதை ஞாபகத்துல வெச்சுக்குங்க. என்னக்கா; வேற ஏதாவது நீ சொல்லணும்னு நினைக்கிறியா?” இதமாக பேசியவர் அவனைப் பார்த்து புன்னகைத்தார்.”
“இவங்க ரெண்டு பேரும் சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருந்தா, அதுவே எனக்குப்போதும்” சுந்தரி தன் குரல் தழுதழுக்கப் பேசியவள், பக்கத்தில் நின்றிருந்த சுகன்யாவின் தலையை ஆசையுடன் வருடினாள். சுகன்யா தன் மனம் விகசிக்க தன் அம்மாவையும் செல்வாவையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தாள். செல்வா, சுகன்யாவை தன் கண்களால் தன்னருகே வரும்படி அழைத்தான். அவள் வலது கையை தன் கையால் எடுத்து தன் மார்பில் வைத்துக்கொண்டு அவர்கள் இருவரையும் நோக்கி முறுவலித்தான்.
“இது போதும் தம்பி” சொல்லியவாறு ரகு எழுந்த போது டாக்டர் மாதவனும், நடராஜனும் அறையினுள் நுழைந்தார்கள். செல்வா, உங்களுக்கு நான் ஒரு இஞ்சக் ஷன் போடறேன், பத்து நிமிஷத்துக்கு அப்புறம் உங்களுக்கு நல்ல தூக்கம் வரும், உடல் வலியும் குறையும் … ம்ம்ம் … சொல்லிக்கொண்டே அவன் வலது கையில் ஊசியை குத்தி மருந்தை செலுத்தினார். *** நடராஜன் சார், இன்னைக்கு சாயந்திரம் நான் ஊருக்கு கிளம்பறேன். சுகன்யா அவளால் முடிஞ்ச வரைக்கும் இங்க உங்களுக்கு உதவியா இருக்கணும்னு விருப்பப்படறா … நீங்க அதை அனுமதிக்கணும். தம்பி சுகமாயி வீட்டுக்கு வரட்டும். அதுக்கப்புறம் ஒரு தரம் நீங்க எனக்கு போன் பண்ணுங்கவீங்கன்னு எதிர்பாக்கிறேன். போயிட்டு வரோம் … மல்லிகாவிடமும், அவள் பக்கத்தில் நின்ற மீனா மற்றும் சீனுவிடமும் பொதுவாக கை கூப்பினார்.
“நல்லதுங்க; உங்களைப் பாத்ததுல எனக்கு ரொம்ப மகிழ்ச்சி; போய்ட்டு வாங்க; நீங்களும் போன் பண்ணுங்க … சீனு, நம்ம வண்டி வெளியில பார்க்கிங்க்ல இருக்கு; நீ இவங்களை அவங்க வீட்டுல ட்ராப் பண்ணிட்டு வந்துடறியா? … கார் சாவியை அவனிடம் நீட்டினார். சுந்தரி நடராஜனைப் பார்த்து கை கூப்பியவள், மல்லிகாவின் அருகில் சென்று அவள் கையை தன் கையில் எடுத்துக்கொண்டாள்.
“நம்ம பசங்க ஒருத்தருக்கு ஒருத்தர் பரஸ்பரம் ஆசைப்பட்டுட்டாங்க. நல்லது சீக்கிரமா நடந்து அவங்க சந்தோஷமா இருக்கணும்ங்கறது என் ஆசை.”
“குறையே இல்லாதவங்கன்னு யாரும் இந்த ஊர்லே இல்லே; சுகன்யாவும் உங்க பொண்ணுதான். ஏதாவது ஒரு குத்தம், குறையை, நீங்க அவ கிட்டப்பாத்து இருக்கலாம்; நீங்க அதை தாராளமா அவகிட்ட சுட்டிக்காமிக்கலாம்; அவ தன்னை நிச்சயமா திருத்திக்குவா; கண்டிப்பா நீங்க எங்க வீட்டுக்கு வரணும்; உங்களை நான் எதிர்ப்பார்த்துக்கிட்டே இருப்பேன். இப்ப நான் போய்ட்டு வரேங்க.” சுந்தரி புன்னகையுடன் நடக்க ஆரம்பித்தாள். ***