கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 8 12

“உன்… உன்ன்னை …. உன்னைப்பாக்க வரும் போது … அவன் ட்ரக்கால மோதிட்டான் சுகு” கஷ்டப்பட்டு பேசிய அவன் முகத்திலும் உதட்டிலும் வலி அப்பட்டமாக தெரிந்தது. உணர்ச்சி மிகுதியால் தொடர்ந்து பேச முடியாமல், அவன் தன் கண்களை மூடிக்கொண்டான். கண்ணோரம் கண்ணீர் வழிந்து கன்னங்களை நனைத்தது. சுகன்யா விருட்டென அவனை நெருங்கி அவன் கண்களைத் தன் கைகளால் துடைத்தாள். தன் மன உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் சட்டென அவன் நெற்றியில் தன் மெல்லிய உதடுகளை பதித்தாள். மூடியிருந்த அவன் இமைகளில் மென்மையாக முத்தமிட்டாள். செல்வா தன் விழிகளை மீண்டும் திறந்து சுகன்யாவின் முகத்தினை உற்று நோக்கினான்.
“அழாதேடா செல்வா, உனக்கு ஒண்ணுமில்லே … தலைக்கு வந்தது தலைப்பாகையோட போயிடுச்சி.” உணர்ச்சி மிகுதியால் பொங்கி பொங்கி எழுந்த அவன் மார்பை நீவி விட்டாள்.
“நான் தான் உன்னைப்பாக்கறதுக்கு ஓடி வந்துட்டேனே. ராஜா நீ எழுந்துக்கறவரைக்கும் நான் உன் பக்கத்துல இருக்கறேண்டா. நீ அழாதேடா செல்லம் … நீ அழுதா என்னால தாங்க முடியாதுடா; அவன் காதில் முணுமுணுத்தவாறு அவள் அவனுடன் சேர்ந்து தன் உதடுகள் துடிக்க ஓசை எழுப்பாமல் அழ ஆரம்பித்தாள். செல்வா மீண்டும் மெல்ல கண் திறந்து அவளை நோக்கி தன் உதடுகளை குவிக்க, சுகன்யா அவன் முகத்தின் மேல் குனிந்தாள். குனிந்தவள் தன் உதடுகளால் அவன் உதட்டில் அழுத்தி முத்தமிட்டு நிமிர, நடராஜனும் மல்லிகாவும் உள்ளே நுழைந்தார்கள். அவர்களைப் பார்த்தவுடன், அவன் மார்பில் சரிந்து கிடந்த தன் துப்பட்டாவை அவசரமாக எடுத்து தன் தோளில் போட்டுக்கொண்டாள். நடராஜனும், மல்லிகாவும் ஒருவரை ஒருவர் அர்த்தத்துடன் பார்த்துக்கொண்டார்கள்.

“ம்மா … இவ .. இவதான் என் சுகன்யாம்மா … அவகிட்ட நீ பேசிப் பாரும்ம்மா, அவ எவ்வள நல்லவன்னு உனக்கு புரியும்.” அவனால் மேற்கொண்டு பேசமுடியாமல் கண்களை மூடிக்கொண்டான். அவனுக்கு நெற்றியும் தலையும் விண்விண்ணென்று தெறிப்பது போலிருந்தது. நடராஜன் அவன் படுக்கையை நெருங்க,
“அப்ப்பா உடம்பெல்லாம் வலிக்குதுப்பா,” அவன் தன் உடலை நிமிர்த்த முயன்றான். நடராஜன் தன் மனதில் அவன் படும் வலியை உணர்ந்தார். மகன் படும் அவஸ்தையையும், வேதனையையும் பார்க்க முடியாமல் மல்லிகா தன் முகத்தில் வேதனையுடன் அவன் வலது கையை மெதுவாக வருடினாள். நடராஜன் அமைதியாக செல்வாவின் முகத்தைப் பார்த்தார். தன் கண்களால் அவனுக்கு ஆறுதல் சொன்னார். பின் அவர் பார்வை படுக்கைக்கு மறு புறம் நின்றிருந்த சுகன்யாவின் மீது படிந்து அவள் முகத்தில் நிலைத்து நின்றது. இந்த பொண்ணு பார்க்க லட்சணமா அழகா இருக்கா. வெளியில நிக்கற ரெண்டு பேரும் மரியாதைப்பட்டவங்களா தெரியறாங்க. என் பொண்டாட்டி பேசினப் பேச்சுக்கு எவனாயிருந்தாலும் இன்னேரம் இங்க ஒரு ரகளையே பண்ணியிருப்பான். மல்லிகா மனசுக்குள்ள அப்படி என்னத்தான் இருக்குன்னு தெரியலை. ராத்திரி நான் சொன்னதுக் கெல்லாம் சரின்னா. இப்ப இங்க வந்து துள்ளிக்குதிக்கிறா. அவங்க ரெண்டு பேரும் அமைதியா இந்த பொண்ணு சொன்ன ஒரு வார்த்தைக்காக, பேசாம அவ பின்னாடி போனாங்களே? எதுக்காக போனாங்க; என் புள்ளையை அவங்க பொண்ணு விரும்பறாங்கற ஒரே காரணத்துக்காகத்தானே? சுகன்யாவை முன்ன பின்ன தெரியாது அந்த டாக்டருக்கு; அந்த மனுஷன் இவளை மனம் விட்டு பாரட்டி பேசிட்டு போறார். நம்ம பையனுக்கு இவளை விட பொருத்தமானவ எங்கே கிடைக்கப்போறா? இவதான் என் மருமக; அவர் தன் மனதில் அக்கணமே முடிவு செய்துவிட்டார். அவர் மனதில் ஓடும் எண்ணங்களை அறியாமல் மல்லிகா மவுனமாக தன் மகனின் கையை தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். நடராஜனின் தீர்க்கமான பார்வையை சந்திக்கமுடியாமல் சுகன்யா தன் தலையை தாழ்த்திக்கொண்டு, தன் மனதுக்குள் யோசிக்க ஆரம்பித்தாள். வெளியில நடந்தது தெரியாம என்னை இவன் தன் அம்மாக்கிட்ட அறிமுகம் பண்ணி வெக்கிறான். அவங்களை எங்கிட்ட பேச சொல்றான். அவங்க மொத்தமா கூட்டிப் பெருக்கி எங்க ரெண்டு பேரு கதையையும் முடிச்சிட்டாங்கன்னு இவனுக்கு எப்படித் தெரியும். தன் மகனை என்னிடம் முழுசா விட்டுக் குடுத்துடுன்னு சித்த முன்னாடி சொன்ன மல்லிகா, நிச்சயமாக என்னிடம் இப்ப சமாதானமா பேசப் போறது இல்லை.